குரு பெயர்ச்சி பலன்கள் – கடகம்

கனிவும் கருணையும் கொண்ட கடக ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு 6, 9க்குரிய குருபகவான் தசம கேந்திரமான பத்தாம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார்.

  • அதனால் தொட்டது துலங்கும். அதிர்ஷ்டம் அழைக்கும்.
  • அலுப்பையும் சலிப்பையும் தந்துவந்த தடைகள் நீங்கும். சில காரியங்களில்
  • இழுபறி இருந்தாலும் இறுதியில் வெற்றியே!
  • சுபகாரியங்கள் துரிதமாகி மனமகிழ்வை அளிக்கும்.
  • பணவரவு உண்டு. பூர்வீகச்சொத்து வந்து சேரும்.
  • ஆபரண சேர்க்கை உண்டு.
  • வயிற்றுக்கோளாறாலும் பார்க்கும் கேட்கும் உறுப்புகளில் ஏதேதோ பிரச்னைகளில் அவதிப்பட்டவர்களுக்கு அத்தனை தொல்லைகளும் நீங்கும்.
  • குழந்தைகளிடம் விட்டுக்கொடுத்துப் போகலாமே…
  • தம்பதிக்குள் ஒளிவுமறைவு வேண்டாம். கூடிப்பேசினால் நாலும் இன்பம்தான்!
  • ரியல் எஸ்டேட் முயற்சிகள் சாதகமாகும். ஆனால், மிகக் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
  • ஆலய தரிசனம் அளப்பிலா இன்பத்தை அளிக்கும்.
  • பெண்கள் நட்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோரிடம் பிணக்கு ஏன்?
  • வணிகத்தில் கடன் தீரும். தரகு, ஆபரணம், துணி, உணவு, பால், தண்ணீர்,
  • வேதிப்பொருள், மின்பொருள் துறைகள் லாபம் கொழிக்கும்.
  • ஊழியர்களுக்கு செப்டம்பர், அக்டோபர், ஜனவரியில் சாதகமான நிலை நிலவும்.
  • இடமாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை இருக்கும்தான்.
  • இக்குருப்பெயர்ச்சி தடைகளைத் தாண்டி முன்னேற்றத்தை அளிக்கும்.

பரிகாரம் என்ன?

அம்மனை வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions