Aambal Magazine - ஆம்பல் சஞ்சிகை » Tamil Horoscope

குரு பெயர்ச்சி பலன்கள் 2011 – 09.05.2011 முதல் 16.5.2012 வரை
2011 மே 9 முதல் 2012 மே 16 வரை

பொதுப் பலன்கள்

உழைக்கத் தயங்காமல் உண்மையாகவும் நிம்மதியாகவும்  வாழ விரும்புவோரின் குருவாக இருப்பவர் குருபகவான்தான். புத்தி கூர்மையையும் பேச்சு வன்மையையும் வேத விற்பன்னத்தையும் அளிப்பவரும் குருபகவானே. பதவியை பகட்டாக நினைக்காமல் பொறுப்பாகக் கருதி மக்களின் நலனுக்காக உழைப்போருக்கு நலம் செய்வதும் குருபகவான்தான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சமமெனக் கருதி ஒருமித்து வாழ உறுதுணையாக இருப்பவர் குருபகவானே. சிகரம் தொட்டாலும் சிந்தனையில் பெற்றோரையும் மற்றோரையும் மதிப்போருக்கு மரியாதை செய்ய விரும்புவரும் குருபகவான்தான்.

நிகழும் கர வருடம், சித்திரை மாதம் 25-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை  (2011 மே 9) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம், சூலம், நாமயோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில், குரு ஹோரையில், சூரியன் உதயம் புக, பெயர்ச்சி நாழிகை 48-க்கு சரியான நேரம் பின்னிரவு மணி 1.12-க்கு உபய வீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்துக்குள் குருபகவான் நுழைகிறார்.

வேதம், ஞானம், அறிவியல் ஆகியவற்றுக்கு  உரிய கிரகமான குருபகவான்  2012 மே 16 வரை மேஷ ராசியில்  ஆட்சி செலுத்துவார். சட்டம் ஒழுங்குக்கு அதிபதியான அங்காரகனின் வீடான மேஷத்தில் குரு அமர்வதால், காவல்துறை களங்கமற்றுச் செயல்படும். அதனால் வன்முறையும் குற்றங்களும் குறையும். நீதிமன்றங்களின் நியாயம் வலுவடையும். சுற்றுச்சூழல் சட்டங்களின் மூலம் புவியைக் காக்கும் நடவடிக்கைகள் தீவிரமடையும். செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாற்று மின்சார முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும்.

கர வருடம் ஆவணி 21 (2011 செப்டம்பர் 7) முதல் பரணி முதல் பாதத்தில் அதிசார கதியில் சஞ்சரித்து பின் மார்கழி 9 (2011 டிசம்பர் 25) அன்று அசுவினி நட்சத்திரத்துக்கு திரும்புகிறார். தான் நின்ற ராசியில் இருந்து 5, 7, 9-ம் பார்வையால் மீனம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ராசியினருக்கு சுப பலன்களையும், ரிஷபம், கன்னி ராசியினருக்கு குறைவான சுப பலன்களையும், மேஷம், கடகம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினருக்கு மத்திம பலன்களையும் அளிக்கிறார்.

மே 10 முதல் ஜூன் 4 வரை சுக்கிரன், குருவுடன் இணைந்திருப்பதால் தனுர் ராசியினர் பூர்வ புண்ணிய, சுக சௌக்கிய லாபங்களையும், மிதுன ராசியினர் தொழில் மேன்மையையும், சிம்ம ராசியினர் புத்தி லாபத்தையும் பெறுவர். நட்பு வீடான மேஷ ராசியில் குரு சஞ்சரித்து, பகை வீடான துலாமை 7-ம் பார்வையால் பார்ப்பதால் துலாம் ராசியினர் குடும்ப நலனையும் திருமண பாக்கியத்தையும் மதிப்பையும் எதிர்பார்க்கலாம். குருபகவான் நட்பு வீடான சிம்மத்தையும் பகைவீடான துலாத்தையும், ஆட்சி வீடான தனுசையும் பார்ப்பதால் அவரது பார்வை சமமாகவே எல்லா ராசிகளிலும் பரிமளிக்கிறது.

