மாறும் என்பதைத் தவிர மற்றவை எல்லாம் மாறும் என நம்பும் கன்னி ராசி நண்பர்களே!
உங்கள் ராசிக்கு 4, 7க்குரிய குருபகவான் அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதோடு இரண்டு, நான்கு, பன்னிரெண்டு ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் இப்பருவத்தில் பாசிட்டிவ்-நெகட்டிவ் கலந்தே இருக்கும். இருப்பினும் எதையும் சமாளிக்க முடியும்.
- பண வரவு உண்டு என்பதால் நெருக்கடி நீங்கும்.
- ஆபரண சேர்க்கை, வாகன யோகம் உண்டு. வீடு கட்டும் கனவு பலிக்கும்.
- ரத்த சொந்தங்களிடையே மனவருத்தங்கள் நீங்கி, நெருக்கம் பிறக்கும்.
- தடைபட்டுவந்த காரியங்கள் நல்லபடி நடக்கும். அரசு காரியங்களில் கூடுதல் கவனம் தேவை.
- சுப காரியப் பேச்சுவார்த்தை தொடங்கும்.
- ஆரோக்கியம் வலுப்படும்.
- பயணத்தில் கவனம் அவசியம். வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவு வேண்டாமே.
- பொருட்களையும் பாதுகாக்க வேண்டும்.
- பெண்கள் விட்டுக்கொடுத்துப் பொறுமையாக இருப்பது பல விஷயங்களுக்கு நல்லது.
- காதலை விட, கல்வியில் கவனம் தேவை. திருமணம் விரைவிலேயே வரும்.
- மகளுக்கு மகப்பேறு பார்க்க வேண்டி வரும்.
- ஊழியர்களின் திறமைக்கு மரியாதை கிடைக்கும். டிசம்பர், ஜனவரியில் பலன் எதிர்பார்க்கலாம்.
- வேலை மாற்றம் எனில் நன்கு யோசித்தே முடிவெடுக்க வேண்டும்.
- வணிகத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் புதிய முயற்சிகள் பலன் தரும்.
- கம்ப்யூட்டர், செல்போன், ஸ்டேஷனரி துறைகளில் லாபம் அதிகரிக்கும்.
- இக்குருப்பெயர்ச்சி செலவோடு சொத்தும் தரும்.
பரிகாரம் என்ன?
பெருமாளை வணங்குங்கள். ஆதரவற்றோர் கல்விக்கு உதவுங்கள்.

