Aambal Magazine - ஆம்பல் சஞ்சிகை » Women

தோல் அழகு
சுகமான வாழ்வே மனிதனுக்கு நிரந்தரமான அழகைக் கொடுக்கும். சுகத்தோடு அழகாக இருப்பதற்கு ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னைத்தான் காதலிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தன்னைக் காதலிப்பவர்களால் தான் தன் உடலைப் பாதுகாக்க முடியும். மனித உடலின் பாதுகாப்பிற்கு தோல் மிகவும் அவசியம். இதனை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை .

உடலின் பாதுகாப்பிற்காக அதிகமாக உழைப்பது தோலே. சாதரண ஒரு மனிதனின் உடல் ஏறக்குறைய 2 சதுர மீற்றர் தோலால் மூடப்பட்டுள்ளது . தோல் எமதுடலை எந்நேரமும் கடும்பனி, கொட்டும்மழை, வீசும்காற்று, எரிக்கும் வெயில்  போன்ற இயற்கை காரணிகளில் இருந்து காக்கின்றது. மேற்குலக நாடுகளில் நிறைந்திருக்கும் தூசிலும், பொலூசனிலும் இருந்து காக்கின்றது. தோல் மிகவும் அற்புதமாக தன்னைத் தானே எப்போதும் புதுப்பித்துக்கொள்ளவதோடு  தூசிலும் காற்றிலும் இருக்கும் நோய்க்கிருமிகள் எம்மைத்தாக்காது இடைவிடாது தடுக்கின்றது. நாம் நம் தோலில் ஏற்படுத்திக்கொள்ளும் வெட்டுக்காயம், தீக்காயம், கீறல் போன்றவற்றைக்கூட புதுத்தோலை உண்டாக்கி மாற்றுகின்றது. எனவே அதனைப் பேண வேண்டியது எமது பெறுப்பாகும்.

தோலில் வெளித்தோல் (Epidermis) உட்தோல் (Dermis) என இரண்டு அடுக்குகள் உண்டு. வெளித்தோலுக்கு நீர் மிகவும் அவசியம். தோலிலுள்ள நீரின் அளவு குறைந்தால் தோல் வறண்டு சுருக்கங்கள் ஏற்படுவதோடு வெடித்து செதில் போல் உரியவும் செய்யும். இதனைத் தடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். அதனால் தோல் பொலிவாவதோடு மலச்சிக்கலும் நீங்கி முகப்பரு உண்டாவதும் குறையும். தோலுக்கு மட்டுமல்லாமல் எமது உடல் உறுப்புக்கள் யாவும் ஒழுங்காக தொழிற்படவும் நீர்அவசியம் வேண்டும்.

உட்தோலில் இருக்கும் ஒருவகை புரதப்பொருள்(Collagen ) தோலின் மீள்சக்திக்கு  (Elastic ) உதவுகின்றது. உட்தோலிலேயே இரத்தக்குழாய்கள், நரம்புமுடிவுகள், மயிர்வேர்கள், வியர்வைச் சுரப்பிகள் எல்லாம் இருக்கின்றன. வெளித்தோலின் ஈரத்தன்மைக்காகப் பூசும் எந்தவொரு கிறீமும் லோசனும் உட்தோலைச் சென்றடைவதில்லை. நீங்கள் சத்துள்ள உணவுகளை உண்ணாது கொழுப்புள்ள உணவுகளை உண்டாலோ அல்லது உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அதற்கு தக்கபடி உட்தோல் பாதிக்கப்படும்.எனவே மரக்கறிவகைகளையும் பழவகை களையும் நன்றாகச்சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள அன்டி ஒக்சிடன்ஸ் (Antioxidants ) உங்கள் தோலை மென்மையாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருப்பதோடு தோலில் வரக்கூடிய கான்சரையும் தடுக்கும்.

உங்கள் தோலின் அழகிற்கு

சுத்தமான தண்ணீரை
நிறையக் குடியுங்கள்.

நன்றாகக் குளியுங்ககள்.
உடலுக்கு உகந்த உணவுகளை
உண்நுங்கள்  ஒவ்வாத
உணவுகளை தள்ளுங்கள்.

நல்ல காற்றோட்டமுள்ள
சுத்தமான இடத்தில் நித்திரை
கொள்ளுங்கள்.

அதிக சர்க்கரை உண்பதால்
தோலில் சுருக்கம் ஏற்பட்டு
உங்கள் வயதைக்
கூட்டிக்காட்டும்.

தோல் மிகமென்மையானது.
உடலிலுள்ள ஊத்தையைப்
போக்குகின்றோம் எனக்கூறிக்
கொண்டு மிகக்கரடுமுரடான
பொருளால் தோலைத்
தேய்க்காதீர்கள். அது
தோலைக்கீறி காயப்படுத்தி
எரிவை உண்டாக்கும்.

