Aambal Magazine - ஆம்பல் சஞ்சிகை » Tamil Stories

அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
(இப்போது வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலக்கதை இதுதான்!)

கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக, அதே ஊரில் வேலை பார்க்கும் காளமேக வாத்தியார் முப்பது வருடங்களாகச் சொல்லி வருகிறார். ஆனால் அவர் மட்டும் மாறுவதாக இல்லை!

வேட்டி நுனியை இடக்கையால் தூக்கிப் பிடித்தபடி மூக்குப்பொடியும், ஹவாய் செருப்புமாக ஊருக்குள் திரிகிறார். காலம் அவர் தலைமுடியை மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டது. காளமேகம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தன் பெயருக்கேற்ப தலையும் கருமேகம் போல் இருக்க வேண்டுமென்று மாதம் பிறந்தால் பக்கத்து டவுனுக்கு மொபெட்டில் போய் முடிவெட்டி, டை அடித்துத் திரும்பி வருகிறார்.

தாமரைக்குளம் மட்டுமில்லை, தமிழ்நாட்டின் தொண்ணூற்று ஒன்பது சதவிகித கிராமங்கள் காளமேக வாத்தியாரின் மண்டை மாதிரிதான், தங்கள் ஒரிஜினல் நிறத்தை இழந்து வெளிறிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை இயல்புப்படி மாறவிடாமல், முடிந்தவரை சாயம் பூசிப் பூசிப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், மாற்றமோ அவ்வப்போது வெளிவந்து கண்ணாமூச்சி காட்டுகிறது.

தாமரைக்குளத்தின் மையம் ஆலமரத்தடிதான். அழகர்சாமி கோயிலை அடுத்து வளர்ந்திருந்த ஆலமரத்தை அணைத்தாற்போல் ஒரு மண்டபம் கட்டி, பிள்ளையாரைக் காவலுக்கு வைத்திருந்தார்கள். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட மண்டபம். தாங்கி நிற்கிற கல்தூண்கள், சிவப்புக் காவி பரவிய ஜில்லிடும் தரை.

அதில் நிரந்தரமாக கிடந்த கோலம், சாய்ந்த கோலம், கவிழ்ந்த கோலம் என ஆறேழு கோலங்களில் ஏழெட்டுப் பேர் அலங்கோலமாகக் கிடப்பார்கள். பெரும்பாலும் ஐம்பதைத் தாண்டிய கிராமத்தின் சீனியர் சிட்டிசன்கள். ஊரு தலைப்பிரட்டுப் பயல்களுக்கு பெருசுகள். மரியாதையாகச் சொல்வதானால் வயசாளிகள். அனுபவஸ்தர்கள்.

பிள்ளையார்தான் பாவம்… இந்த வயசாளிகளின் புலம்பல்களையும், வெற்றிலை எச்சில் துப்பல்களையும், புகையிலைப் பெருமூச்சையும், விவஸ்தையின்றி அவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகளையும் பெரிய காதுகளால் கேட்டபடி நொந்து போயிருக்கிறார்.

பிள்ளையாருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் போல அழகர்சாமி. அவருக்குச் சின்னதாகக் கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் மாதிரி முடங்கிக் கிடக்கிற அவசியம் அவருக்கு இல்லை. அவர் ஐம்பொன்னால் ஆனவர். எனவே ஊர்ப் பெரியகுடியின் வீட்டு சாமி ரூமில் இருக்கிறார்.

அவரது வாகனமான குதிரை, ஐந்தாறு கிலோமீட்டர் தாண்டி, மலையடிவார மண்டபம் ஒன்றில் ஏகாந்தமாக இருக்கிறது. சித்திரை மாதத் திருவிழாவுக்கு அழகர்சாமி ஊர்வலமாக மலையடிவாரம் போய் தனது வாகனத்தில் ஏறி, மலையடிவாரம் தாண்டிய ஒரு காட்டாற்று மணலில் இறங்கி அருள்வார்.

பிறகு ஊர்வலமாக வந்து, கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மூன்று நாட்கள் கோலாகலத் திருவிழா. முதல் நாள் கரகாட்டம், மறுநாள் சமூக - சரித்திர நாடகம், மூன்றாம் நாள் பாட்டுக் கச்சேரி.

கேளிக்கைகள் குறைவாக இருந்த கிராமங்களில் திருவிழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடவுளருக்கு மகிழ்வு தந்து மக்களுக்கு மழை தருபவை.

ஆலமரத்தடி மண்டபத்தில் காளமேக வாத்தியாரது மொபெட் வந்து நின்றபோது, வரப்போகும் திருவிழா பற்றி மூன்று பேர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“என்ன பேசிட்டு இருக்கீங்க?”

“திருனா நெருங்குதில்ல வாத்யாரே.. இந்த வருசம் எந்த நாடகம் போடறதுன்னுதான்!” வாத்தியார் சுவாரஸ்யமின்றி, “என்னமோ அம்பது நாடகம் கைல இருக்கிற மாதிரிதான். வள்ளித்திருமணம், வீரபாண்டியக் கட்ட பொம்மன், கதம்ப காமிக்… இந்த மூணைத்தான் திரும்பத் திரும்பப் போடறோம். அழகர்சாமிக்கே ‘போர்’ அடிச்சுப் போயிருக்கும்!”

பேசிக்கொண்டு இருந்த மூவரில் ஒருவர் காரை வீட்டுப் பெருமாள். மற்றவர், சின்னச்சாமி. இன்னொருவர் கோவிந்தசாமி. மூவரும் வாத்தியாரை எரிச்சலுடன் பார்த்தார்கள்.

“ஏன் வாத்யாரே! நீயும் வருசா வருசம் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லித் தாற! நீ சம்பளம் வாங்கலையா? ஏன்யா இப்படிக் கூறு கெட்டவன் மாதிரி பேசற…? நீ எல்லாஞ் சொல்லிக் குத்து, இந்தூர்ப் புள்ளைக கரை சேரவா?” என்றார் கோவிந்தசாமி.

“நான் கிளம்பறேன்!” என்றார் வாத்தியார்.

“அட என்னய்யா… வந்த கையோட போறேங்கறே? கோவிச்சுக்கிட்டியா?”

”அதில்ல.. வேலை கிடக்கு!”

“அடேயப்பா.. எங்களுக்குத் தெரியாம, உனக்கு அப்படி என்னய்யா வேலை? ஊர்லயே ராசாகணக்கா இருக்கிறது நீதான்யா! மாசமானா கவுர்மென்டு சம்பளம். நிழல்ல உக்கார்ந்திருந்து வாழ்ற! இதுல, வருசத்துல முக்காவாசி நாளு லீவு!”

அடிக்கடி இவ்வாறான பொறாமைக் குரலை கோவிந்தசாமி வெளிப்படுத்துவார். அவருக்கு வாத்தியார் மீது லேசானதொரு விரோதம் உண்டு. அவர் வாத்தியார் வேலைக்குப் படிக்கப் போய், அது பிடிக்காமல் ஓடிவந்து, ஊரில் விவசாயம் பார்த்தவராம். தான் இழந்த வாய்ப்பைக் கண் முன்னே அனுபவிக்கிற ஜீவனான காளமேகத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் இடித்துப் பார்ப்பார்.

வாத்தியார், இந்தப் பாமரர்களை ஒரு பார்வை பார்த்தார். அறிவாயுதம் கொண்டு அவர்களை வீழ்த்த எண்ணி, “வீட்டுக்குப் போனா நாலஞ்சு புக்ஸைப் படிக்கலாம். பசங்களுக்குச் சொல்லித் தர்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். இங்க உக்காந்து வெட்டிக் கதை பேசறதுல என்ன பிரயோஜனம்?”

“வாத்தியார் பேச்சைப் பார்த்தியா? வருசம் பூரா இங்கன உக்காந்து, எங்ககூட வெட்டுப் புலி, தாயம் ஆடிட்டு, இப்ப திடுதிப்புன்னு மாத்திப் பேசறியே வாத்தியாரே… புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற ஆளு.. பேச்சு சுத்தம் வாணாமா?”

இன்றைக்குத் தனக்கு நேரம் சரியில்லை என்ற முடிவுக்கு காளமேகம் வரவேண்டியதாயிற்று. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

”ம்…! சம்சாரிக எல்லாம் இன்னிக்கு ஒரு விதமாகத்தான் பேசறீங்க. படிப்பு சொல்லிக் குடுக்கறவன் சாமி மாதிரி! அவனை மதிச்சுப் பழகணும். நீங்க பேசறதே இந்த லட்சணத்துல இருந்தா, நாலைக்கு உங்க புள்ளைங்க வாத்யாரை மதிக்குமா? கலிகாலம் வந்துருச்சு. மழை பெய்ய மாட்டேங்குதுன்னா, ஏன்? அம்புட்டுப் பேரும் இப்படிக் குணங்கெட்டு அலையிறதாலதான்!”

மூவரும் வாயடைத்தனர். என்ன இருந்தாலும் படித்தவனின் திறமையே திறமை என்று காளமேகம் தன்னை மெச்சிக் கொண்டார்.

அவர்களை அவர்களது ரூட்டிலேயே மடக்கியாயிற்று. (மூன்று பேரும் கலி முத்திப்போனது பற்றியும் மழை பொய்ப்பது பற்றியுமே தினமும் பேசிக்கொண்டு இருப்பார்கள்.)

“சரியாச் சொன்னீங்க வாத்யாரே!” அவர் முகத்தில் வருத்தம்.

இரண்டு வருடங்களாக ஊரில் மழை சரியில்லை. இயற்கைக்கு வஞ்சகம், சூது எல்லாம் இத்தனை வருசமாகக் கிடையாது. அது அப்பாவியாக இருந்தது. இப்போது அதுவும் மனுசனைப் போல் மாறிவிட்டதோ?

பெருமாளின் நெடிய அனுபவத்தில், ஆடி மாதமானால் மழை தேடிவரும். ஓடைகளில் தண்ணீர் கரை தொட்டுப் போகும். ஊரைச் சுற்றியிருக்கும் எட்டுக் கண்மாய்களிலும் நீர் நிறையும். பருத்தியும், நெல்லும், கரும்பும் மோட்டார் வைத்து ஒருபுறம் விவசாயம் செய்யும் அதே நேரம், காட்டு வெள்ளாமையாக சோளமும், மொச்சையும், எள்ளும், கடலையும், தட்டாம்பயிறுமாக.. ஊரில் யாரும் எதற்கு ஏமாந்து நின்றது கிடையாது.

தாகம் எடுத்தால், எந்த வீட்டு வாசலிலும் நின்று மோர் கேட்டு வாங்கிக் குடிக்கலாம். அது ஒரு காலம். இப்போது அப்படியா இருக்கிறது? ஊரில் எல்லார் வீட்டிலும், பாலை சொஸைட்டிக்காரனுக்கு விற்கிறார்கள். காலை நேரத்தில் சைக்கிளில் வந்து, கேன்களில் பீய்ச்சிக்கொண்டு போய்விடுகிறான். ’மனுசப்பய சனம் எல்லாத்தையும் காசை வெட்டுக் கணக்குப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு!’ என்று தனக்குள் எண்ணிக்கொண்ட பெருமாள், அழகர்சாமியின் கோயிலைப் பார்த்து வணங்கினார். அவருக்கும் வயது அறுபதாச்சு. ஒவ்வொரு சித்திரை பவுர்ணமியிலும் அழகர் ஆற்றில் இறங்குவதும், அந்த மூன்று நாட்களுக்குள் மழை பெய்வதும் தப்பாமல் நடந்து வருகிறது. போன வருசம் அப்படி நடக்கவில்லை. சாமி கோயிலில் இருந்த போதும் கூட மழை பெய்யவில்லை. கோயில் மறுநுழைவு எல்லாம் முடிந்து, சாமி திரும்பிப் போன பிறகுதான் கொஞ்சம் மழை பெய்தது.

“என்ன பெருமாளு, பலமான யோசனை?” என்றார் கோவிந்தசாமி.