குருவின் மீது 2011 டிசம்பர் 21 முதல் 2012  மே 16 வரை சனியின் பார்வை விழுவதாலும் 2011 நவம்பர் 4 முதல் 2012 ஜுன் 23 வரை செவ்வாய், சிம்மத்திலேயே அமர்வதாலும், வேளாண்மை குறையும் என்பது வருந்தத்தக்க விஷயமே. ரியல் எஸ்டேட் விலை அதிகரித்தாலும் அத்தொழில் புரிவோருக்கு சாதகமில்லை. சில கட்டுமானப் பொருட்களின் விலை குறையும். காட்டுத்தீ, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும். உலகெங்கும் ராணுவச் செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவான் 2011 செப்டம்பர் 7 முதல் 2011 டிசம்பர் 14 வரை வக்கிரமடைவதால் தங்கத்தின் விலை மேலும் மேலும் உயரும். உலகை அச்சுறுத்தும் நோய்கள் மீண்டும் வர வாய்ப்புண்டு. விவசாய உற்பத்தி குறையும். போலி ஆன்மிகவாதிகளை மக்கள் புறக்கணிப்பார்கள். உண்மையான ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாற்று மருத்துவ முறைகள், இயற்கை உணவில் மக்கள் நாட்டம் கொள்வார்கள். மொத்தத்தில் இக்குருப்பெயர்ச்சி உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கும். அடக்குமுறையை எதிர்க்கும். புவி பாதுகாப்பில் அக்கறை செலுத்தும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம் இது…

அசுவனி முதல் பாதத்தில் 2011 மே 9 முதல் மே 23 வரை.
அசுவனி இரண்டாம் பாதத்தில் 2011 மே 24 முதல் ஜுன் 8 வரை.
அசுவனி மூன்றாம் பாதத்தில் ஜுன் 9 முதல் ஜுன் 27 வரை.
அசுவனி நான்காம் பாதத்தில் ஜுன் 28 முதல் ஜுலை 21 வரை.
பரணி முதல் பாதத்தில் இயல்பு நிலையாக 2011 ஜுலை 22 முதல் செப்டம்பர் 6 வரை.
பரணி இரண்டாம் பாதத்தில் வக்கிர நிலையாக 2011 செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 10 வரை.
அசுவனி நான்காம் பாதத்தில் வக்கிர நிலையாக அக்டோபர் 11 முதல் நவம்பர் 4 வரை.
அசுவனி மூன்றாம் பாதத்தில் வக்கிர நிலையாக நவம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரை.
அசுவனி இரண்டாம் பாதத்தில் வக்கிர நிலையாக டிசம்பர் 10 முதல் டிசம்பர் 14 வரை.
அசுவனி இரண்டாம் பாதத்தில் இயல்பு நிலையாக 2011 டிசம்பர் 15 முதல் 2012 ஜனவரி 3 வரை.
அசுவனி மூன்றாம் பாதத்தில் 2012 ஜனவரி 4 முதல் பிப்ரவரி 9 வரை.
அசுவனி நான்காம் பாதத்தில் 2012 பிப்ரவரி 10 முதல் மார்ச் 1 வரை.
பரணி முதல் பாதத்தில் 2012 மார்ச் 2 முதல் மார்ச் 19 வரை.
பரணி இரண்டாம் பாதத்தில் 2012 மார்ச் 20 முதல் ஏப்ரல் 3 வரை.
பரணி மூன்றாம் பாதத்தில் 2012 ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 16 வரை.
பரணி நான்காம் பாதத்தில் 2012 ஏப்ரல் 17 முதல் மே 1 வரை.
கிருத்திகை முதல் பாதத்தில் 2012 மே 2 முதல் மே 16 வரை.

பரிகாரம் என்ன?

சொத்து பிரச்னைகளை கூடிய வரை சச்சரவுகள் இன்றி சுமுக தன்மையுடன் முடித்துக்கொள்வது நல்லது.

குடும்ப உறவுகளுடன் அனுசரணை அவசியம்.

நேர்வழியே நிலைக்கும்… குறுக்குவழி சிதைக்கும்.

செவ்வாய் அதிகபதியான முருகப்பெருமானை வழிபடுங்கள்.

ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானமும் சேவை அமைப்புகளில் ரத்ததானமும் செய்யுங்கள்.

அன்பையும் அறிவையும் போதித்தால் அனைவருக்கும் சுகமே!

குருப்பெயர்ச்சிப் பலன்கள் – விருச்சிகம்
எடுத்த காரியத்தில் ஏற்றம் அடையும் விருச்சிக ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டு, ஐந்துக்குரிய குருபகவான். ருண, ரோக, சத்ருஸ்தானமான ஆறாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதோடு, இரண்டு, பத்து, பன்னிரெண்டுஆகிய இடங்களை பார்வை செய்கிறார். அதனால் இனிப்பும் கசப்புமான கலவையான பலன்கள் கிட்டும்.