கோடை பனி என்று இல்லாது
எப்பவும் தோல் வறட்சி
யடையலாம். அதனைத்தடுக்க
தரமான (Moisturising )
கிறீம், லோசன் பாவித்து தோலின்
ஈரத்தன்மையை பேணுங்கள்

பலவகையான புதுப்புதுத்
தயாரிப்புகளை ஒரேநேரத்தில்
பாவிப்பதை தவிர்க்கவும்.

அக அழகு
ஒருவரின் அக அழகை முகமே காட்டுகின்றது. எனவே முகத்தை அழகுடன் வைத்தக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முகத்திலும் ஏதோ ஓர் அழகும், கவர்ச்சியும் இருக்கதான் செய்கின்றது. அவரவர்களுடைய சிகையலங்காரத்தை பொறுத்து அழகு கூடும், குறையும். மிகப் பெரிய காது உள்ளவாகள் காதை தலை முடியால் மறைத்து தலையலங்காரம் செய்ய அவர்கள் அழகுகூடும். இப்படிச் சின்னச் சின்ன மாற்றங்களால் உங்கள் அழகை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம்.

அலங்காரம் என்பது ஒரு தனிப்பெரும் கலை. நாம் நம்மை ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. சாதரணமாக வீட்டில் இருப்பது போல் வேலைக்குச் செல்ல முடியாது. அதுபோல் மணப்பெண் அலங்காரத்தோடும் போக முடியாது. எனவே நாம் எங்கு செல்கின்றோம் என்பதைப் பொருத்தே எமது ஒப்பனை அமைய வேண்டும்.முக அமைப்பிற்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு ஒப்பனை இருக்க வேண்டும். ஒப்பனை செய்திருக்கின்றோம் என்பதே தெரியாதபடி, மிக இயல்பாக முகம் இருப்பது போல் தெரியவேண்டும்.ஒப்பனைப் பொருட்களை வாங்கும் போது உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக, எண்ணெய்ப் பாங்கானதா, வறண்டதா என்பனவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கின்றது என்பதற்காக உங்கள் சருமத்திற்கு பொருத்தம் இல்லாதவற்றை வாங்காதீர்கள். அதனால் சருமம் பாதிக்பப்படும். முதலில் கையில் பூசி அலர்ஜியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அழகு சாதனப் பொருட்கள் நாட்செல்ல நாட்செல்ல பழுதடைவதால் அவற்றை வாங்கும் பொழுது சிறய அளவில் வாங்குவது நல்லது. முக அலங்காரத்தோடு இரவில் நித்திரைக்குச் செல்லக் கூடாது. படுக்கைக்குப் போகும் முன் முகத்தை நன்கு கழுவி ஒப்பனையை போக்கிக் கொள்ளவும். முகத்தில் பருக்கள் வருவதற்கு முகவலங்காரப் பொருட்களும் ஒரு காரணமாகும். முகத்தில் பருக்கள் வருவதை தடுப்பதற்கு முகத்தை கழுவித் துடைத்த பின் உறங்குவது உகந்ததாகும்.

அக அழகு என்பது முக அழகு மட்டும் சம்பந்தப்பட் விடயம் அல்ல. உங்கள் நடை, உடை நாகரீகத்துடன் பொதறிவு, நளினம், அன்பு, பண்பு  எல்லாம் சேர்ந்த ஓர் அரிய கலவையே அக அழகாகும். நன்கு வயது முதிர்ந்த பாட்டிகள் பொக்குவாயுடன் சிரிப்பதே மனதைக் கொள்ளை கொள்ளும் அழகாக இருக்கின்றதே! அது ஏன். அன்பிலும், பண்பிலும் முதிர்ந்ததினால் அவர்கள் அழகாய் இருக்கிறார்கள். ஆகவே அன்பும், பண்பும் எம்மைவிட்டு அகலாது.பார்த்துக்கொண்டால் அக அழகு தானாகவே தெரியும்.

இயற்கை அழகு
ஒன்றை நாம் அழகு என்று கூறும்போது அப்பொருள் பற்றிய ஓர் உயர்ந்த கருத்தை மற்றவர்க்கு நாம் சிபார்சு செய்கின்றோம்.

