சிந்தனைகளையும் சிறப்பாக்கும் துலாம் ராசி நண்பர்களே!
உங்கள் ராசிக்கு 3, 6-க்குரிய குரு பகவான் ஏழாம் இடத்துக்குப் பெயருகிறார். அதோடு, உங்கள் ராசியையும் மூன்று, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் மன சஞ்சலங்கள் நீங்கி தைரியம் பிறக்கும்.
- எதிரிகளும் நண்பர்களாகும் இனிய காலம் இது.
- ரத்த சம்பந்தங்களும் நெருக்கமாவார்கள். உதவியும் புரிவார்கள்.
- பண வரவு சுமூகமாக இருக்கும். சொத்து முதலீடுகள் செய்யலாம்.
- காலம் செய்த கோலத்தில் பிரிந்து வாழும் தம்பதி, மீண்டும் ஒன்று சேர வாய்ப்புகள் அமோகம்.
- கணவன் – மனைவி இடையே இடைவெளி குறைத்து எல்லா விஷயங்களையும் ஒருவருக்கொருவர் ஆலோசித்துச் செய்வது நல்லது.
- பெண்களுக்கு தோஷம், தடைகள் நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.
- வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
- விதண்டாவாதங்களில் நுழையாமல் இருப்பது நலம் பயக்கும். வங்கி, வழக்கு விஷயங்களில் உத்தரவாதம், ஜாமீன் கையெழுத்துகள் தவிர்க்கவும்.
- வரி, மின் கட்டணம் போன்ற அரசு விஷயங்களை உரிய நேரத்தில் செலுத்தி விடலாமே…
- பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடக்கும். உடற்கோளாறுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
- வணிகத்தில் செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் விரிவாக்கப்பணிகள் செய்யலாம். வங்கிக்கடன் கிடைக்கும்.
- ரியல் எஸ்டேட், வேதிப்பொருள், தண்ணீர், உணவு, மருந்து, ஆட்டோமொபைல் உதிரிபாகம் போன்ற துறைகள் லாபம் அளிக்கும்.
- ஊழியர்களுக்கு இனிய சூழல் உருவாகும்.செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதங்களில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.
- இக்குருப்பெயர்ச்சி உழைப்பைப் பெருக்கி வாய்ப்புகளை அதிகரிக்கும்.
பரிகாரம் என்ன?
அம்மனை வணங்குங்கள். நோயாளிகளுக்கு உதவுங்கள்.