அவசரம் தவிர்த்தால் அனைவருக்கும் நல்லது.

பண வரவு உண்டு. கடன் அடைக்க முடியும். நமது பொருளாதார நிலை, வருமானத்துக்கு ஏற்பவே செலவுகளைத் திட்டமிட வேண்டும். பகட்டால் பத்து பிரயோஜனம் கிடையாதல்லவா!

பயணங்களால் லாபம் உண்டாகும்.

பூர்விகச் சொத்து விஷயங்கள் நல்லபடி தீர்வாகும். மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு வாகனம் வாய்க்கும்.

சுபநிகழ்வுகளுக்கு பிள்ளையார்சுழி போடப்படும்.

தள்ளிப்போன திருமணங்கள் நல்லபடி நிகழும்.

தம்பதி ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்துச் செயல்படுவது சிறக்கும்.

மனைவியின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

பெண்கள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வீண்கோபத்தால் லாபம் இல்லை.

பெற்றோர் ஆலோசனை நல்லதே. உடல்நிலை பேணவும். உள்ளம் சோர்வுறுவதைத் தவிர்க்கவும்.

ஊழியர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சூழல்சாதகமாகும். கம்ப்யூட்டர் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும்.

வணிகம் சிறப்பாகவே இருக்கும். அக்டோபர், பிப்ரவரியில் அதிக லாபம்

கிட்டும். வங்கிக்கடன் கிடைக்கும். இரும்பு, பெட்ரோ கெமிக்கல், மருந்து,

நெருப்பு, தரகு, ஒப்பந்தம், ரியல் எஸ்டேட் துறைகள் அதிக லாபம் அளிக்கும்.

பங்குதாரரிடையே விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

இக்குருப்பெயர்ச்சி நம் மனநிலையை இனிமையாக்கும்.

பரிகாரம் என்ன?

சிவனை வணங்குங்கள். 6 மாதத்துக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் – துலாம்
சிந்தனைகளையும் சிறப்பாக்கும் துலாம் ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு 3, 6-க்குரிய குரு பகவான் ஏழாம் இடத்துக்குப் பெயருகிறார். அதோடு, உங்கள் ராசியையும் மூன்று, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் மன சஞ்சலங்கள் நீங்கி தைரியம் பிறக்கும்.

எதிரிகளும் நண்பர்களாகும் இனிய காலம் இது.

ரத்த சம்பந்தங்களும் நெருக்கமாவார்கள். உதவியும் புரிவார்கள்.

பண வரவு சுமூகமாக இருக்கும். சொத்து முதலீடுகள் செய்யலாம்.

காலம் செய்த கோலத்தில் பிரிந்து வாழும் தம்பதி, மீண்டும் ஒன்று சேர வாய்ப்புகள் அமோகம்.

கணவன் – மனைவி இடையே இடைவெளி குறைத்து எல்லா விஷயங்களையும் ஒருவருக்கொருவர் ஆலோசித்துச் செய்வது நல்லது.

பெண்களுக்கு தோஷம், தடைகள் நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

விதண்டாவாதங்களில் நுழையாமல் இருப்பது நலம் பயக்கும். வங்கி, வழக்கு விஷயங்களில் உத்தரவாதம், ஜாமீன் கையெழுத்துகள் தவிர்க்கவும்.

வரி, மின் கட்டணம் போன்ற அரசு விஷயங்களை உரிய நேரத்தில் செலுத்தி விடலாமே…

பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடக்கும். உடற்கோளாறுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

வணிகத்தில் செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் விரிவாக்கப்பணிகள் செய்யலாம். வங்கிக்கடன் கிடைக்கும்.

ரியல் எஸ்டேட், வேதிப்பொருள், தண்ணீர், உணவு, மருந்து, ஆட்டோமொபைல் உதிரிபாகம் போன்ற துறைகள் லாபம் அளிக்கும்.

ஊழியர்களுக்கு இனிய சூழல் உருவாகும்.செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதங்களில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.

இக்குருப்பெயர்ச்சி உழைப்பைப் பெருக்கி வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பரிகாரம் என்ன?