அழகு என்றால் என்ன? அதன் வரையறை என்ன? எம்கண்ணுள் கரைந்து எண்ணத்திரையில் விரியும் கவர்ச்சியா அது? எந்த அளவுகோலை வைத்து அழகை அளப்பது? அழகு பார்ப்பவர் மனதைக் கவர்ந்து அவரை மகிழ்ச்சி அடையச்செய்கின்றது. ஒருவர் கண்ணுக்கு அழகாகத் தெரிவது மற்றவர் கண்ணுக்கு அழகற்றதாகத் தோன்றாது. எனவே உலகில் உள்ள எவருமே அழகிற்கு வரைவிலக்கணம் கூறிவிட முடியாது.

ஒருவரைப் பார்த்து அழகானவர் என்றுசொல்லும் போது அவர் ஆரோக்கியமானர் என்பதையும் சுட்டாமல் சுட்டுகின்றோம். உண்மையில் மனிதரின் வெளியழகு வேறாகவும் உள்ளழகு வேறாகவும் பார்க்கப்படுகின்றது. இவ்விரு அழகும் ஒன்று சேர்ந்திருப்பது மிகமிக அபூர்வம். உலகின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களில் பெரும் பாலானவர்கள் பேரழகுடைய வாகளாக இருக்கவில்லை. எனினும் அவர்களிடம் பெண்மை கலந்த மென்மை இழையோடுவதைக் காணலாம். அந்த அகஅழகே அவர்களின் தனித்துவத்தை மற்றவர்க்கு எடுத்துக்காட்டியது. அதுவே உலகை அவர்களின் பின் செல்ல வைத்தது. இதனால் அழகின் உண்மைத் தன்மை எது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

மனித அழகிற்கும் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் என்ன தொடர்பு? ஒரு சிற்பி வடிக்கும் சிற்பத்தின் ஒவ்வொரு உறுப்பும் நேர்த்தியாகவும், கணிதமுறைப்படி அழகாகவும் கண்ணிற்கு விருந்தாகவும் இருந்தால் அதனை மிக அழகான சிற்பம் என்கிறோம். அதுபோல் மனிதரின் ஒவ்வொரு உறுப்புகளின் தனிப்பட்ட அழகுகள் யாவும் சேர்ந்தே உடலின்  முழு அழகையும் உருவாக்கின்றது.

எனவே எமது ஒவ்வொரு உறுப்பையும் அழகானதாக வைத்துக்கொள்ள வேண்டும். எமது உறுப்புகளை அழகு படுத்துவதற்கு முன் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. ‘அழகில் இயற்கை அழகே செயற்கை அழகைவிட நிரந்தரமானது”. இது மனித அழகிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

உங்களிடம் இருக்கும் அழகிற்கு அழகுசெய்ய நீங்கள் என்ன செய்யவேண்டும்? அழகைப்பற்றிய அடிப்படை அறிவு சிறிது இருந்தால் போதும். உங்கள் இயற்கை அழகை நீங்களே மெருகூட்டிக் கொள்ளலாம். முதலில் உங்கள் அழகை நீங்களே எடைபோடப் பழகுங்கள். உங்கள் அழகை மெருகூட்ட எவை நல்லவை எவை தீயவை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் அமைதியாக வேலையற்று இருக்கும் நேரங்களில் உங்களை நீங்களே அலங்கரித்துப் பாருங்கள். உடை என்றாலும் சரி, ஒப்பனை என்றாலும் சரி எப்படி அலங்கரிக்கும் போது நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் எனக் கருதுகின்றீர்களோ அதனை படம் பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி வெவ்வேறு விதமாக அலங்கரித்து எடுத்த படங்களை வைத்து எதில் நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களை அலங்கரிப்பதற்கும் உடை உடுத்துவதற்கும் இருபது நிமிடமே போதுமானது.  அதற்கு மேல் செலவு செய்யவேண்டாம். முதன்முதல் அலங்காரம் செய்பவர் என்றால் அரைமணிநேரம் போதும். உங்களுக்காக நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் ஆரோக்கிய வாழ்விற்கான முதலீடு என்பதை மறவாதீர்கள். எனவே அலங்காரத்திற்கு ஆரோக்கியமான பொருட்களை உபயோகியுங்கள்.

உங்கள் அலங்காரத்தை நீங்களே செய்வதால் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மனநிறைவையும், தன்னம்பிக்கையையும் உண்டாக்கின்றது. உங்கள் அழகைப் பேண உங்களுக்கென்றே ஒரு தனித்துவத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். மற்றவரைப் பார்த்து அவர்போல் அலங்கரிக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள்.

ஒவ்வொருவரினதும் தோலின் தன்மை, தலைமுடியின் தன்மை, முகவடிவம், கண்ணின் வடிவம், உடல் வடிவம், எடை என்பவற்றைப் பொருத்தே அலங்காரங்கள் அமையவேண்டும். நம்மில் பலர் இதைப் புரிந்துகொள்வதில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்து நளினமே என்பதை மறந்துவிடாதீர்கள்.

