எடுத்த காரியத்தில் ஏற்றம் அடையும் விருச்சிக ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டு, ஐந்துக்குரிய குருபகவான். ருண, ரோக, சத்ருஸ்தானமான ஆறாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதோடு, இரண்டு, பத்து, பன்னிரெண்டுஆகிய இடங்களை பார்வை செய்கிறார். அதனால் இனிப்பும் கசப்புமான கலவையான பலன்கள் கிட்டும்.

  • அவசரம் தவிர்த்தால் அனைவருக்கும் நல்லது.
  • பண வரவு உண்டு. கடன் அடைக்க முடியும். நமது பொருளாதார நிலை, வருமானத்துக்கு ஏற்பவே செலவுகளைத் திட்டமிட வேண்டும். பகட்டால் பத்து பிரயோஜனம் கிடையாதல்லவா!
  • பயணங்களால் லாபம் உண்டாகும்.
  • பூர்விகச் சொத்து விஷயங்கள் நல்லபடி தீர்வாகும். மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு வாகனம் வாய்க்கும்.
  • சுபநிகழ்வுகளுக்கு பிள்ளையார்சுழி போடப்படும்.
  • தள்ளிப்போன திருமணங்கள் நல்லபடி நிகழும்.
  • தம்பதி ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்துச் செயல்படுவது சிறக்கும்.
  • மனைவியின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.
  • பெண்கள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வீண்கோபத்தால் லாபம் இல்லை.
  • பெற்றோர் ஆலோசனை நல்லதே. உடல்நிலை பேணவும். உள்ளம் சோர்வுறுவதைத் தவிர்க்கவும்.
  • ஊழியர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
  • செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சூழல்சாதகமாகும். கம்ப்யூட்டர் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
  • வணிகம் சிறப்பாகவே இருக்கும். அக்டோபர், பிப்ரவரியில் அதிக லாபம்
  • கிட்டும். வங்கிக்கடன் கிடைக்கும். இரும்பு, பெட்ரோ கெமிக்கல், மருந்து,
  • நெருப்பு, தரகு, ஒப்பந்தம், ரியல் எஸ்டேட் துறைகள் அதிக லாபம் அளிக்கும்.
  • பங்குதாரரிடையே விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.
  • இக்குருப்பெயர்ச்சி நம் மனநிலையை இனிமையாக்கும்.

பரிகாரம் என்ன?

சிவனை வணங்குங்கள். 6 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யுங்கள்.