“இந்த வருசம் அழகர் ஆத்துல இறங்கும்போது, கண்டிப்பா மழை பெய்யணும்டா கோயிந்து. நான் மனசுல நினைச்சு வச்சிருக்கேன்!”

“அண்ணே, அதுக்கு நீ நினைச்சாப் பத்தாது. அழகர்சாமியில்ல மனசு வைக்கணும்..!”

”இந்த எகடாசிப் பேச்செல்லாம் வேணாம். போன தடவை மழை பெய்யலன்னதும், நாங்க கமிட்டி கூடிப் பேசி சாமிகிட்ட குறி கேட்டோம். ‘வர்ற வருசம் திருவிழாவைச் சுத்த பத்தமா, விமரிசையா பண்ணனும்’னு வாக்கு வந்துச்சு. ‘குதிரையைச் செப்பனிடணும். வரி வசூலைக் கூட்டிப் போட்டு, ஜாம் ஜாம்னு கொண்டாடணும்’னு முடிவு பண்ணியிருக்கோம்!”

”அப்படியே…  வருசா வருசம் கூட்டிட்டு வர்ற அந்த கரகாட்டக்காரியையும், வள்ளித் திருமணம் நாடகசெட்டையும் மாத்திருங்க. போன வருசம் வந்திருந்த முருகனுக்கு வயது அம்பத்தஞ்சு. வள்ளிக்கு நாப்பத்தேழு!” என்றார் வாத்தியார்.

“ப்ச்…! நக்கல் பண்ணாத வாத்யாரே… எனக்கு சமயத்துல எம்புட்டுச் சங்கடமா இருக்கு, தெரியுமா? இப்புடியே போயிட்டு இருந்தா, ஊரு என்னத்துக்கு ஆகும்? தோட்டத்துல தண்ணி சுத்தமா கீழ போயிருச்சு!”

வாத்தியாருக்கும் அது தெரியும். பருவநிலைகள் மாறித்தான் வருகின்றன. புதுசுபுதுசாகக் காரணங்கள் சொல்கிறார்கள். ஒருமுறை டவுனில் ஒரு வேன் வைத்து, மழை பெய்யாததற்குக் காரணம் மரங்களை வெட்டுவதுதான்’ என்று சொன்னார்கள். அதை வந்து இங்கே சரியாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லை. இவர்களிடம் கேலிப் பேச்சு வாங்கியதுதான் மிச்சம்.

இவர்கள் பேச்சு தொடர்கையில் பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் தன் கூட்டாளி கனகுவோடு வந்தான். இரண்டு பயல்களும் பெருசுகளை சட்டை பண்ணாமல் வந்து மண்டபத்தின் வயர், சுவிட்சுபோர்டு மீட்டர்களைப் பார்வையிட்டனர்.

”ஏய்… இத்தினி பெரிய மனுசங்க இருக்கோம்… செருப்புக்காலோட அங்கியும் இங்கியும் போறியா?”

“மன்னிச்சுக்குங்க நைனா!” என்று செருப்பை அவிழ்த்தான் கனகு.

“என்னடா பண்ணப் போறீங்க?”

“நாளைக்கு இங்கன ஒரு நாடகம் போடலாமின்னு இருக்கோம்!” பெரியவர்கள் முகம் கறுத்தது. பெருமாளின் மகன் ராமகிருஷ்ணன் இரணியனுக்குப் பிறந்த பிரகலாதன் மாதிரி… ஆனால், நேர் எதிர்! கருடனைக் கண்டால் விரட்டி விரட்டிக் கும்பிடுகிறவர் பெருமாள். சாமியே கும்பிடாத தறுதலைப் பயல் ராமகிருஷ்ணன். கூடச் சேர்ந்திருக்கிற கனகு பற்றிப் பேசவே வேண்டாம். சரியான அரைக் கிறுக்கன். ரெண்டு பயல்களும் இப்போதுதான் காலேஜ் முடித்து கைலி கட்டி, ஊருக்குள் வெட்டிப் பொழுது ஓட்டித் திரிகிறார்கள்.

“ஏண்டா… போன தடவை நாடகம் போடுறோம்னு சொல்லி எங்களை எல்லாம் நக்கல் பண்ணீங்க. இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிறீங்களா? உதை வேணுமா ரெண்டு பேருக்கும்?”

”இல்ல பெரியப்பா… இது விஞ்ஞான விளக்க நாடகம்!”

“அடேங்கப்பா… எங்களுக்குத் தெரியாம என்னடா விளக்கம்?”

”பூமி எப்படி உருவாச்சுன்னு கதையும் பாட்டுமா சொல்லப் போறோம்!”

சின்னச்சாமி மெதுவாகக் கண்காட்டினார். கோவிந்தசாமி காதைக் கடித்தார். வாத்தியாரையும் கூப்பிட்டார். “இந்தப் பயலுக சிக்கல் புடிச்சவனுக. எதையாவது சின்னப்புள்ளைத்தனமா இழுத்து விவகாரமாச்சுன்னா வம்பு. பெருமாள்கிட்ட சொல்லிப் பயலைத் தட்டி வைக்கணும்!”

“அதாஞ்சரி” என்று தீர்மானம் நிறைவேறியது. மூவரும் அறிவித்தார்கள்….. “ஏலே இரண்டு பேரும் ஆளுக்குப் பத்து ரூபா வாங்கிட்டு டவுனுக்குப் போய் சினிமா பாருங்க. அதை விட்டுட்டு இந்தச் சில்லறைச் சோலி பார்த்துக்கிட்டுத் திரிஞ்சா நல்லது கிடையாது!”

“என்ன இப்படிச் சொல்றீங்க?”

“மேல பேசாதீங்கடா! ஓடிப்போங்க!”

அவர்கள் இருவரும் தொங்கிப்போன முகத்துடன் தமக்குள் குசுகுசு என்று பேசியபடியே, இவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போனார்கள்.

“என்ன, பயலுகளை ரொம்பக் கடுசாப் பேசிப்புட்டீங்க,” என்றார் பெருமாள்.

“பின்ன என்னண்ணே… வயசுப் பசக.. என்னமாச்சும் ஏழரையைக் கூட்டிப்புட்டா நமக்குத்தானே பிரச்சனை? சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க.. இந்தப் பய நீங்க பெத்த புள்ளை மாதிரியா இருக்கான்? ஒரு மட்டு மரியாதை கிடையாது. எதற்கெடுத்தாலும் பதிலுக்குப் பதில் பேசிக்கிட்டு…”

“ப்ச்! என்ன பண்றது கோயிந்து! எனக்குப் புத்திர பாவத்துல சனீஸ்வரன் இருக்கானாம். அடங்காத புள்ளைதான் பொறக்கும்னு எழுதியிருக்கு…” அவர்களது பேச்சு, தகப்பன்களுக்கு அடங்காத தறுதலைப் பிள்ளைகள் பற்றி வெகுநேரம் நடந்தது.

மூணு மணி வாக்கில், பெருமாள் எழுந்தார். வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டார்.

“திருவிழாவை நல்லா நடத்தணும். குதிரைக்கு பெயிண்ட் அடிக்கணுமில்ல? வாங்க, நாலு பேருமாப் போயி கதவைத் திறந்து குதிரைய துடைச்சிட்டு, அப்படியே என்ன செலவாகும்னு வெளில விசாரிச்சிட்டு வந்துடலாம்.”

பெருமாள், சின்னச்சாமி, கோவிந்தசாமி, காளமேகம் நால்வரும் இரண்டு மொபெட்களில் கிளம்பினார்கள். வாத்தியாரது மொபெட்டின் பின்னால் பெருமாள் இருந்தார். போகையில் வாத்தியார் கேட்டார்… “எதுக்குப் பெருமாள் திடுதிப்புன்னு கிளம்பினீங்க.. குதிரையைப் பாக்கறதுக்கு?”

பெருமாள் கனமான குரலில் சொன்னார்… “கொஞ்ச நாளா மனசே சரியில்லை… வாத்யாரே! சாமிக்கும் பூமிக்கும் நம்ம மேல கோவம் வந்திருச்சுடானு நாலு நாள் முன்னாடி எங்க அம்மா சொல்லுச்சு. நூறு வயசு ஆச்சு அதுக்கு! அது சொன்னது என் மனசில சாமி வாக்கு மாதிரி பட்டுச்சு. எப்படியாச்சும் இந்த வருசம் நல்லவிதமா ஊர் கூடி, அந்த அழகர் கால்ல விழுந்து, ‘எங்க தப்பையெல்லாம் மன்னிச்சிரு ஆண்டவா!’ன்னு  சொல்லணும். மழை பிச்சிக்கிட்டுப் பெய்யணும். அதுவரைக்கும் நான் திங்கிறது சோறு கிடையாது
வாத்யாரே!”

மலையடிவாரத்தை அடைந்தார்கள். மாலை நாலு மணி இருக்கும். சாயங்கால வெயில் கண்களைக் கூசியது. மலையடிவாரம் ஆதலால் குளிர்ந்த காற்றும், லேசான பச்சிலை
வாசனையும் அடித்தன. பெருமாள் சட்டென்று தோள் துண்டை எடுத்து, இடுப்பில் அனிச்சையாகக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் போட்டபடி மண்டபத்தை நோக்கி நடந்தார். மண்டபத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். துருப்பிடித்த பூட்டு சங்கிலி ஓரமாகக் கிடக்க, பீடம் காலியாக இருந்தது. ஏழெட்டு பீடித் துண்டுகள் ஓரமாகக்
கிடந்தன. கடவுள் இன்னும் சில தினங்களில் ஏறி வரும் வாகனம் இருந்த இடம் வெறுமையாக இருந்தது.

அழகர்சாமியின் குதிரையைக் காணவில்லை!

ஊர் அரண்டுபோனது. ஊழிக்காலம் வந்துவிட்டது போன்றதொரு பதற்றம் கிளம்பியிருந்தது.
தாமரைக்குளத்தில் சைக்கிள்கள் திருடு போயிருக்கின்றன. அதெல்லாம் மனித
வாகனங்கள். ஆனால், இப்போது காணாமல் போனதோ கடவுளின் குதிரை! இந்த ஊரையே கட்டிக்
காத்துக் காவல் புரிகிற அழகர்சாமியின் குதிரையைத் திடீரெனக் காணோம் என்றால்…

”இப்ப நடந்திருக்கிறது சாதாரண விஷயமில்ல… கும்பிடற சாமியோட வாகனத்துல கை
வெச்சுட்டானுக.. நாம இத்தனை ஊர் சனம் இருந்தும் சாமியோட ஒத்தைக் குதிரையைப்
பாதுகாக்க முடியலைன்னா எப்படி… அசிங்கமால்ல..?”

ஊர்க்கூட்டத்தில் கோவிந்தசாமி பொருமியபோது ராமகிருஷ்ணன் எழுந்தான். “என்ன
இப்படிப் பேசறீங்க? ஏழு ஊர் சனத்தையும் சாமிதான் பாதுகாக்குதுனு இம்புட்டு நாளா
சொல்லிட்டு இருந்தீங்க” என்றான்.

“வாயில போடுய்யா அவனை. இவனை மாதிரி தலைப்பிரட்டுப் பசங்க பயலுகளாலதான்
இப்படியெல்லாம் நடக்குது” நாலைந்து பேர் ராமகிருஷ்ணனை அடிக்கப் பாய்ந்தனர்.
சிலர் விலக்கினார்கள். சிறிய தள்ளுமுள்ளுக்குப்பின் அமைதி நிலவியது.

“அமைதியா இருங்கப்பா. பிரச்னையாகிப் போச்சு. என்ன பண்ணலாம்னு பேசறதுக்குக் கூடி
இருக்கோம். குழப்பம் பண்ணாதீங்க,” வாத்தியார் அமைதிப்படுத்தினார்.

