மொழிப்பற்றும் இனப்பெற்றும் கொண்ட மேஷராசி நண்பர்களே…

  • மண்ணை மறக்காத மனிதரான நீங்கள் ஒருபோதும் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட மாட்டீர்கள். பணம் சேர்ப்பதைவிட உலகத்தை உன்னதமாக்கும் செயல்களில்தான் உங்களுக்கு ஆர்வம் அதிகம்.
  • 2011 மே 9 முதல் உங்கள் ராசிக்குள் குருபகவான் நுழைந்து ஒரு வார காலம் ஜென்மகுருவாக அமர்வதால் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். தலைவலி, சுவாசப் பிரச்னைகள், ரத்தக் குறைபாடு ஏற்படக்கூடும். வாக்கிங், ஜாகிங், யோகா, தியானம் ஆகியவற்றுக்கு தடை போடாமல் ஈடுபட வேண்டும். எண்ணெய் பண்டங்கள், செயற்கை உணவுகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரை குறைக்க வேண்டும். சுய மருத்துவம் ஒருபோதும் கூடாது.
  • தம்பதிக்குள் எதற்கு வீண் விவாதம்? சண்டை, சச்சரவு, சந்தேகம் எல்லாம் தேவையில்லா துயிரையே ஏற்படுத்தும். விட்டுக்கொடுத்துப் போவது இருவருக்கும் நல்லது.
  • அலட்சியத்தையும் அவநம்பிக்கையையும் மனச்சோர்வையும் தவிர்க்க வேண்டும். டென்ஷனும் வேண்டாமே! தூக்கம் முக்கியம்.
  • உற்றார், உறவினருக்கு நம்மால் முடிந்ததையே செய்ய வேண்டும். அநாவசிய வாக்குறுதிகளால் உறவுதான் முடியும்.
  • பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புதுவாகன யோகம் உண்டு.
  • ஆடை, ஆபரண யோகம் உண்டு.
  • மழலை பாக்யம் உண்டாகும்.
  • வீட்டில் திருமண வைபவம் பிரகாசமாகும்.
  • சொத்து பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். நெருங்கிய உறவினர் மனம் நோகாமல் தீர்த்துக் கொள்ளலாமே…
  • குல தெய்வ வழிபாடு நலம் பயிக்கும்.குடும்பத்தோடு கோயில் தரிசனம் இனிமை.
  • எண்ணெய் பண்டங்கள், ஓட்டல் உணவுகள் தவிர்ப்பது நல்லது. பாதுகாக்கப்பட்ட தண்ணீரே பயன்படுத்த வேண்டும்.
  • ஹெபடைடிஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது நல்லது,
  • எதிர்பாரா பயணங்கள் நேரும்.
  • நண்பர்கள் ‘நண்பேண்டா” என ஓடி வந்து எந்தப் பிரச்னையிலும் உதவுவார்கள்.
  • பண வரவு உண்டு. இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் தேவையான அளவு சிக்கனத்தைக் கடைபிடிக்கவும்.
  • துணைவியின் பேச்சுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.
  • சிக்கலாக இருந்த பிரச்னைகள் தீரும். ஆனாலும்,கடன் தவிர்ப்பது நன்மை தரும்.
  • குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாமே!
  • தனிமை தவிர்த்தால் உற்சாகம் பிறக்கும்.
  • மனதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நம்மிடம் மட்டுமே உள்ளது. அதனால் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
  • வணிகத்தில் புதிய திட்டங்கள் அவசியம். ரகசியம் காக்க அவசியம். வாடிக்கையாளரை மதிக்க வேண்டும். 2011 ஜூன், 2012 பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், ஓட்டல், வேதிப்பொருள், ஏற்றுமதி – இறக்குமதி, தரகு தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பார்ட்னர்களிடையே சகிப்புத்தன்மை அவசியம்.
  • இளைஞர்களுக்கு நல்ல வேலை அமையும்.
  • ஊழியர்களுக்கு மாறி மாறி பலன் வரும். உற்சாகத்தோடு செயல்பட்டல் ஏது பிரச்னை? வேலை மாறும் சூழல் ஏற்பட்டாலும் யோசித்து செயல்பட வேண்டு. பதவி உயர்வு வரும். 2011 ஜூன், 2012 பிப்ரவரி மாதங்களில் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்புகளை உங்களால் சமாளிக்க முடியும். கம்ப்யூட்டர் துறையினருக்கு சம்பளம் உயரும்.
  • பெண்களுக்கு பழைய நட்பு திருப்பமாக அமையும். புதியவர்களிடம் கவனம் தேவை. பெற்றோர் சொல் மதிக்கலாமே! மாதவிடாய்கோளாறு, மன உளைச்சல் வந்தாலும் சமாளிக்க முடியும். கல்வியை தொடரலாம்.2011 மத்தியில் மணமகன் வரக்கூடும்.
  • இக்குருப்பெயர்ச்சி ’பாதி பாசிட்டிவ் பாதி நெகடிவ்’வாக இருந்தாலும் வாழ்க்கையின் மிகமுக்கிய அனுபவ ஆசானாக அமையும்!

பரிகாரம் என்ன?

  • சிவனை வணங்குங்கள். ஆதரவற்ற மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.