அம்மனை வணங்குங்கள். நோயாளிகளுக்கு உதவுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் – கன்னி
மாறும் என்பதைத் தவிர மற்றவை எல்லாம் மாறும் என நம்பும் கன்னி ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு 4, 7க்குரிய குருபகவான் அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதோடு இரண்டு, நான்கு, பன்னிரெண்டு ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் இப்பருவத்தில் பாசிட்டிவ்-நெகட்டிவ் கலந்தே இருக்கும். இருப்பினும் எதையும் சமாளிக்க முடியும்.

பண வரவு உண்டு என்பதால் நெருக்கடி நீங்கும்.

ஆபரண சேர்க்கை, வாகன யோகம் உண்டு. வீடு கட்டும் கனவு பலிக்கும்.

ரத்த சொந்தங்களிடையே மனவருத்தங்கள் நீங்கி, நெருக்கம் பிறக்கும்.

தடைபட்டுவந்த காரியங்கள் நல்லபடி நடக்கும். அரசு காரியங்களில் கூடுதல் கவனம் தேவை.

சுப காரியப் பேச்சுவார்த்தை தொடங்கும்.

ஆரோக்கியம் வலுப்படும்.

பயணத்தில் கவனம் அவசியம். வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவு வேண்டாமே.

பொருட்களையும் பாதுகாக்க வேண்டும்.

பெண்கள் விட்டுக்கொடுத்துப் பொறுமையாக இருப்பது பல விஷயங்களுக்கு நல்லது.

காதலை விட, கல்வியில் கவனம் தேவை. திருமணம் விரைவிலேயே வரும்.

மகளுக்கு மகப்பேறு பார்க்க வேண்டி வரும்.

ஊழியர்களின் திறமைக்கு மரியாதை கிடைக்கும். டிசம்பர், ஜனவரியில் பலன் எதிர்பார்க்கலாம்.

வேலை மாற்றம் எனில் நன்கு யோசித்தே முடிவெடுக்க வேண்டும்.

வணிகத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் புதிய முயற்சிகள் பலன் தரும்.

கம்ப்யூட்டர், செல்போன், ஸ்டேஷனரி துறைகளில் லாபம் அதிகரிக்கும்.

இக்குருப்பெயர்ச்சி செலவோடு சொத்தும் தரும்.

பரிகாரம் என்ன?

பெருமாளை வணங்குங்கள். ஆதரவற்றோர் கல்விக்கு உதவுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் – சிம்மம்
வியூகங்கள் அமைத்து வெற்றியடையும் சிம்ம ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு 5, 8-க்குரிய குருபகவான் பாக்யஸ்தானமான ஒன்பதாம்  இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதோடு, உங்கள் ராசியையும்  மூன்று, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் நினைத்து நடக்கும் சூழல் உள்ளது.

எதையும் அவசரப்படாமல் திட்டமிட்டு செய்யலாமே… குறிப்பாக சொத்து விஷயங்களில்.

கணவன் – மனைவி இடையே கருத்துப் பரிமாற்றம் அவசியம்.

தந்தை உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் உடல்நிலையிலும்தான்.

மழலை எதிர்பார்த்தோருக்கு அப்பாக்யம் கிட்டும்.

குழந்தைகள் வேலைவாய்ப்பு பிரகாசமாகும். உங்கள் வேலை மாற்றமும் சாதகமாகும்.

இழுபறி வழக்குகள் நல்லபடி முடியும்.

வீட்டில் திருமண வைபவங்கள் ஏற்பாடாகும்.

பெண்களுக்கு மே, ஜுன் மாதங்களில் திருமண பாக்யம் உண்டாகும். முகப்பொலிவு கூடும்.

வணிகத்தில் முதலீடு கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,

கட்டுமானப் பொருள், சுற்றுலாத் துறைகள் அதிக லாபம் தரும்.

ஊழியர்களுக்கு இணக்கமான சூழல் உருவாகும். திறமைக்கு மரியாதை கிடைக்கும்.

இக்குருப்பெயர்ச்சி  மேன்மையையும் வெற்றியையும் அளிக்கும்.

பரிகாரம் என்ன?

ஈசனை வணங்குங்கள். நோயாளிகளுக்கு உதவுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் – கடகம்
கனிவும் கருணையும் கொண்ட கடக ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு 6, 9க்குரிய குருபகவான் தசம கேந்திரமான பத்தாம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார்.

அதனால் தொட்டது துலங்கும். அதிர்ஷ்டம் அழைக்கும்.