“ஊரு கெட்டுப்போச்சு. எந்தக் காட்டுக் களவாணிப் பயலோ சாமியையே நடக்க விடணும்னு
யோசனை பண்ணி இப்படிக் கூத்துப் பண்ணிட்டான். இதுக்கு முன்னாடி சாமி வாகனத்துல
யாரும் கை வெக்கத் துணிஞ்சது கிடையாது.”

”என்ன வாத்தியாரே சொல்றீங்க? இதுக்கு முன்னால நம்மூர்ல ஏழெட்டு எருமைமாடுக
காணாமப் போகலையா? எமதர்மராஜனோட வாகனத்தையே ஓட்டிட்டுப் போயி பாலைப்
பீய்ச்சிட்டாங்க. களவாணிப் பயக. அழகருக்குப் பயப்படுவாங்களா?”

”கூறு இல்லாமப் பேசாதய்யா… அதெல்லாம் நிசமான எருமை. இப்ப காணாமப்
போயிருக்கிறதோட மதிப்பென்ன… மரியாதை என்ன?”

தாமரைக்குளத்திலும் மூலத்தைவிட மாதிரிக்குத்தான் மரியாதை. குதிரையை உருவாக்கிய
கண்ணு ஆசாரி கலங்கிய கண்களுடன் முன்னே வந்தார். “என் உசுரைக் குடுத்து செஞ்ச
குதிரைய்யா. அதைத் தொட்டவன் கை மரக்கட்டை மாதிரி ஆகிப்போகும். இது என் தொழில்
மேல சத்தியம்!”

”சாபம் விடறதெல்லாம் சரிப்பா..” என்று பெருமாள் வாய் திறந்தார். ”அடுத்து என்ன
செய்யணும்? அதைப் பத்திப் பேசுவோம். வாத்தியாரே.. விவரமானவரு நீங்க
சொல்லுங்க..”

காளமேகம் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து தொண்டையைச் செருமினார். ”இல்லாத
ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரைங்கிற மாதிரி…”

‘வாத்தியார் தன்னைக்குறித்து ஏன் பேச ஆரம்பிக்கிறார்?’ என்று ராமகிருஷ்ணனும்
கனகுவும் நினைத்தார்கள்.

“…. குதிரையில்லாட்டி பரவாயில்லை. சாமிய மட்டும் வெச்சு இந்த முறை சாமி
கும்பிட வேண்டியதுதான்…”

“யோவ்… குதிரை காணாமப் போனதுக்கு என்ன மேல் நடவடிக்கை?, அப்படிங்கறதை
பேசுவியா அதை விட்டுட்டு…”

வாத்தியார் சுதாரித்தார். “மேல் நடவடிக்கை தான… போலீஸ் கம்ளைண்ட்
குடுத்திருவோம்.”

“சரி, அப்புறம்….?”

”அப்புறம் என்ன, சப்பரம் வெச்சு சாமியத் தூக்க வேண்டியதுதான்.”

“கோட்டி புடிச்ச வாத்தி, குதிரையில்லாம ஊர்வலம் போனா அது அழகரே கிடையாதுய்யா!”

கனகு, ராமகிருஷ்ணன் காதைக் கடித்தான். “பாத்தியாடா! வாகனத்தை வெச்சிதான்
சாமிக்கு மரியாதை. மயில் இருந்தாத்தான் முருகன். குதிரை இருந்தாத்தான் அழகரு…
பனி இல்லாத மார்கழியா.. படை இல்லாத மன்னவரா?” என்று மெதுவாகப் பாடினான்.

“கரெக்ட்தானடா, தொப்பியும் கூலிங்கிளாசும் இல்லாம நாம எம்.ஜி.ஆரை நினைச்சுப்
பாக்க முடியுதா?”

இளைஞர்கள் இருவரும் தமக்குள் பேசிச் சிரிப்பதை கோவிந்தசாமியின் கண்கள்
கவனித்தன. அவர் சின்னசாமியின் காதில் கிசுகிசுத்தார். இருவரும் தமக்குள் ஏதோ
பேசிக்கொண்டார்கள்.

பெருமாள் இறுதி அறிவிப்புக்காக தொண்டையைச் செருமினார்.

“சரி… போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிர வேண்டியது. அதுக்கப்புறம் நல்ல நேரம்
பாத்து குறி கேக்க வேண்டியது. சம்மதந்தானா எல்லாருக்கும்?”

குறி கேட்கிற யோசனை உடனே ஏற்கப்பட்டது.

“ம்.. நம்ம ஊர் கோடாங்கியை வெச்சு அடிச்சுக் கேட்டுரலாமா?”

“அது சரியா வராதுங்க. வெளியூர் ஆளைக் கூட்டிட்டு வாங்க. மலையாளத்து ஆளுன்னா
மையைப் போட்டு கரெக்ட்டா சொல்லிருவான்.”

“அதுவும் சரிதான். உள்ளூர்க் கோடாங்கியை இதுல சம்மந்தப் படுத்தறது பல
வகையிலயுஞ் சிக்கல். அந்தாளு, சரியா சொல்லிட்டாச் சரி. ஒருவேளை தப்பா கிப்பா
சொல்லிட்டான்னா பேரு கெட்டுப் போயிரும்ல.. நாளப்பின்ன பொய் சொல்லிப் பிழைக்க
முடியாதில்ல. என்ன கோடாங்கி?” ஒரு பெரிய மனுஷன் விளையாட்டாகச் சொல்ல, உள்ளூர்
கோடாங்கிக்கு சட்டென்று கோபம் தலைக்கேறி விட்டது. அவர் எழுந்த வேகத்தில் குடுமி
அவிழ்ந்து தொங்கியது. அகலக் குங்குமப் பொட்டும் அவிழ்ந்த கூந்தலுமாக ஆம்பளை
பாஞ்சாலி போல் சூளுரைத்தார்.

”அவமானப்படுத்தறீங்களா என்னைய? ஏய்… இந்த ஊர்லயே எனக்குத்தாண்டா அருள்
இறங்கும்…. பாரு! என்ன நடக்குதுன்னு பாரு. யார் யாரு என்ன ஆகப் போறீங்கனு
பாரு.. எந்தச் சீமையிலிருந்து எந்தக் கொம்பனைக் கொண்டுவந்தாலும் சரி…  என்
துணை இல்லாம வாகனம் கிடைக்காது. எழுதி வெச்சுக்கங்கடா மாப்ளைகளா?” போறேன்
போறேன் என்று ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தையைச் சபையில் உதிர்த்துவிட்டு,
கோடாங்கி வெளியேறினார்.

வருத்தத்திலிருந்த பெருமாளின் முகம் மேலும் கறுத்தது.

“இத பாருங்கப்பா… ஊருக்கே நேரம் சரியில்லாமதான் என்னென்னமோ நடக்குது. சும்மா
இருந்த கோடாங்கிய இப்படி அசிங்கப்படுத்தி விரட்டி விட்டுட்டீங்களே!…
அவங்கவங்க கொஞ்சம் வாய அடக்குங்க ஏன்யா சிக்கலைப் பெருசாக்கிறீங்க?”

”சரிங்கையா, பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாதிரிம்பாங்க.. பெருமாளே
சொல்லிட்டீங்க. அப்புறமென்ன?”

”முதல் வேலையா டேசன்ல போய் ஒரு பிராது குடுத்திருவோம். யார் யாரு வர்றீங்க?”
துடிப்பாக இருந்த கூட்டத்தினர் இதற்குத் தயங்கினார்கள். உள்ளூரில் ஆயிரம் வீரம்
பேசினாலும் போலீஸென்றால் உள்ளூர பயம்தான்.

“என்னப்பா சத்தத்தையே காணம்?”

”முக்கியஸ்தர்கள்லாம் போங்க. எதுக்கு கண்டவங்களையும் கூப்பிட்டுக்கிட்டு.”

“ம்.. வாத்தியாரு, நான், சின்னசாமி, கோவிந்தசாமி, கண்ணு ஆசாரி அஞ்சு பேரும்
போறோம்.. என்னா.”

ஊர் தலையாட்டியது.

தலைவிரிக்கோலமாக வந்த கோடாங்கியைப் பார்த்ததும் சரசம்மாளுக்கு எரிச்சல்
மேலிட்டது. “ஏய்.. கூறுகெட்ட மனுசா! எதுக்கு இப்ப அவுத்துப் போட்டுக்கிட்டு
வர்ற? பொம்பளைக பாத்தா கேலி பண்ணிச் சிரிப்பாளுகளா.. மாட்டாளுகளா?”
கோடாங்கிக்குச் சுருக்கென்றது. கீழே பார்த்தார். வேட்டியெல்லாம்
ஒழுங்காய்த்தானிருக்கிறது. ”என்னடி சொல்ற பொச கெட்டவளே எல்லாம் ஒழுங்காய்த்தான
இருக்கு?”

“அடச்சீ.. குடுமியைச் சொன்னேன்யா! பொட்டச்சி கெணக்கா இப்படி
விரிச்சுப்போட்டுட்டு வர்றியே, பெத்த பிள்ளை வளந்து முருங்கை மரம் மாதிரி
நிக்குது…. நீ இன்னும் இப்படி இருக்கியே!”

கோடாங்கி பெரிய மீசையுடன் இருந்தாலும் சரசம்மா அவரைத் தன் வீட்டுக்
கன்னுக்குட்டி அளவுக்குத்தான் மதிக்கிறாள்.

கோடாங்கி தட்டி, பாட்டுப் பாடி, குறி சொல்லி, மந்திரித்து… வசியம், தாயத்து,
பில்லி, ஏவள் என்று பல வகையிலும் ஊரையும், ஊருக்குள் திரியும் அல்பாயுசு
ஆவிகளையும் அச்சுறுத்தி என்ன பயன்? கட்டின மனைவியை வசியம் பண்ணவோ, வாயைக்
கட்டவோ இயலாத மனிதனாகத்தான் கோடாங்கி இருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு பெண்.
அவளுக்கு மாரியம்மா என்று கோடாங்கி பெயர் வைத்தார். ஆனால் சரசம்மா தனது
‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெயரைச் செல்லமாக்கிவிட்டு தேவி
என்றழைக்க அந்தப் பெயர்தான் துலங்கியது என்றாலும் கோடாங்கி மட்டும் அவளை
வீட்டுக்குள் மாரி என்றுதான் அழைத்து வந்தார்.

“மாரி எங்கே?” கோடாங்கி குரலில் எரிச்சல்.

”அவளை எதுக்குத் தேடுறீங்க?”

”வெந்நீர் வெக்கச் சொல்லணும். குளிச்சுட்டு பூஜை கட்டப்போறேன்… காட்டேரி
பூஜை!”

“அது எதுக்கு?”

“என்னை இளக்காரமாப் பேசுனவங்களை நாக்குத்தள்ள வைக்கப் போறேன். சபையில் வெச்சுக்
கிண்டல் பண்ணிப்புட்டானுக.. அவனுக நாக்கைச் சுருட்டி உள்ள இழுக்கிற மாதிரி ஒரு
பூஜை போடப் போறேன். காட்டேரித் தாயே! அம்மா! காட்டேரி…” கோடாங்கியின் உடல்
வியர்த்தது. மூச்சு உஸ்ஸென்று பாம்பின் சீறலாக வெளிவந்தது. சரசம்மா
வெகுநிதானமாக கோடாங்கியை ஏற இறங்கப் பார்த்தாள்.

”சுடுதண்ணியெல்லாம் வைக்க முடியாது. உனக்கு சுடுதண்ணி வெச்சே விறகெல்லாம்
தீந்து போகுது. அப்புறம் சோறு வடிக்கிறது எப்படி? பேசாம பச்சத்தண்ணியில குளி!”

“வெந்நீர்லதான் குளிக்கணும்… நீ போட்டுத் தரவேணாம். எங்க என் பொண்ணு?
அதுகிட்ட சொன்னா போட்டுக்குடுக்கும். பூஜை கட்டணும்னு சொல்றேன்ல?”

“குடுப்பா குடுப்பா.. எதை வெச்சு போட்டுக் குடுப்பா? இதோ பாரு. நீ பூஜை கட்டு,
கூட இன்னொரு பொண்டாட்டியும் வேணா கட்டு. சுடுதண்ணி வேணும்னு என் தாலிய மட்டும்
அறுக்காத. விறகு ஒடிச்சே என் இடுப்பு ஒடிஞ்சு போச்சு!”

“மாரி எங்கே? அதைச் சொல்லு.”

“அவ எங்கயோ தோட்டத்துக்குப் போனா, கீரை பிடுங்கிட்டு வர்றதுக்கு…”

வேறு வழியின்றி கோடாங்கி பச்சைத் தண்ணீரை எடுத்துத் தலையில் ஊற்றினார். அவர்
சர்வீஸில் பார்த்த எல்லா காத்து கருப்புகளையும்விட கடுமையான பெண் யாரென்றால்,
அது சரசம்மாதான்!

கோடாங்கியின் மனதில் சரசம்மா, காட்டேரி, சில குறளிப் பேய்கள் மற்றும் சில
காத்துக் கருப்புகள் ஓடிக்கொண்டு இருந்த அதே நேரத்தில், ஊரைத்தாண்டி
விலகியிருந்த குளத்தின் கரையில் ஒரு சைக்கிள் போய்க்கொண்டு இருக்கிறது.
பெருமாளின் மகனான ராமகிருஷ்ணன் ஓட்டுகிறான். முன்புற பாரில், மாரி
அமர்ந்திருக்கிறாள்.

காதல் சிட்டுகள் சைக்கிளில் விரைந்துபோய் தோப்புக்குள் மறைகின்றனர். ஆள்
காட்டிப் பறவைகளான கனகுவும், சீரங்கனும் தோப்பின் வேலியோரம் மாங்காய்ப்
பிஞ்சுகளைப் பொறுக்கித் தின்றபடி காவல் இருக்கின்றனர். ஊரில் என்ன களேபரங்கள்
இருந்தாலும் இப்படியாகப்பட்ட விஷயங்கள் ஒருபுறம் சத்தம் இல்லாமல்
நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

போலீஸ் ஸ்டேஷன், டவுனில் நடுநாயகமாக அமைந்து இருந்தது. ஸ்டேஷனுக்குப் போகணும்
என்றாலே ஒரு பயம் சூழ்ந்து நா வறண்டுவிடுகிறது. ஐந்து பேரும் ஸ்டேஷனுக்குள்
நுழைந்தபோது ஏட்டய்யா மட்டும் இருந்தார்.

“வணக்கங்க…”

“ம்.. வாங்க. என்னா சமாசாரம்?”

“தாமரைக்குளத்திலிருந்து வர்றோமுங்க… ஒரு பிராது குடுக்கணும்…”

“என்ன… பிராது… எதுவும் கொலை பழி ஆயிப்போச்சா?”

“சேச்சே, அதெல்லாமில்லீங்க.. குதிரை காணாமப்போயிருச்சுங்க!”

ஏட்டு மேலும் கீழுமாகப் பார்த்தார். “ஏன்யா… இதென்ன போலீஸ் ஸ்டேஷனா, மாட்டுத்
தாவணியா? குதிரை காணம்னா தேடிப்பாருங்க. கழுத எங்கயாவது மேஞ்சுக்கிட்டு
இருக்கும். இங்க எதுக்கய்யா வந்தீங்க?” அதட்டினார் ஏட்டய்யா.

இவர்களுக்கு உதறியது. என்னதான் உள்ளூர்ப் பெரிய மனிதர்கள் என்றாலும் காக்கி
உடைக்கென்று ஒரு கலவரம் இருக்கிறது.

“ஏதாச்சும் அடிதடி வெட்டுக் குத்துன்னா பரவாயில்ல. ரூவா, நகை திருடுபோனா பரவா
இல்ல.. குதிரை காணாமப் போச்சு ஆட்டுக்குட்டி காணாமப் போச்சுனு இங்க வந்தா
எப்படி…? எங்கள என்ன அதிகாரினு நினச்சியா? ஆடு மேய்க்கிறவன்னு நினச்சியா?”
இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏட்டய்யா இடைமறிக்காமல் இருந்தால்
ஒட்டுமொத்த விவரத்தையும் கொட்டிவிடலாம். நெஞ்சுக்குள் இருக்கிறது. கோர்வையாக
வரவில்லை.

“யாருதுய்யா குதிரை?”

“அழகர்சாமியோடதுங்க!”

“யாருய்யா உங்கள்ல அழகர்சாமி?” இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

”உங்கள்ல யாருமே அழகர்சாமி இல்லையா… முழிக்கறீங்க?”

“இல்லீங்க.”

“பறிகுடுத்த ஆளு வராம நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்க?”

காளமேகம் சுதாரித்து, “சார்… அழகர்சாமிங்கறது சாமிங்க! சித்திரைத்
திருவிழாவுல வருவாரே.. அவருங்க.”

ஏட்டய்யா எரிச்சலுடன் எழுந்து முறைத்தபடி காளமேகத்தின் அருகே வந்தார்.

“ஊதுய்யா!”

காளமேகம் திகைப்பாய்… “எதுக்குங்க சார்?”

“ஊது சொல்றேன்.. வரவர ஸ்டேஷனுக்கு வர்றோம்ங்கிற மட்டுமரியாதையில்லாம தண்ணி
அடிச்சிட்டா வர்றீங்க.. ஊது முதல்ல…!” என்றபடி மூஞ்சியை வாத்தியாருக்கு நேரே
நீட்டினார்.

வேறுவழியின்றி வாத்தியார் ஊதினார். ஊதச் சொன்னது பெருந்தவறென்று ஏட்டய்யா
உணர்ந்தார். மூக்குப்பொடி வாசம், ஒரு விதமாக அடித்து வயிற்றைக் குமட்டியது.

“எனக்குக் குடிக்கிற பழக்கம் இல்லீங்கய்யா.”

“எழவெடுத்த மனுசா.. குடிச்சவன்கிட்டகூட இம்புட்டு வீச்சம் அடிக்காது. ச்சேய்!”

அப்போது எஸ்.ஐ. உள்ளே நுழைந்தார். “என்னய்யா விஷயம்?”

“அய்யா.. குதிரையக் காணோம்னு பிராது குடுக்க வந்திருக்காங்கய்யா,

தாமரைக்குளத்திலிருந்து.”

எஸ்.ஐ. சிரித்தார். “ஏங்க.. தேடிப் பாக்கிறதை விட்டுட்டு இதுக்கெல்லாமா
ஸ்டேஷனுக்கு வர்றது?”

பெருமாள் தீர்மானித்தார். தடுமாறாமல் பேசும் உறுதியுடன் துவங்கினார். ”அய்யா,
காணாமப் போனது குதிரையில்லீங்க!”

“யோவ்! இப்பதான சொன்ன. அதுக்குள்ள மாத்திப் பேசற?” ஏட்டய்யா பதறினார்.

“இல்லீங்கய்யா, குதிரைதான் காணாமப் போனது. ஆனா, நிஜக் குதிரை இல்லீங்க. குதிரை
வாகனம். அழகர்சாமியோடது. ஊருக்கு வெளியே மலையடிவார மண்டபத்துல இருந்துச்சு.
அதைத்தாங்க காணோம்.”

ஏட்டய்யா, ‘அடடா, சாமி சமாசாரம்! இது தெரியாமப் பேசிட்டோமே..’ என்று மனசுக்குள்
பதறியபடியே, “ஏன்யா… முதல்லயே விவரமா சொல்ல வேணாமா?” என்றார்.

எஸ்.ஐ. யோசித்து, “ம்… சரி, என்ன நடந்ததுன்னு ஒரு புகார் மனு எழுதிக்
குடுங்க!” என்று சொல்ல, காளமேகம் வாத்தியார் அமர்ந்து மனு எழுதினார்.

எஸ்.ஐ. சற்று தீவிரமாக யோசித்தவர் மெதுவாகக் கேட்டார். “ஏங்க… குதிரை
திருடுதான் போயிருக்கும்னு நினைக்கிறீங்களா?”

”ஆமாங்க! ரெண்டாள் சேர்ந்துதான் அதை நகர்த்தவே முடியும். நல்ல வெயிட்டான
குதிரை. கெட்டியான மரத்துல செஞ்சது.” என்றார் கண்ணு ஆசாரி.

“ம்.. அது சரி! அதை எதுக்குய்யா ஒருத்தன் திருடணும்! அதை வெச்சு என்ன பண்ண
முடியும். என்ன பிரயோஜனம் அதனால!”

ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உண்மைதான்.. மரத்தாலான குதிரையால்
அந்த அழகர்சாமிக்கு மட்டும்தான் பிரயோஜனம். மனிதர்களுக்கு அதனால் ஆகக்கூடிய
பயன் என்ன?

“உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?”

வீராச்சாமியும் சின்னச்சாமியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். வீராச்சாமி
பெருமாளைப் பார்த்தார்.

“எங்க மனசுல ஒண்ணு இருக்கு பெருமாளு.. அதை அய்யாகிட்ட சொல்லலாமா.”

”தாராளமா சொல்லுங்க.. இதென்ன கேள்வி?”

“சரி.. பொது விஷயம்.. அதனால நான் தாட்சணியம் பார்க்காமச் சொல்றேன். இதோ
இருக்காரே பெருமாளு… இவர் மகன் இராமகிருஷ்ணன் மேலயும், அவன் கூட்டாளிக
மேலயும் சந்தேகம் இருக்குங்க..”

பெருமாள் திடுக்கிட்டார். ’தான் மனுநீதிச் சோழனாக மாற வேண்டிவருமோ?’
சற்று நேரம் அமைதி நிலவியது. கண்ணு ஆசாரி தொண்டையைச் செருமினார். “சீச்சீ..
இருக்காதுங்க. எங்க ஊர்ப் பயலுக இந்தக் காரியத்தைச் செய்யாதுங்க. அருமையான
மரத்துல செஞ்ச குதுர.. வந்த விலைக்கு வித்துக் காசு பார்த்துரலாம்னு எவனோ
களவாணிப் பய செஞ்ச காரியமா இருக்கும்?”

பெருமாளுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. நண்பர்கள் சுமத்திய பாவத்திலிருந்து
கண்ணு ஆசாரி அவரை ரட்சித்துவிட, ஆசாரியை விசுவாசத்துடன் நோக்கினார் பெருமாள்.

எஸ்.ஐ. எல்லோரையும் குழப்பத்துடன் பார்த்துவிட்டுச் சொன்னார். “ரூமுக்குள்ள
இருக்கேன். ஒவ்வொருத்தரா உள்ள தனித்தனியா வரணும். வந்து அவங்க மனசுல உள்ளதை,
யாரு மேல சந்தேகம் என்ன விவரம்கிறதை தெளிவா சொல்லணும். என்ன?”

”சரிங்க சார்!”

எஸ்.ஐ. அறைக்குள் சென்று அமர்ந்தார்.

ஐந்து பேரும் தனித்தனியே உள்ளே போய் பேசிவிட்டு வந்தனர். தாமரைக்
குளத்துக்காரர்களிடம் தான் இந்த யுக்தியைப் பயன்படுத்தியது அசல்
பைத்தியக்காரத்தனம் என்று எஸ்.ஐ. புரிந்து கொண்டார். ஐவரின் கற்பனைவளமும் எல்லை
மீறியதாக இருந்தது. அது உள்ளூர் பெருமாள்  மகனில் துவங்கி, பக்கத்து ஊர்,
பக்கத்து மாநிலம் வரை  விரிந்தது. எஸ். ஐ.க்கு தலை சுற்றியது. ஏட்டையாவை
அழைத்தார்.

”அய்யா… ஏதும் க்ளூ கிடைச்சதுங்களா?”

“நீ வேற… அவனுக உன்னையும், என்னையும் தவிர எல்லாரைப் பத்தியும் சந்தேகமாச்
சொல்றாங்க!”

“அப்படிங்களா”

“யோவ் ..இதுல என்ன சிக்கல்னா இந்தப் பிரச்சினைய வச்சு இவங்களுக்கும் பக்கத்து
ஊர்க்காரங்களுக்கும் சண்டை வரதுக்கும் சான்ஸ் இருக்கு,பொதுப் பிரச்சினை,கலவரம்
அப்படி இப்படின்னு சிக்கலாயிரக்கூடாது. அதனால நீயும் வேலுவும் பொய் அங்க டூட்டி
பாருங்க,ஊர்லையே இருக்கணும்,அது தவிர மப்டி யில் ஒரு ஆளை அங்க
நிப்பாட்டனும்,அப்பத்தான் ஏதாச்சும்  துப்பு கிடைக்கும்!”

“சரிங்கய்யா.. நம்ம கான்ஸ்டபிள் கைலாசத்துக்கு அந்த ஊர்லதாங்க பொண்ணு
எடுத்திருக்கு. நம்ம சந்திரனை அந்த வீட்டுக்கு விருந்தாளி மாதிரி அனுப்பிரலாம்.
யாருக்கும் சந்தேகம் வராதுங்கய்யா!”

அடுத்த அரைமணி நேரத்தில் ஏட்டும், கான்ஸ்டபிள் வேலுவும் உடுப்புடன் ஆலமரத்தடி
மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள். மஃப்டி போலீஸ் சந்திரம் மஞ்சள் பையுடன்
விருந்தாளி போல வந்து ஊருக்குள் இறங்கினார்.

குறி கேட்க ஊர்சனம் கூடி இருந்தது. வெளியூர் ஆள் மண்டபத்தில் அமர்ந்திருந்தா.
அவன் முன்னால் வெள்ளியால் செய்யப்பட்ட நாகமும், கறுப்பு நிற வழவழப்பான கல்
ஒன்றும் இருந்தன. தவிர, இடதுபுறம் நரியின் தலை ஒன்று வைத்திருந்தான்.

சிறுவர்கள் அதனை ஆர்வமும் குறுகுறுப்புமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
உள்ளூர்  கோடாங்கி அவர் வீட்டுத் திண்ணையில், கைவிடப்பட்ட அநாதையாக
உட்கார்ந்திருந்தார். சரசம்மாவும் மாரியும் கிளம்புகிற அவசரத்தில் இருந்தனர்.

சரசம்மா இரண்டாம் முறையாக கண்ணாடி பார்க்க, ஏற்கனவே ஃபுல் மேக்கப்பில் இருந்த
மாரி மீண்டும் ஒரு முறை கண்ணாடியை தாயிடமிருந்து பிடுங்கி ஸ்டிக்கர் பொட்டைச்
சரியாக ஒட்டினாள்.

கோடாங்கி குமுறினார். “ஏலா! இந்த ஊர்ப் பயக என்னைய மதிக்காம வெளியூர்ல இருந்து
குறிகாரனைக் கூட்டிட்டு வந்திருக்காங்களேனு நான் வயிறெரிஞ்சு
உக்கார்ந்திருக்கேன்.. நீயும் உன் மகளும் சிங்காரிச்சிக்கிட்டு அங்கன
போறிங்களா?”

”ஏன் , போனா என்ன? உன்னைய யாரு திண்ணைய தேய்ச்சுக்கிட்டு உக்காரச் சொன்னது?

நீயும் வந்து உன்னையொத்தவன் எப்படி குறி சொல்றான்னு  பாத்துத் தெரிஞ்சுக்க!”

“ஏய்… எதைப் பத்தி வேணாப் பேசு.. எந்தொழிலைப் பத்தி தாழ்ச்சியாப் பேசாதே!
இந்தக் காலத்துல பகட்டுக்குத்தாண்டி மதிப்பு. என்னை மாதிரி தொழில்காரனை
இருபத்தேழு ஜில்லாவுலயும் பாக்க முடியாது.. தெரிஞ்சுக்க!”

மாரி தந்தையைப் பரிதாபத்துடன் பார்த்தாள். இது அவரது வழக்கமான வசனம்.
இருபத்தேழு ஜில்லா என்று வருசக்கணக்காக சொல்லிக்க்கொண்டு இருக்கிறார், அது
தப்பான தகவல் என்று தெரியாமலேயே! அவர் குறி சொல்லும் லட்சணமும் இப்படித் தான்
என்று ஊர் மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.

”உங்காத்தாதான் புத்தி கெட்டுப் போறா, நீயுமா மாரி? என் மகளா இருந்துக்கிட்டு
அசலூர்க்காரன் என்ன சொல்றான்னு கேக்கப் போலாமா?”

மாரி திரைப்படங்களின் பாதிப்பில். “உங்களை மாதிரி உள்ளவங்க மனசுல போட்டி
இருக்கலாம். பொறாமை இருக்கக்கூடாதுப்பா” என்றாள். அஜீத்திடமோ, விஜய்யிடமோ
இதைச்  சொல்கிற பாவனையில்!

“என்னமோ பண்ணித் தொலைங்க” என்று பெருமூச்சு விட்டார் கோடாங்கி. சரசம்மாவும்,
மாரியும் கிளம்பினார்கள்.

கூட்டத்தில் மாரியின் கண்கள் ராமகிருஷ்ணனைத் தேடின. கனகு, சீரங்கனுடன் ஓரமாக
நின்று சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு மாரியைக் கண்டதும் முகம்
பிரகாசமடைந்தது.

“ம்… சொல்லுங்க! இப்ப என்ன தெரியணும்?” என்றான் குறிகாரன். தமிழ் சுத்தமாக
இருந்தது.

“சாமிக்கு மலையாளம்தானா?”

”ஏன் கேக்கிற?”

“பேச்சைப் பாத்தா மலையாளம் மாதிரி தெரியலையே?”

“நான் எல்லா ஊருக்கும் போறவன். எல்லாப் பேச்சும் எம் பேச்சுதான். எல்லா ஊர்த்
தண்ணியும் என் தண்ணிதான்.. புரியுதா?” என்றவனின் கண்கள் சிவந்திருந்தன.

இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். பாட்டில் பத்திரமாயிருந்தது.

கனகு சொன்னான். “ராமகிருஷ்ணா, இவன் நிச்சயம் மலையாளத்து மந்திரவாதி கிடையாது.

சரியான ஃப்ராடு மாதிரி இருக்கான். இவனைக் கூப்பிட்டு வந்த ஆள் யாரு?”

“முனியாண்டிதான் கூப்பிடப் போனாப்ல” என்றான் சீரங்கன்.

“அப்ப சரிதான்! வாங்கிட்டுப் போன காசுல கொஞ்சத்தை ஒதுக்கிட்டு சீப் ரேட்ல
இவனைக் கூட்டிட்டு வந்துட்டான் போலருக்கு!”

குறிகாரன் கண்ணை மூடி தியானித்து, பிறகு கண் திறந்தான்.

“சொல்லுங்க… என்ன தெரியணும்?”

“வாகனம் போன திசை… வழி தெரியணும். சாமி குத்தம் எதுவும் வந்திரக்கூடாது.

ஏற்கனவே ஊர்ல மழைத் தண்ணி குறைஞ்சு போயி சம்சாரியெல்லாம் சிரமப்படறோம்ங்க!”

“ம்…….” மறுபடி கண்களை மூடினான்.. திறந்தான்.

“வாகனம் காணாமப் போனது சாமியோட விளையாட்டு! நீங்க சரியானபடி சாமியை நினைக்கலை.
அதான் இப்ப இப்படி ஒரு அறிகுறியைக் காமிச்சிருக்கு!”

பெருமாள் பதறினார், “அய்யோ! இல்லீங்களே… இந்த வருசம் சிறப்பா
கொண்டாடனும்னுதான கமிட்டி கூடி முடிவு பண்ணோம்.. அதுக்குள்ளாற.”

”ப்ச்! நடுவுல பேசாதீங்க. திருஷ்டிக்கு நடுவுல ஊடாடக் கூடாது. யாருப்பா அது?

சத்தம் போடாதீங்க!”

சுற்றும் முற்றும் பார்த்த குறிகாரன் ஒரு நபரை அழைத்தான். “வா இப்படி!”

அழைக்கப்பட்ட நபர் மஃப்டியில் இருந்த போலீஸான சந்திரன்.

”சாமி.. இவர் வெளியூரு விருந்தாளியா வந்தவரு!”

“பரவாயில்லை…. அது ரொம்ப விசேஷமாச்சே! இப்படி வந்து எதிரே உக்காரு!”

சந்திரன் குறிகாரன் எதிரே வந்து அமர்ந்தார். குறிகாரன் தனது பக்கத்திலிருந்த
ஒரு பெட்டியைத் திறந்தான். “பயப்படாத! இது தலைச்சன் புள்ளை மண்டை ஓடு. இதை
உள்ளங்கைல அமுத்தினாப்ல புடிச்சுக்க!”

துணியில் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய உருண்டையான வஸ்துவைக் கொடுத்தான்.
சந்திரனுக்கு உதறல் எடுத்தது.

“ம்.. புடி! கண்ணை மூடு!”

சந்திரன் கை நடுங்க அதைப் ப்டித்துக் கொள்வதை ஏட்டும், மற்றொரு போலீஸான
வேலுவும் ஆர்வத்துடன் பார்த்தனர். ஏட்டு அவனிடம் கிசுகிசுத்தார். “பாருய்யா!
நம்ம டிபார்ட்மெண்ட் எல்லாவிதத்துலயும் சிறப்பா பணியாற்றுது பாத்தியா…”

”ஆமாங்கய்யா!”

குறிகாரன் இடி போல முழங்கும் குரலில் கேட்டான். “கண்ணுக்குள்ள என்னா தெரியுது?”

“இருட்டா இருக்கு! அங்கங்க சிகப்பா தெரியுது!”

“ம்…. அதைத் தவிர, என்ன தெரியுது? மஞ்சளா ஒண்ணு அசையுதா?”

“ம்ஹூம்!”

“நல்லாப் பாரு!”

”வெள்ளையாத்தாங்க ஏதோ தெரியுது!”

“ஆஹா!” என்றான் குறிகாரன். “அது அசையுதா?”

அவன் முகம் மலர்ந்தது “உத்தரவு கிடைச்சிடுச்சு.. ம்… உத்தரவு
கிடைச்சிடுச்சு!” என்றபடியே கண்களை மூடி, வாய்க்குள் ஆவேசமாக மந்திரங்களை
முணுமுணுத்தான். உடல் குலுங்கியது.

ஊர் சனம் வாயடைத்துப்போய் வெளியூர் கதாநாயகனைப் பார்த்தது. பருத்த தொந்தியும்,
மார்பு நிறைய விபூதியும், நெற்றியில் ரத்தத் திலகமுமாய் இருந்தான். அவன் காதில்
இருந்த கடுக்கன் கூடியிருந்த அத்தனை பெண்களின் கவனத்தையும் ஈர்த்தது. கையில்
தங்க மோதிரங்கள் செம்புக்காப்பு.

கண்ணைத் திறக்காமலேயே ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சந்திரனிடம் நீட்டினான்
குறிகாரன்.

“பத்துக்குள்ள நம்பர் ஒண்ணூ சொல்லு!”

“ஒண்ணு” என்றார் சந்திரன்.

“ம்… சரி, மேலே எறி இதை!”

சந்திரன் மேலே எறிந்த எலுமிச்சம் பழம் ஓர் இடத்தில் விழுந்து உருண்டோடியது.

”ம்.. திசை தெரிஞ்சுபோச்சு!” என்றபடி பெருமாளைப் பார்த்தான்.

“அப்படிங்களா… எப்படிங்க?”

“எலுமிச்சம் பழம் கீழே விழுந்து மேற்கு முகமா உருண்டுச்சில்ல… மேற்குத்
திசையிலதான் குதிரை இருக்குது.”

“ஓஹோ!”

“இந்தாளு கண்ணுக்குள்ள வெள்ளையா ஒரு ரூபம் அசைஞ்சதுனு சொல்லலே.. அது என்னது?
குதிரை.. வெள்ளைக் குதிரை!”

”அப்படிங்களா!” எல்லோரும் பிரமிப்பாகப் பார்த்தார்கள்.

“நம்பர் கேட்டப்ப இந்தாளு ஒண்ணுனு சொன்னான்ல! ஒரே நாள்ல தகவல் வரும். இல்லை
குதிரையே வந்தாலும் வரும். ஏன்னா, மனசுக்குள்ளயே ஒரு மந்திரத்தை சொல்லி
வருந்தியிருக்கேன்.  உங்க பிரச்னை முடிஞ்சாச்சு!” கை நிறைய குங்குமத்தை அள்ளி
சந்திரனின் நெற்றியில் அப்பினான் குறிகாரன்.

“நானும் பல இடங்கள்ல பார்த்திருக்கேன். கேட்டவுடனே அருள் இறங்கி துப்பு சொன்னது
நீதான்! என் வாக்குல சக்தி இருக்கா. நாக்குல சூலி இருக்கா. இன்னிலேர்ந்து
இந்தாளோட கடாச்சம் உனக்குப் பரிபூரணமா இருக்கு!”

மஃப்டி சந்திரனின் வயிற்றுக்குள் பேரலைகள் புரண்டன.. ”சாமி!” அவர் நாக்கு
குழறியது. அவர் தலையில் கொஞ்சம் நீர் எடுத்துத் தெளித்தான் குறிகாரன்.

“இந்த செகண்டுலியிருந்து நீ ஆத்தாளோட புள்ள. எப்ப வேணா அவ உன்கிட்ட வருவா. உன்
மூலமா ஜனங்களுக்கு அருள் வாக்கு தருவா! போ!”

வரம் போலவும் , சாபம் போலவும் குறிகாரன் சொல்ல, சந்திரன் உடல் சிலிர்த்து
அப்படியே அமர்ந்திருந்தார். கூட்டம் கலைந்தது. குறிகாரனை அழைத்துக்கொண்டு பெரிய
மனிதர்கள் கிளம்பினார்கள். சின்னச்சாமி வீட்டு மாடியில் குறிகாரன் தங்க ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

எஸ்.ஐ. வந்து இறங்கினார். நெற்றியில் விபூதியும், கண்களில் பிரமிப்புமாய்
ஏட்டும், கான்ஸ்டபிளும்  நின்றிருந்தனர். மஃப்டி போலீஸ் மந்திரித்து விட்ட கோழி
மாதிரி நெற்றியில் அப்பிய குங்குமத்துடன் எதிரே வந்து நின்று அனிச்சையாய்
சல்யூட் அடிக்க எத்தனித்தார்.

“அடச் சீ! கையைத் தூக்காத! என்னய்யா இது கோலம்?”

ஏட்டய்யா பெருமிதமாக, “சார்! பிராப்ளம் சால்வ்ட் சார்! எந்தக் கேஸ்லயும்
இம்புட்டு ஈஸியா துப்புக் கிடைச்சது கிடையாதுங்கய்யா!” என்றார்.

“என்னய்யா சொல்ற?”

“அமா சார். ஃபைண்ட் த லொகேஷன் சார்! மேற்காலதான் குதிரை இருக்கு. ஒரே நாள்ல
கிடைச்சிடும் சார்!”

“யார்யா சொன்னது?”

“நம்ம சந்திரன்தான் சார்!”

“என்னய்யா, நிஜமாவா?”

”அப்படித்தான் சார் மெஸேஜ் வந்திருக்கு!”

“எங்கேர்ந்து?”

”ஸோர்ஸ் ஆஃப் இன்ஃபர்மேஷன் வந்து… ஆத்தா சார்.. சூலி!”

“என்னய்யா உளர்றே.”

”நான் விவரமா சொல்றேன் சார்” என்று நடந்ததை விவரித்தார் ஏட்டைய்யா. எஸ்.ஐ.க்கு
முகமெல்லாம் கடுப்பு. “என்னய்யா இது பைத்தியக்காரத்தனம்? ஊர்க்காரன் அவன்
மனச்சாந்திக்கு ஆயிரம் பண்ணுவான். கூடச் சேந்து நீங்களும் கூத்துப்
பண்றீங்களா?”

”சாமி மேட்டரு சார்!”

“பாருங்க, மூணு பேரும் இங்க டூட்டில இருக்கீங்க… புரியுதா? ஊருக்குள்ள
பிரச்சனை வந்திரக்கூடாது. நீங்க அதுல கவனமாக இருக்கணும். சந்திரன் அங்கங்க
பேச்சு குடுத்து திருட்டைப் பத்தி ஏதாச்சும் தகவல் கிடைக்குதானு பார்க்கணும்.
அதை விட்டுட்டு இப்படி இருக்கீங்களே!”

“ஸாரி சார்!”

நாலு திட்டுத் திட்டிவிட்டு, எஸ்.ஐ. போய்விட்டார். இன்னும் ஒரு வித அரை மயக்க
நிலையில் இருப்பது போலத் தெரிந்த சந்திரன் அவசரமாக ஓடி வந்து ஏட்டையாவைத்
தேடினார். டீக்கடையில் காராச்சேவு வாங்கித் தின்றபடி இருந்த அவரை சைகை செய்து
கூப்பிட்டார் சந்திரன்.

“என்ன சந்திரா?”

”கலவரம் வரும் போலத் தெரியுது ஏட்டய்யா…. எஸ்.ஐ.க்கு மெசேஜ் அனுப்புங்க!”

“என்ன சொல்ற?”

“ஆமா… பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி… இன்னும் ஏழெட்டு பேரு கையில
டார்ச் லைட், பெட்ரோமாக்ஸ், வேல்கம்பு எல்லாம் எடுத்துக்கிட்டுப் போறாங்க!”

“அப்படியா” என்று பதறினார் ஏட்டய்யா.

அவரும் வேலுவும் சந்திரனுடன் விரைந்தனர். வழி மறித்தனர்.

”எங்கய்யா போறீங்க எல்லாரும்… கைல வெப்பன்ஸோட?”

”அது வந்து….”

“அதிகாரிங்க நாங்க இருக்கும்போதே என்ன தைரியம் உங்களுக்கு…. ம்? கலவரமா
பண்ணப் போறீங்க்?”

“அய்யய்யோ… அதில்லீங்க! நாங்க வேற சோலிக்கில்ல போறோம்!”

“வேற என்னய்யா சோலி?”

“முயல் பிடிக்கப் போறோங்க!”

“முயல் புடிக்கவா?”

”ஆமாங்க! காட்டு முயல்க நிறைய கிளம்பி வந்து திரியும். மாசத்துக்க ஒரு தரம்
இப்படிப் போறது!”

ஏட்டையாவுக்குச் சபலம் தட்டியது.

“எங்களுக்கு டவுட்டா இருக்கு! நாங்களும் வர்றோம்”

“தாராளமா வாங்க.. நாளைக்கு அதிகாரிகளுக்கு முயல்கறி வறுவல் குடுத்துருவோம்!”

”சரி” என்று கிளம்பினார்கள். சந்திரனும் உடன் வந்தார். ஏட்டையா காதைக்
கடித்தார். “துப்புக் குடுக்கிற லட்சணத்தைப் பாரு. நீயே சண்டையக் கிளப்பி
விட்டுருவ போலிருக்கே!”

“நான் என்னத்தைக் கண்டேன்… இவனுக கம்பும், லைட்டுமா கிளம்புனா?”

மேற்கு முகமாக நடந்தார்கள். மலை அடிவாரத்தை நோக்கித் தாழ்ந்த குரலில் பேசிக்
கொண்டு போனார்கள். சற்றுத் தள்ளித்தான் வாகனம் காணாமல் போன மண்டபம் இருக்கிறது.
நான்கைந்து டார்ச்சுகள் முன்புற இருட்டைத் துழாவ நடந்தார்கள். பூச்சிகளின் ஓசை
மட்டும் அச்சம் தரும் விதத்தில் ஒலித்துக்கொண்டு இருந்தது. மண்டபத்தில் சற்று
இளைப்பாறிவிட்டு அதன் பிறகு முயல்களைத் தேடும் உத்தேசத்துடன் மண்டபம் நோக்கிப்
போனார்கள்.

“பெருமாளு…. அது என்ன? என்னமோ அசையற மாதிரி இருக்கே?”

சட்டென்று அனைவரும் நின்றனர். ஒரு வித பீதி மின்னலாக அனைவர் மனதிலும் எழுந்தது.
சந்திரனுக்கு தலைப்பிள்ளை மண்டை ஓடு மனதில் வந்து பயமுறுத்தியது.

“ஆமா, எருமையா இருக்குமா? ஏய் ஒரே ஒரு டார்ச்சை மட்டும் அடிங்க. எல்லாரும்
அப்படியே பம்மி உக்காந்துக்குங்க!”

அனைவரும் பதுங்க, வாத்தியார் தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த அசைவின் மீது
டார்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.

அங்கே ஒரு குதிரை நின்றிருந்தது. நிஜமான குதிரை!

காலையிலேயே எஸ்.ஐ.க்குத் தகவல் வந்துவிட்டது.

ஊர் தலையாரி போன் பண்ண, எஸ்.ஐ. பைக்கில் கிளம்பிப் போய் சேர்ந்தபோது, ஊர்
கலைக்கட்டி விட்டது. ஆலமரத்தடி மண்டபத்தின் முன்னே நீளக் கயிற்றில் குதிரை
கட்டப்பட்டு அப்பிராணியாகப் புல் மேய்ந்துகொண்டு இருந்தது. சுற்றிலும் பத்துப்
பதினைந்து சிறுவர்கள் குத்தவைத்து அமர்ந்து, ஆர்வமாக வேடிக்கை பார்த்தபடி
இருந்தனர். எஸ்.ஐ. அவர்களிடம் வந்து நின்றதை அவர்கள் சட்டை பண்ணவேயில்லை.

“டேய் தம்பி!” என்றார் எஸ்.ஐ. அதட்டலாக. “என்னங்க சார்” என்று எழுந்தான்
ஒருவன்.

“எங்கடா பெரியாளுக எல்லாம்?”

”அந்தா… அங்கன இருக்காங்க சார்!”

பையன் கை காட்டிய சற்றுத் தொலைவில், ஒரு கும்பல் கூடியிருந்தது. நட்ட நடுவில்
ஒரு ஆள் அருள் இறங்கி சவுண்டு கொடுத்துக்கொண்டு இருந்தார். மஃப்டி போலீஸ்
சந்திரன்தான் அது. அவர் மூஞ்சியில் வெளியூர் குறிகாரன் விபூதியை விசிறி விசிறி
அடித்தபடியே கேள்விகளைத் தொடுத்தான்.

“சாமி! இது என்ன அறிகுறி… எங்களுக்கு விளங்கலையே?”

“ஏய்ய்… ஏய்ய்… ப்ர்ர்ர்ர்… ப்ர்ர்ர்… “ என்று வினோத ஒலிகளை சந்திரன்
எழுப்பினார். பார்வை நிலைக்குத்தி இருக்க… முகம், தலையெங்கும் விபூதி.
தண்ணீரை அவர் மேல் கொட்டி இருக்க வேண்டும். ஆளே தொப்பலாக கொச கொச என்று
இருந்தார்.

”இது என்ன சாமி… நாங்க என்ன பண்ண?”

”என் வாகனம்தான்டி… இது என் வாகனம்தான்!”

குறிகாரன் நிதானித்தான். இடக்கையை நீட்ட, அவனிடம் ஒரு குளிர்பானப் பாட்டில்
நீட்டப்பட்டது. குடித்து விட்டு ஏப்பம் விட்டபடி, “அதான் சாமியே சொல்லுதில்ல…
இனியும் என்ன சம்சயம்? இது அவரோட வாகனம்தான்!”

