வியூகங்கள் அமைத்து வெற்றியடையும் சிம்ம ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு 5, 8-க்குரிய குருபகவான் பாக்யஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதோடு, உங்கள் ராசியையும் மூன்று, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் நினைத்து நடக்கும் சூழல் உள்ளது.

  • எதையும் அவசரப்படாமல் திட்டமிட்டு செய்யலாமே… குறிப்பாக சொத்து விஷயங்களில்.
  • கணவன் – மனைவி இடையே கருத்துப் பரிமாற்றம் அவசியம்.
  • தந்தை உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் உடல்நிலையிலும்தான்.
  • மழலை எதிர்பார்த்தோருக்கு அப்பாக்யம் கிட்டும்.
  • குழந்தைகள் வேலைவாய்ப்பு பிரகாசமாகும். உங்கள் வேலை மாற்றமும் சாதகமாகும்.
  • இழுபறி வழக்குகள் நல்லபடி முடியும்.
  • வீட்டில் திருமண வைபவங்கள் ஏற்பாடாகும்.
  • பெண்களுக்கு மே, ஜுன் மாதங்களில் திருமண பாக்யம் உண்டாகும். முகப்பொலிவு கூடும்.
  • வணிகத்தில் முதலீடு கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,
  • கட்டுமானப் பொருள், சுற்றுலாத் துறைகள் அதிக லாபம் தரும்.
  • ஊழியர்களுக்கு இணக்கமான சூழல் உருவாகும். திறமைக்கு மரியாதை கிடைக்கும்.
  • இக்குருப்பெயர்ச்சி மேன்மையையும் வெற்றியையும் அளிக்கும்.

பரிகாரம் என்ன?

ஈசனை வணங்குங்கள். நோயாளிகளுக்கு உதவுங்கள்.