அலுப்பையும் சலிப்பையும் தந்துவந்த தடைகள் நீங்கும். சில காரியங்களில்

இழுபறி இருந்தாலும் இறுதியில் வெற்றியே!

சுபகாரியங்கள் துரிதமாகி மனமகிழ்வை அளிக்கும்.

பணவரவு உண்டு. பூர்வீகச்சொத்து வந்து சேரும்.

ஆபரண சேர்க்கை உண்டு.

வயிற்றுக்கோளாறாலும் பார்க்கும் கேட்கும் உறுப்புகளில் ஏதேதோ பிரச்னைகளில் அவதிப்பட்டவர்களுக்கு அத்தனை தொல்லைகளும் நீங்கும்.

குழந்தைகளிடம் விட்டுக்கொடுத்துப் போகலாமே…

தம்பதிக்குள் ஒளிவுமறைவு வேண்டாம். கூடிப்பேசினால் நாலும் இன்பம்தான்!

ரியல் எஸ்டேட் முயற்சிகள் சாதகமாகும். ஆனால், மிகக் கவனத்தோடு செயல்பட வேண்டும்.

ஆலய தரிசனம் அளப்பிலா இன்பத்தை அளிக்கும்.

பெண்கள் நட்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோரிடம் பிணக்கு ஏன்?

வணிகத்தில் கடன் தீரும். தரகு, ஆபரணம், துணி, உணவு, பால், தண்ணீர்,

வேதிப்பொருள், மின்பொருள் துறைகள் லாபம் கொழிக்கும்.

ஊழியர்களுக்கு செப்டம்பர், அக்டோபர், ஜனவரியில் சாதகமான நிலை நிலவும்.

இடமாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை இருக்கும்தான்.

இக்குருப்பெயர்ச்சி தடைகளைத் தாண்டி முன்னேற்றத்தை அளிக்கும்.

பரிகாரம் என்ன?

அம்மனை வணங்குங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன் – மிதுனம்
பழி பாவங்களைச் சகித்துக்கொண்டு கடமையே கண்ணாக இருக்கும் மிதுன ராசி நண்பர்களே!

மே மாதம் மத்தியிலிருந்து உங்களுக்குச் சுப பலன்கள்தான்! உங்கள் ராசிக்கு 7, 10-க்குரிய குருபகவான் லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். அது மட்டுமல்ல… உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழு. ஆகிய இடங்களைப் பார்வை செய்கிறார். அதனால் இதுவரை உங்களை அலைக்கழித்த சோர்வு, அசதி, டென்ஷன், மறதி போன்ற விஷயங்கள் புத்துணர்ச்சி பிறக்கும்.

பண வரவு உண்டு.

புதுநட்புகளால் நல்ல மாற்றம் உண்டாகும். சகோதர வகையில் உதவி வரும்.

எதிர்ப்புகள் மறைந்து செயல்கள் சிறக்கும்.

குழந்தைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும்.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வீட்டில் திருமணம் கூடி வரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்தோருக்கு அமையும்.

வீடு கட்டும் வேலை தள்ளித்தள்ளிப் போனதே… இப்போது அதை கட்டி முடிக்க வேளை வந்துவிட்டது.

வழக்குகள், அரசு காரியங்கள் சாதகமாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் நல்லபடி முடியும்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாமே…

உறவோ உற்றாரோ – அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கோயில் தரிசனம் உண்டு.

பெண்களுக்கு விருப்பமான மணமகன் கிடைப்பார். காதல் இனிக்கும். பெற்றோர் ஆலோசனையும் ஏற்கும்படி இருக்கும்.

வணிகத்தில் லாபம் உறுதி. மருந்து, உணவு, தரகு, இரும்பு, ஸ்டேஷனரி, உடை துறைகளில் அதிகம் ஈட்டலாம்.

ஊழியர்களுக்கு உற்சாக பலன்களே!  தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும்.

கணினித் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும்.

இக் குருபெயர்ச்சி செயலையும் சிறப்பையும் அளிக்கும்.

பரிகாரம் என்ன?

அம்பாளை வணங்குங்கள். தனிமையில் தவிப்போருக்கு உதவுங்கள்.

குருப்பெயர்ச்சிப் பலன்கள் – தனுசு
கல்வியே கடமையென கருதும் தனுசு ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்று, நான்குக்குரிய குரு பகவான் பூர்வ புன்னியஸ்தானமான ஐந்தாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். அதோடு உங்கள் ராசியையும் ஒன்பது, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்க்கிறார். அதனால் அத்தனையும் அதிர்ஷ்டம்தான்.

