வாய்ப்பை வீணாக்காமல் திறமையாகச் செயல்படுகிற மீன ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்று, பத்துக்குரிய குருபகவான் தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதோடு உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்து ஆகிய இடங்களையும் பார்வையிடுகிறார். அதனால் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

  • பண வரவு பளிச்சிடும். பொன்னும் பொருளும் வாங்க முடியும்.
  • முதலீடுகளுக்குத் திட்டமிடலாமே…
  • முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள்.
  • ரத்த சொந்தங்கள் மகிழ்ச்சியையும் உதவிகளையும் அளிப்பார்கள். தூரத்துச் சொந்தங்களும் நெருங்கி வருவார்கள்.
  • குடும்பத்தில் ஆரோக்கியம் வலுப்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.
  • பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். திருமண யோகம் கிட்டும்.
  • மழலை பாக்யம் கிடைக்கும்.
  • ஆன்மிகப் பயணம் செல்ல வழி பிறக்கும். உல்லாசப் பயணமும் உண்டு.
  • அருமையான வேலைவாய்ப்பு அமையும்.
  • வீட்டு விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாமே…
  • வணிகத்தில் மே, ஜூன், ஆகஸ்டு, ஜனவரி, பிப்ரவரியில் லாபம் அதிகமாகும்.
  • விரிவாக்கப்பணிகளுக்கான திட்டம் தொடங்கும். ஆபரணம், உடை, உணவு, தானியம்,
  • நிதி, வேதிப்பொருள், கல்வி, தரகு துறைகள் சிறக்கும்.
  • ஊழியர்களுக்கு அங்கீகாரமும் அந்தஸ்தும் கிடைக்கும். ஜூன், ஜனவரி,
  • பிப்ரவரியில் புதிய வாய்ப்புகளும் வரும்.
  • இக்குருப்பெயர்ச்சி சாதனை செய்யத் தூண்டும்.

பரிகாரம் என்ன?

ஈஸ்வரனையும் ஈஸ்வரியையும் வணங்குங்கள். மாற்றுத்
திறனாளிகளுக்கு உதவுங்கள்.