கல்வியே கடமையென கருதும் தனுசு ராசி நண்பர்களே!
உங்கள் ராசிக்கு ஒன்று, நான்குக்குரிய குரு பகவான் பூர்வ புன்னியஸ்தானமான ஐந்தாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதோடு உங்கள் ராசியையும் ஒன்பது, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்க்கிறார். அதனால் அத்தனையும் அதிர்ஷ்டம்தான்.
- அலைச்சல்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றிதான்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும்.
- அடமானப் பொருட்களை மீட்க முடியும். பண வரவு உண்டு.
- குடும்ப ஆரோக்கியம் சிறக்கும்.
- பூர்வீக சொத்து விஷயங்கள் மகிழ்ச்சியாக முடியும். சொத்து வாங்க வங்கிக்கடன் கிடைக்கும்.
- ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்பு வரும்.
- கூடாநட்பு தவிர்க்கலாமே… புதியவர்களோடு கவனம் அவசியம்.
- வணிகம் சிறக்கும். ஜூன், ஜூலையில் புதிய திட்டங்கள் தொடங்கலாம். உணவு, தரகு, உடை, கம்ப்யூட்டர், ஸ்டேஷனரி, மளிகை துறைகள் நல்ல லாபம் தரும்.
- ஊழியர்களின் மனக்கவலை நீங்கும். ஜூன், செப்டம்பர், அக்டோபரில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- கம்ப்யூட்டர் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும்.
- வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு வரும்.
- இக்குருப்பெயர்ச்சி வெற்றிகளைக் குவிக்கும்!
பரிகாரம் என்ன?
தமிழ்க்கடவுள் முருகனை வணங்குங்கள். ஆதரவற்றோர் கல்விச் செலவுகளுக்கு உதவுங்கள்.