அலைச்சல்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றிதான்.

வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும்.

அடமானப் பொருட்களை மீட்க முடியும். பண வரவு உண்டு.

குடும்ப ஆரோக்கியம் சிறக்கும்.

பூர்வீக சொத்து விஷயங்கள் மகிழ்ச்சியாக முடியும். சொத்து வாங்க வங்கிக்கடன் கிடைக்கும்.

ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்பு வரும்.

கூடாநட்பு தவிர்க்கலாமே… புதியவர்களோடு கவனம் அவசியம்.

வணிகம் சிறக்கும்.  ஜூன், ஜூலையில் புதிய திட்டங்கள் தொடங்கலாம். உணவு, தரகு, உடை, கம்ப்யூட்டர், ஸ்டேஷனரி, மளிகை துறைகள் நல்ல லாபம் தரும்.

ஊழியர்களின் மனக்கவலை நீங்கும். ஜூன், செப்டம்பர், அக்டோபரில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கம்ப்யூட்டர் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும்.

வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு வரும்.

இக்குருப்பெயர்ச்சி வெற்றிகளைக் குவிக்கும்!

பரிகாரம் என்ன?

தமிழ்க்கடவுள் முருகனை வணங்குங்கள். ஆதரவற்றோர் கல்விச் செலவுகளுக்கு உதவுங்கள்.

குருப்பெயர்ச்சி பலன் – மேஷம்
மொழிப்பற்றும் இனப்பெற்றும் கொண்ட மேஷராசி நண்பர்களே…

மண்ணை மறக்காத மனிதரான நீங்கள் ஒருபோதும் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட மாட்டீர்கள். பணம் சேர்ப்பதைவிட உலகத்தை உன்னதமாக்கும் செயல்களில்தான் உங்களுக்கு ஆர்வம் அதிகம்.

2011 மே 9 முதல் உங்கள் ராசிக்குள் குருபகவான் நுழைந்து ஒரு வார காலம் ஜென்மகுருவாக அமர்வதால் ஆரோக்கியத்தில் கவனம்   அவசியம். தலைவலி, சுவாசப் பிரச்னைகள், ரத்தக் குறைபாடு ஏற்படக்கூடும். வாக்கிங், ஜாகிங், யோகா, தியானம் ஆகியவற்றுக்கு தடை போடாமல் ஈடுபட வேண்டும். எண்ணெய் பண்டங்கள், செயற்கை உணவுகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரை குறைக்க வேண்டும். சுய மருத்துவம் ஒருபோதும் கூடாது.

தம்பதிக்குள் எதற்கு வீண் விவாதம்? சண்டை, சச்சரவு, சந்தேகம் எல்லாம் தேவையில்லா துயிரையே ஏற்படுத்தும். விட்டுக்கொடுத்துப் போவது இருவருக்கும் நல்லது.

அலட்சியத்தையும் அவநம்பிக்கையையும் மனச்சோர்வையும் தவிர்க்க வேண்டும். டென்ஷனும் வேண்டாமே! தூக்கம் முக்கியம்.

உற்றார், உறவினருக்கு நம்மால் முடிந்ததையே செய்ய வேண்டும். அநாவசிய வாக்குறுதிகளால் உறவுதான் முடியும்.

பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புதுவாகன யோகம் உண்டு.

ஆடை, ஆபரண யோகம் உண்டு.

மழலை பாக்யம் உண்டாகும்.

வீட்டில் திருமண வைபவம் பிரகாசமாகும்.

சொத்து பிரச்னைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். நெருங்கிய உறவினர் மனம் நோகாமல் தீர்த்துக் கொள்ளலாமே…

குல தெய்வ வழிபாடு நலம் பயிக்கும்.குடும்பத்தோடு கோயில் தரிசனம் இனிமை.

எண்ணெய் பண்டங்கள், ஓட்டல் உணவுகள் தவிர்ப்பது நல்லது. பாதுகாக்கப்பட்ட தண்ணீரே பயன்படுத்த வேண்டும்.

ஹெபடைடிஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது நல்லது,

எதிர்பாரா பயணங்கள் நேரும்.

நண்பர்கள் ‘நண்பேண்டா” என ஓடி வந்து எந்தப் பிரச்னையிலும் உதவுவார்கள்.

