பழி பாவங்களைச் சகித்துக்கொண்டு கடமையே கண்ணாக இருக்கும் மிதுன ராசி நண்பர்களே!

மே மாதம் மத்தியிலிருந்து உங்களுக்குச் சுப பலன்கள்தான்! உங்கள் ராசிக்கு 7, 10-க்குரிய குருபகவான் லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். அது மட்டுமல்ல… உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழு. ஆகிய இடங்களைப் பார்வை செய்கிறார். அதனால் இதுவரை உங்களை அலைக்கழித்த சோர்வு, அசதி, டென்ஷன், மறதி போன்ற விஷயங்கள் புத்துணர்ச்சி பிறக்கும்.

  • பண வரவு உண்டு.
  • புதுநட்புகளால் நல்ல மாற்றம் உண்டாகும். சகோதர வகையில் உதவி வரும்.
  • எதிர்ப்புகள் மறைந்து செயல்கள் சிறக்கும்.
  • குழந்தைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும்.
  • வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
  • வீட்டில் திருமணம் கூடி வரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்தோருக்கு அமையும்.
  • வீடு கட்டும் வேலை தள்ளித்தள்ளிப் போனதே… இப்போது அதை கட்டி முடிக்க வேளை வந்துவிட்டது.
  • வழக்குகள், அரசு காரியங்கள் சாதகமாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் நல்லபடி முடியும்.
  • செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாமே…
  • உறவோ உற்றாரோ – அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
  • கோயில் தரிசனம் உண்டு.
  • பெண்களுக்கு விருப்பமான மணமகன் கிடைப்பார். காதல் இனிக்கும். பெற்றோர் ஆலோசனையும் ஏற்கும்படி இருக்கும்.
  • வணிகத்தில் லாபம் உறுதி. மருந்து, உணவு, தரகு, இரும்பு, ஸ்டேஷனரி, உடை துறைகளில் அதிகம் ஈட்டலாம்.
  • ஊழியர்களுக்கு உற்சாக பலன்களே! தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும்.
  • கணினித் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும்.
  • இக் குருபெயர்ச்சி செயலையும் சிறப்பையும் அளிக்கும்.

பரிகாரம் என்ன?

அம்பாளை வணங்குங்கள். தனிமையில் தவிப்போருக்கு உதவுங்கள்.