புற அழகு
மனிதமனம் விசித்தரமானது. அது இயற்கையின் எந்த அழகையும் இரசிக்கின்றது. அழகு என்னும் மாய மந்திரம் உலகில் உள்ள பெண்களை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்குக் காரணம் ஆண்கள். ஆண்கள் பெண்களின் அழகை இரசிப்பதால் அந்தக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்கிறார்கள். அங்கு தமது நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள்.

உண்மையில் ஆண் பெண் என்ற பேதம் அற்று அழகைப்பேண எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். முகப்பருக்களைப் போக்குவது எப்படி? நரையை மறைப்பது எப்படி? தலைமுடியை பாதுகாப்பது முதல் முகம், கை, கால் இவற்றில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்குவது நகங்களைப் பராமரிப்பது என ஒவ்வொருவருக்கும் ஒவொரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கின்றது.

அதற்காக கிழமைக்கு நான்கைந்து என்று அழகு சாதனப்பொருட்களை வாங்கி வீட்டில் அடுக்குகின்றோம். இரண்டு கிழமை பாவித்துவிட்டு அவை சரியில்லை என குப்பைக் கூடைக்குள் போடுகின்றோம், அல்லது “என் சிநேகிதி சொன்னாள் இது சரியிலையாம் அது நல்லதாம்” என்றும் சிலபொருட்கள் குப்பைக் கூடைகளை அடைகின்றன. இந்தச் செயலை நம் பெண்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

மேற்குலகில் வாழும் நாம் அந்தந்தக் கால நிலைக்கு ஏற்றவாறு உடைகளை உடுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். குளிர்கால உடைகளைப் பராமரிப்பதில் நாம் முக்கிய கவனம் எடுக்க வேண்டும். அவை விலை கூடுதாலக இருப்பதோடு, மிகவிரையில் பூஞ்சை மணம் வீசுகின்றன. எனவே அவற்றை காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்க வேண்டும். வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் அவற்றை பாவிக்காத நேரத்திலும் அடிக்கடி வெளியே எடுத்து காயவிடுவதால் அந்த பூஞ்சை மணம் ஏற்படாது தடுக்க முடியும். தயவு செய்து பூஞ்சை மணம் உள்ள ஆடைகளின் மேல் வாசனைத் திரவியங்களை அள்ளித் தெளிக்காதீர்கள். அது பூஞ்சை மணத்தைக் கூட்டும்.

இந்த உலகில் பிறப்பவர்கள் எவருமே நான் இப்படி அழகாக இருக்க வேண்டும் எனக் கேட்டுப் பிறந்ததில்லை. அப்படிக் கேட்டுப் பிறந்திருப்போமேயானால் நாம் அழகை இரசிக்கமாட்டோம். யார் அழகை யார் இரசிப்பது? அழகு நிலையங்களும் உருவாகி இராது.
புற அழகு என்பது மிக முக்கயமானது தான். அதனாலேயே ‘இரக்கப் போனாலும் சிறக்கப் போ” என்ற பழமொழி உருவாகியுள்ளது. பிச்சை எடுப்பதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்ற அழகுணர்க்சி நம் முன்னோரிடம் இருந்திருக்கின்றது.

பிச்சை எடுப்பவரிடம் என்ன அழகு சாதனப் பொருட்கள் கொட்டியா கிடக்கப்போகின்றது? எனவே அவர்கள் எதிர்பாத்த சிறப்பு என்ன? கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டி, குளித்து சுத்தமாக இருப்பதையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். இது போன்ற பல விடயங்களை அழகுணர்ச்சிக்காக நம்மவர்கள் சொல்லிச் சென்றிக்கின்றார்கள்.மிகவும் நேர்த்தியாக அழகுடன் உடையுடுத்தி நளினமாக இருப்பவர்களைக் கண்டால் அவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்க நம் கண்கள் தாவும். அப்படி உடுப்பவரைப்பற்றி ஒரு நல்லெண்ணம் தோன்றும். அவர்கள் கலை உணர்க்சி உள்ளவர்கள் என்றோ, எதையும் நிதானமாகச் செய்பவர் என்றோ நாமே முடிவு செய்து கொள்கின்றோம்.

இதே போல் ஏனோதானோ என்று ஒரு பக்கம் தொங்க வரிந்து கட்டிக்கொண்டு சீலை உடுப்பரைக் கண்டால் பொறுப்பற்றவர் என்று எண்ணத் தோன்றும். இந்த எண்ணம் உண்மையாகவும் இருக்காலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சபைகளிலோ அல்லது நிகழ்வுகளிலோ பங்கேற்கும் முன் உங்களை நீங்களே ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.