பண வரவு உண்டு. இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் தேவையான அளவு சிக்கனத்தைக் கடைபிடிக்கவும்.

துணைவியின் பேச்சுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

சிக்கலாக இருந்த பிரச்னைகள் தீரும். ஆனாலும்,கடன் தவிர்ப்பது நன்மை தரும்.

குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாமே!

தனிமை தவிர்த்தால் உற்சாகம் பிறக்கும்.

மனதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நம்மிடம் மட்டுமே உள்ளது. அதனால் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

வணிகத்தில் புதிய திட்டங்கள் அவசியம். ரகசியம் காக்க அவசியம். வாடிக்கையாளரை மதிக்க வேண்டும். 2011 ஜூன், 2012 பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், ஓட்டல், வேதிப்பொருள், ஏற்றுமதி – இறக்குமதி, தரகு தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பார்ட்னர்களிடையே சகிப்புத்தன்மை அவசியம்.

இளைஞர்களுக்கு நல்ல வேலை அமையும்.

ஊழியர்களுக்கு மாறி மாறி பலன் வரும். உற்சாகத்தோடு செயல்பட்டல் ஏது பிரச்னை? வேலை மாறும் சூழல் ஏற்பட்டாலும் யோசித்து செயல்பட வேண்டு. பதவி உயர்வு வரும். 2011 ஜூன், 2012 பிப்ரவரி மாதங்களில் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்புகளை உங்களால் சமாளிக்க முடியும். கம்ப்யூட்டர் துறையினருக்கு  சம்பளம் உயரும்.

பெண்களுக்கு பழைய நட்பு திருப்பமாக அமையும். புதியவர்களிடம் கவனம் தேவை. பெற்றோர் சொல் மதிக்கலாமே! மாதவிடாய்கோளாறு, மன உளைச்சல் வந்தாலும் சமாளிக்க முடியும். கல்வியை தொடரலாம்.2011 மத்தியில் மணமகன் வரக்கூடும்.

இக்குருப்பெயர்ச்சி ’பாதி பாசிட்டிவ் பாதி நெகடிவ்’வாக இருந்தாலும் வாழ்க்கையின் மிகமுக்கிய அனுபவ ஆசானாக அமையும்!

பரிகாரம் என்ன?

சிவனை வணங்குங்கள். ஆதரவற்ற மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

குருப்பெயர்ச்சிப் பலன்கள் – கும்பம்
கெளரவத்தைக் கடைபிடிக்கும் கும்ப ராசி நண்பர்களே!

உங்கள் ராசிக்கு 2, 11க்குரிய குருபகவான் திட தைரிய வீரியஸ்தானமான மூன்றாம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதோடு உங்கள் ராசிக்கு ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய இடங்களையும் பார்வை செய்கிறார். அதனால் குழப்பங்கள் நீங்கி, குதூகலம் பிறக்கும்.

எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.

பணமும் வரும்… செலவும் வரும்.

ஆபரண சேர்க்கை உண்டு.

சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் அமையும். ரத்த உறவுகளின் திருமணம் நடக்கும்.

தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பேசி இணக்கமாகலாமே…

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு.

வங்கி, வழக்கு விஷயங்கள் சாதகமாகும். எனினும் உறவினரோடு சோத்து தகராறு என அவசரப்பட்ட வழக்கு போட வேண்டாமே…

நண்பர்களிடையே பண விஷயத்தில் மோதல்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிலுள்ள மூத்தகுடிமக்களின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

ஆன்மிகப் பயணம் அமையும்.

பெண்கள் முதல் சந்திப்பிலேயே நம்புவதைத் தவிர்க்க வேண்டும். திருமண யோகம் உள்ளது.

உடல்நலம் பேண வேண்டும். கால்சியம் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வணிகத்தில் புது முயற்சிகள் சிறக்கும். கடன் தீரும். உணவு, வாகன உதிரிபாகங்கள், கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், தரகு துறைகள் அதிக லாபம் தரும்.

ஊழியர்களுக்கு மனத்தடை இருந்தாலும் முக்கியப் பொறுப்புகள் வந்து சேரும். சிலருக்கு இடமாற்றம் விரும்பியபடி கிடைக்கும்.

இக்குருப்பெயர்ச்சி மனதை வலிமையாக்கி மகிழ்ச்சியை தரும்.

பரிகாரம் என்ன?

அம்மனை வழிபடுங்கள். எளியோருக்கு உதவுங்கள்.