கெளரவத்தைக் கடைபிடிக்கும் கும்ப ராசி நண்பர்களே!
உங்கள் ராசிக்கு 2, 11க்குரிய குருபகவான் திட தைரிய வீரியஸ்தானமான மூன்றாம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதோடு உங்கள் ராசிக்கு ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் குழப்பங்கள் நீங்கி, குதூகலம் பிறக்கும்.
- எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.
- பணமும் வரும்… செலவும் வரும்.
- ஆபரண சேர்க்கை உண்டு.
- சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் அமையும். ரத்த உறவுகளின் திருமணம் நடக்கும்.
- தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பேசி இணக்கமாகலாமே…
- வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு.
- வங்கி, வழக்கு விஷயங்கள் சாதகமாகும். எனினும் உறவினரோடு சோத்து தகராறு என அவசரப்பட்ட வழக்கு போட வேண்டாமே…
- நண்பர்களிடையே பண விஷயத்தில் மோதல்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வீட்டிலுள்ள மூத்தகுடிமக்களின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
- ஆன்மிகப் பயணம் அமையும்.
- பெண்கள் முதல் சந்திப்பிலேயே நம்புவதைத் தவிர்க்க வேண்டும். திருமண யோகம் உள்ளது.
- உடல்நலம் பேண வேண்டும். கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- வணிகத்தில் புது முயற்சிகள் சிறக்கும். கடன் தீரும். உணவு, வாகன உதிரிபாகங்கள், கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், தரகு துறைகள் அதிக லாபம் தரும்.
- ஊழியர்களுக்கு மனத்தடை இருந்தாலும் முக்கியப் பொறுப்புகள் வந்து சேரும். சிலருக்கு இடமாற்றம் விரும்பியபடி கிடைக்கும்.
- இக்குருப்பெயர்ச்சி மனதை வலிமையாக்கி மகிழ்ச்சியை தரும்.
பரிகாரம் என்ன?
அம்மனை வழிபடுங்கள். எளியோருக்கு உதவுங்கள்.