வாத்தியாரும் பெருமாளும் மற்றொரு குழப்பத்துடன் தலையைச் சொறிந்தனர்.

”அது எப்படிங்க?”

“அது அப்படித்தான்யா… கடவுள்கிட்ட கேள்வி கேக்கறதுக்கு மனுசப்பயலுக்கு உரிமை
கிடையாது. என்னா சாமி?” என்றான் சந்திரனிடம்.

“ஆம்மா… கடவுள்வாக்கு… என் வாகனம்… மூச்… திருவிழா கொண்டாடு… போ”
என்றார் சந்திரன், துண்டு துண்டாய்! அவரிடம் இருந்து அமானுஷ்ய உச்சரிப்பில்
வார்த்தைகள் தெறித்தன.

கண்ணு ஆசாரி மெதுவாகக் கேட்டார்….

“அது நல்ல வாகான மரமுங்க. இப்ப அது எங்க இருக்குனு தெரிஞ்சாத் தேவலை.”

”ஏய்… சொன்னபடி வாகனம் கிடைச்சாச்சு! ஆக வேண்டியதைப் பாரு” என்றார் சந்திரன்
அதட்டலாக.

“த பாருங்க… ‘ஒரு நாள்ல தெரியும். மேற்கதான் குதிரை இருக்கு’னு
குறிவந்துச்சு. அன்னிக்கு ராத்திரியே, மேற்கால போனீங்க.. உங்களைத் தேடி வாகனம்
வந்துச்சா, இல்லையா?” என்றான் குறிகாரன்.

”வாஸ்தவம்தாங்க… ஆனா, இது நிசமான குதிரையால்ல இருக்கு!”

“கடவுள் விளையாட்டுய்யா.. அதை நாம கேள்வி கேக்க முடியுமா? வாகனத்தைப்
பராமரிப்பா வெச்சிருங்க. மேற்கொண்டு என்ன நடக்கணும்கிறதைப் பத்தி சீக்கிரமே
இன்னொரு அறிகுறி வரும். புரியுதா?” என்றான் குறிகாரன் முடிவாக. மறுப்பேச்சு பேச
யாருக்கும் தோன்றவில்லை.

இரண்டே நாளில், ஊரின் தீர்மானிக்கும் சக்தியாக அவன் பரிமாணம் அடைந்திருந்தான்.

எஸ்.ஐ. கடுப்புடன் ஓரமாக நின்றிருக்க… நெற்றி நிறைய விபூதியுடன் கையில்

குறிகாரன் கொடுத்த பிரசாதங்களோடு வந்த ஏட்டய்யாவும் வேலுவும், எஸ்.ஐ. நிற்பதைப்
பார்த்ததும் பதறி ஓடி வந்தனர்.

”என்னய்யா நடக்குது இங்கே?”

“சார், அவன் சொன்ன மாதிரியே குதிரை சிக்கிப் போச்சு சார்! ரொம்ப பவர்ஃபுல்
பார்ட்டியா இருக்கான் சார்.”

“எல்லாக் கூத்தையும் பாத்துட்டுட்தான்யா இருக்கேன்.  டிபார்ட்மெண்ட் பேரைக்
கெடுக்காம விடமாட்டீங்க போலிருக்கே மூணு பேரும்!”

“சார், தயவு செஞ்சு தப்பா நினைக்காதீங்க. கரெக்டா அவன் குறி சொன்ன அன்னிக்கே
ஆச்சரியமா ஒரு குதிரை வந்து எதிர்க்க நின்னு வாலாட்டுது சார்!”

“எதுய்யா ஆச்சர்யம்? குதிரை வால் ஆட்டுறதா?”

”அதில்ல சார்.. இந்த ஊர்ல குதிரையே கிடையாதாம் சார்…!”

பெருமாளும் வாத்தியாரும் வந்து எஸ்.ஐ.க்கு வணக்கம் சொன்னார்கள்.

“என்னங்க.. உங்க ஊரு! ஒண்ணு போலீஸை நம்புங்க.. இல்ல, குறி சொல்றவனை நம்புங்க!
எங்கக்கிட்ட கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு, குறிகாரன் சொல்றான்னு உசிரோட இருக்கிற
குதிரையைப் புடிச்சு வெச்சிருக்கீங்க. நாளைக்கு இந்தக் குதிரை மேல ஊர்வலம்
விடப் போறீங்களா?”

எங்கிருந்தோ வந்து பின்னால் நின்றிருந்த உள்ளூர் கோடாங்கிக்கு குஷி பிறந்து
விட்டது. “நல்லா கேளுங்க சார். தாமரைக்குளத்தான்களுக்கு புத்தி இல்லேனு
தெரிஞ்சுகிட்டு, அந்த வெளியூர்காரப் பய நல்ல மொளகா அரைக்கிறான்.” என்ற உள்ளூர்
கோடாங்கியையும், அவர் குடுமியையும் ஏற இறங்கப் பார்த்தார் எஸ்.ஐ.

“நீ யார்யா?”

”நான் உள்ளூர் கோடாங்கி சார். நான் மை போட்டுப் பார்த்திருந்தேன்னா கதையே வேற
சார்!”

“முதல்ல உங்களை மாதிரி ஃப்ராடுக அம்புட்டுப் பயலையும் உள்ள தள்ளணும்யா”

கோடாங்கிக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. பெருமாளையும் வாத்தியாரையும்
பார்த்த எஸ்.ஐ. “இதப் பாருங்க. நீங்க ரெண்டு பேரும்தான் ஊர்ல முக்கியமானவங்க.
நீங்க் சொல்லுங்க. என்ன பண்றதா இருக்கீங்க?”

வாத்தியார் சொன்னார்… “அய்யா காணாமப் போன வாகனத்தை நீங்க தேடுங்க.. நாங்களும்
தேடிப் பார்க்கிறோம். திருவிழாவுக்குள்ள அது கிடைச்சுட்டா நல்லதுங்க.”

“அதை விடுங்கய்யா.. இப்ப ஒண்ணைப் புடிச்சுக் கட்டி வெச்சிருக்கீங்களே.. அதை
என்ன பண்றதா உத்தேசம்? அதோட சொந்தக்காரன் தேடி வந்துட்டான்னா…?”

”அதெப்படி? அது அழகரோட குதிரை. அவரோட வாகனம். அதுக்கு உரிமை கொண்டாடிக்கிட்டு
எவன் வருவான்?”

தனக்கெதிராக யாரது இவ்வளவு தைரியமாகக் குரல் கொடுப்பது என்று திரும்பிய எஸ்.ஐ.
திகைத்தார்! மஃப்டி போலீஸ் சந்திரன்தான், சாதாரண சந்திரன் எஸ்.ஐ.க்கு முன்னால்
நேராக நிற்கவே தயங்குவார். சாமி இறங்கிய சந்திரனோ உலகத்துக்கே அதிபதி போல
நின்றிருந்தார். கலங்கிய கண்கள், கலைந்த தலை, குங்கும நெற்றி.

“ஏய்…. சாமிக்கிட்ட விளையாடாத! என் வாக்குல நம்பிக்கை வை. என்கிட்ட
விளையாண்டேன்னு வை… சர்வ நாசம்! குல நாசம்!”

எஸ்.ஐ.யின் டென்ஷன் உச்சத்துக்குப் போனது. பதறிப்போன ஏட்டய்யாவும், வேலுவும்
சந்திரனை அழுத்தித் தள்ளிக்கொண்டு போனார்கள்.

“அய்யா! தப்பா எடுத்துக்காதீங்க. அவன் வெளியூர் ஆளு. விருந்துக்கு வந்த இடத்துல
அவன் மேல சூலி இறங்கிட்டா அதான்” என்ற ஊர்காரரிடம், “ம்.. இருக்கட்டும்..
இருக்கட்டும்” என்றப்படி நடந்து ஆலமரத்தடி மண்டபத்தருகே வந்தார் எஸ்.ஐ.
குதிரையினருகே நின்று ராமகிருஷ்ணனும் சீரங்கனும் ஆராய்ந்துகொண்டு இருந்தனர்.

”என்னப்பா பாக்கறீங்க?” என்றார் எஸ்.ஐ.

“எங்க ஊர் ஆளுங்க பைத்தியக்காரத்தனம் பண்றாங்க… இது எப்படி சார் சாமியோட
வாகனமா இருக்கும்? பாருங்க.. முதுகு நடுவுல தழும்பேறிப் போயிருக்கு. புட்டத்துல
நாலஞ்சு புண்ணு.. எங்கியோ சுமை சுமந்துட்டு இருந்த குதிரை மாதிரி தெரியுது
சார்.”

எஸ்.ஐ.க்கு கடைசியாக இரண்டு விவரமான பயல்களை தாமரைக் குளத்தில் சந்தித்ததில்
மகிழ்ச்சி பொங்கியது.

”வெரிகுட்! படிச்ச பசங்களா நீங்க?”

”ஆமா சார்.”

“உங்க ஊர் ஆளுகளுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?”

“எங்கன சார்? குறிகாரன், கோடாங்கி பேச்சுதான் இங்க எடுபடும். நாங்க பேசினா
தலைப்பிரட்டு பிடிச்சவங்கன்னு பட்டம் குடுத்துருவாங்க.”

“அதுவும் நிஜம்தான்” என்று சிரித்த எஸ்.ஐ.  “ஏம்பா உங்களுக்கு யார் மேயலாயவது
சந்தேகம் இருக்கா?” என்றார்.

“ஆமா சார்.” என்றான் ராமகிருஷ்ணன். “போன மாசம் எங்க தோட்டத்து மோட்டார் களவு
போச்சு. அதைப் பண்ண கோஷ்டிதான் இதையும் பண்ணி இருப்பாங்களோன்னு ஒரு டவுட்டு!”

“ம்… உங்கப்பாவும் சொன்னாரு.. பெருமாள்தான அவர் பேரு?” என்று யோசித்தவர்,

“தம்பி… நீங்க ஒரு காரியம் பண்றீங்களா?” என்றார்.

”சொல்லுங்க சார்.”

“கொஞ்ச நாளைக்கு.. நைட்ல தூங்காம ஒரு பத்துப் பன்னிரண்டு மணி வாக்குல மலையடிவார
மண்டபம் பக்கம் அப்படி இப்படி சுத்திப் பாருங்க. நீங்க எத்தனை பேர்
ஃப்ரெண்ட்ஸ்?”

“நாலஞ்சு பேரு சார்.”

“குட். நாலஞ்சு பேருமா போங்க. ஏதாவது வித்தியாசமா தட்டுப்படுதான்னு பாருங்க.
எனக்கென்னவோ.. அந்தக் குதிரை அந்த ஏரியாவுலதான் எங்கியோ இருக்கணும்னு டவுட்டு.”

”சார்… எங்களை ஏன் சார் போகச் சொல்றீங்க?”

“தம்பி… நீங்க உள்ளூர். அதுலயும் கால நேரமில்லாம கண்டபடி சுத்தறவங்கன்னு
என்கிட்ட சொன்னாங்க. அதனால, உங்க மேல யாருக்கும் டவுட் வராஅது. நீங்க
தோட்டத்துக்கோ காட்டுக்கோ காவலுக்குப் போற மாதிரி போங்க. வித்தியாசமா, புதுசா
எவனாவது அந்தப் பக்கம் வந்தா.. அடையாளம் பாத்து எனக்குத் தகவல் சொல்லுங்க.
புரியுதா?”

”ஓகே. சார்” என்றார்கள் இருவரும் பெருமையாக. எதையோ சாதிக்கப் போகிற பரபரப்பு
இருவரையும் தொற்றிக்கொண்டது.

இரவு உள்ளூர்க்கடையில் இட்லியும், புரோட்டாவும், ஆம்லெட்டும் சாப்பிட்டுவிட்டு,
ஏட்டய்யாவும், வேலுவும் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். ஏழெட்டுப்பேர்
மண்டபத்தில் படுத்திருக்க.. அங்கே கட்டப்பட்டு இருந்த குதிரையைப் பார்த்தபடி
இவர்கள் இருவரும் அமர்ந்தனர். குதிரை அரைத் தூக்கத்தில் இருந்தது. வாலை
அவ்வப்போது சாமரம்போல் வீசியது. ஏட்டய்யா பெருமூச்சுவிட்டார்.

”ஏன்யா வேலு… இப்ப நாம இந்தக் குதிரைக்கு வேற காவலா இருக்கிற மாதிரி
ஆயிப்போச்சேய்யா. ம்… சாமி சமாச்சாரம்? இதை ஒரு விரதம் மாதிரி நினைச்சுப்
பண்ண வேண்டியதுதான்! என்னா வேலு…?” என்றவர் ஏதோ யோசனையுடன், “அதென்னய்யா நம்ம
சந்திரன் இப்படி ஆகிப்போனான்?” என்றார் வருத்தமாக.

“மதி பிடிச்சிருச்சுங்க அவனுக்கு.”

“ஏன் வேலு.. இது எல்லாம் நிசமா?”

“எதைக் கேக்குறீங்க?”

”இந்தக் குறி சொன்னது, அருள் வந்தது, இந்தக் குதிரை வந்தது… எஸ்.ஐ. அய்யா
சொன்ன மாதிரி நாம ஒருவேளை பைத்தியக்காரத்தனமா இதெல்லாம் நம்பறமோ?”
வேலுவும் ஒரு விநாடி யோசித்தான். குதிரை கனைத்தது. “பார்த்தீங்களா? இது மாதிரி
நினைக்கிறதே தப்பு… சாமி அதட்டறாரு பாத்தீங்களா!”

”ஆமா! தப்பு தப்பு” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார் ஏட்டய்யா.
பத்து மணிக்கு மேல், ராமகிருஷ்ணன் தலைமையில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.
மொத்தம் ஏழு பேர். மூன்று நபரை மேற்கே மலையடிவாரத்துக்கு அனுப்பிவிட்டு, ஒரு
மணி நேரம் கழித்து சீரங்கன், கனகு, ரமேஷ் மூவரையும் போகச் சொன்னான்
ராமகிருஷ்ணன்.  “அப்ப நீயி?” என்ற சீரங்கனிடம், ”நீங்க போங்க, நான் பின்னால
வாரேன்” என்று ராமகிருஷ்ணன் கண்சிமிட்டினான். புரிந்துகொண்டவனாக சீரங்கன்
மற்றவர்களுடன் கிளம்பினான்.

அவர்கள் போனதும் ராமகிருஷ்ணன் தனியே கோடாங்கியின் வீட்டை நோக்கி நடந்தான்.
அங்கே வெளியே கொல்லைப்புற மறைவில், மாரி இவனுக்காகக் காத்துக்கொண்டு இருப்பாள்!
சங்கதிகள் நிகழ்ந்தேறி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியிருந்தது.

தாமரைக்குளத்தின் வழமைகளில் சில புதியவை பழகிவிட்டிருந்தன. ஏட்டய்யாவும் வேலுவும்,
குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமலேயே உள்ளூர்வாசிகளாகி இருந்தனர். டீக்கடையில்
ஏட்டய்யாவுக்கு கணக்குத் துவங்கி, இருநூறு ரூபாய் சொச்சம் பாக்கி இருந்தது.
சமயங்களில் பெருமாள், வாத்தியார் வீடுகளிலிருந்து மதிய சாப்பாடு தூக்கில்
வந்தது. சாப்பிட்டுவிட்டு ஆலமரத்தடி மண்டபத்தில் கோடு கிழித்து பதினெட்டாம்
புள்ளி, தாய விளையாட்டுகளை ஆடித் தேர்ந்துகொண்டு இருந்தனர் இருவரும்.
தனது சர்வீஸில் முன்னெப்போதும் இவ்வளவு நிம்மதியாக தான் வாழ்ந்ததில்லை என்று
உணர்ந்தார் ஏட்டய்யா. நேரத்துக்குச்  சாப்பாடு, சுத்தமான காற்று, பொழுதுபோக்க
விளையாட்டு, பேச்சுத் துணை என்று ஏட்டய்யாவும் வேலுவும் திளைத்து மகிழ்ந்தனர்.

மஃப்டி போலீஸ் சந்திரனோ வேறொரு தளத்தை எட்டியிருந்தார். காலமெல்லாம் கையைத்
தூக்கி சல்யூட் அடித்துக்கொண்டு இருந்தவரை, ஊரே பக்தியுடன் பார்ப்பதும்
வணங்குவதும் புளகாங்கிதமாயிருந்தது. ஊரின் பொதுப் பிரச்னையில் துவங்கியவர்,
இப்போது வீட்டுப் பிரச்னை, தீராத வயிற்றுவலி, கனவுக்குப் பலன் என்று சகல
சமாச்சாரங்களையும் டீல் செய்ததில், தாமரைக்குளத்தின் பெண்களில் பலர் தங்களது
பிரச்சனைகளை இப்போதெல்லாம் அவரிடம்தான் சொல்கிறார்கள். அதில் கோடாங்கி மனைவி
சரசம்மாவும் அடக்கம்.

அவரும் வெளியூர் குறிகாரனும் வந்து தனது ஸ்தானத்தைக் கவர்ந்துகொண்டதில்,
நொந்துபோய்க் கிடக்கிறார் கோடாங்கி. இரண்டு, மூன்று தினங்களாகத் தனது
கட்டுப்பாட்டில் இருக்கும் குறளி ஒன்றை ஏவி, அவர்கள் இருவரையும் காலி பண்ணி
விடுவதென்கிற முடிவில் இருக்கிறார்.

பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி வகையறாக்களின் கவலையோ நாளுக்கு நாள்
அதிகரித்தபடி இருந்தது. திருவிழா நாள் நெருங்கிக் கொண்டே வருகிறது. காணாமல்
போன வாகனம் பற்றி ஏதும் தகவல் தெரியவில்லை. குறிகாரனும் ஆத்தா இறங்கினவனும்
“இதுதான் வாகனம்!” என்று நிஜக் குதிரையைக் காட்டி சாதிக்கிறார்கள். இதை
வைத்துக் கொண்டு எப்படித் திருவிழா கொண்டாட முடியும்… ஊர்வலம் போக முடியும்?

அந்தக் குதிரை இப்போது ஊர் சிறுவர்களுடன் வெகு சகஜமாகிவிட்டது. எந்நேரமும்
பத்து சிறுவர்கள் அதனைச் சுற்றி அமர்ந்து பேச்சுக் கொடுத்தபடி, புல்லும்
கொடுக்கிறார்கள். தத்தம் வீடுகளில் அம்மாவிடம் அழுது பிடிவாதம் பண்ணி, கானம்
(கொள்) அவித்து வாங்கி வந்து குதிரைக்கு வைக்கிறார்கள். நேற்று எல்லாப்
பசங்களும் கூடி குதிரையை ஏழெட்டு லைஃபாய் சோப்பு போட்டுக் குளிப்பாட்டி, பிடரி
முடிக்கும் வாலுக்கும் ஸ்பெஷலாக ஷாம்பு போட்டு அதன் மேனி எழிலைப்
பராமரித்தார்கள்.

எஸ்.ஐ. அவ்வப்போது வந்து போய்க்கொண்டு இருக்கிறார். அவருக்கு வயிற்றெரிச்சல்..
குறிப்பாக சந்திரன் மீது. இந்த பிரச்னையும் திருவிழாவும் முடிந்த பின்னர்தான்
அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு இருந்தார்.
ராமகிருஷ்ணன், சீரங்கன் மூலமாக அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு
துப்பு கிடைத்திருந்தது. கரும்புத் தோட்டத்திலிருந்து ஆலைக்கொட்டகைக்கு சில
வெளியூர் ஆட்கள் சந்தேகப்படும்படி வந்து போகிறார்கள். அது குறித்து வேறு ஒரு
திசையில் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

இவை எல்லாம் இவ்வாறு இருக்க.. ஊருக்குள் ஒரு புது ஆள் சைக்கிளில் வந்தான். கைலி
வேட்டி, அழுக்கேறிய காக்கிச் சட்டை, கலைந்த தலை, டயர் செருப்பு.. வந்தவன்
ஆலமரத்தடி மண்டபத்தருகே சைக்கிளை நிறுத்திவிட்டு, ஓடிப்போய் ஓரத்தில்
கட்டியிருந்த குதிரையைப் பார்த்தான். “ஐயோ! என் எசமானே… நீ இங்கியா இருக்கே?
நான் உன்னைத் தேடி ஊர் ஊரா அலையிறனே.”

கட்டித் தழுவி, தடவிக் கொடுத்து காதல் உணர்வையும் செண்டிமெண்ட்டையும் ஓரிரு
விநாடிகளுக்கு நிகழ்த்தினான். குதிரையின் தோழர்களாயிருந்த சின்னப்
பசங்களெல்லாம் அவனை விநோதமாகப் பார்த்தார்கள். அவன் அதோடு நிறுத்தியிருக்கலாம்.
ஏதோ ஒரு விஜயகாந்த் படத்தின் பாதிப்பில் தலை சிலிர்த்து திரும்பி, குரலை
முழக்கினான்…. “எந்த களவாணிப் பய மகன்டா என் குதிரையைக் கட்டி வச்சவன்? என்னா
தைரியம் இருந்தா குதிரையைக் களவாண்டு கட்டி வெச்சிருப்பீங்க?”

ஊரின் இளவட்டங்கள் ரத்தம் கொதித்து, அவன் சட்டையைப் பிடித்தார்கள். குதிரையைத்
தேடி ஊர் ஊராக சைக்கிளில் அலைந்த கடுப்பில் இருந்தவன் தடித்த வார்த்தைகளைப்
பேச, உள்ளூர் இளவட்டங்கள் இப்படியொரு தருணத்துக்காகவே காத்திருந்தது போல
தங்களது பராக்கிரமத்தைக் காட்டி, அவனைப் புரட்டியெடுத்துத் தூணில்
கட்டினார்கள்.

சம்பவம் நடந்த பிறகே வந்து சேரும் மரபைக் காப்பாற்றும் விதமாக ஏட்டய்யாவும்
வேலுவும் குளிப்பதற்காக மோட்டார் தோட்டத்துக்குப் போயிருந்தார்கள்…
தகவலறிந்து ஈரப்பதத்துடன் விரைந்து வந்தார்கள்.

“சேச்சே… என்னப்பா தம்பிகளா! நாங்க அதிகாரிக இருக்கோம். எதுவா இருந்தாலும்
எங்ககிட்ட சொல்ல வேணாமா.. இப்படியா அடிக்கிறது? செத்துக்கித்துப் போய்ட்டான்னா
நாங்களும் சேர்ந்துல்ல பதில் சொல்லணும்!”

”பின்ன ஊர் நடுவுல நின்னுக்கிட்டு பெரிய இவன் மாதிரி எல்லாரையும் வையுறான்!
வெட்டுவேன்.. குத்துவேன்ங்கிறான்!”

“சரி சரி.. சும்மா இருங்கப்பா!” என்று அடக்கின வாத்தியார், “சார்… நாங்களும்
இல்லாமப் போயிட்டோம். இந்தாளு வார்த்தையை விட்டுருக்கான். இளவட்டப் பசங்க கை
நீட்டிட்டாங்க. மேற்கொண்டு நீங்க விசாரிங்க”

ம்… என்றபடி ஏட்டய்யா அவனை நெருங்கினார். கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
தூணில் சாய்ந்திருந்தவன் சரிந்தான். அடிபட்ட வேதனையில் முகம் சுருங்கியது.
அங்கங்கே கண்ணிப்போயிருந்தான்.

“எந்த ஊர்றா நீ?”

“வட்டப்பாறைங்க.”

”எது… மலைமேல இருக்குதே அந்த வட்டப்பாறையா?”

“ஆமாங்க!”

“ஏண்டா.. அங்க இருந்து இங்க எதுக்கு வந்தே.. எதுக்கு அக்குருமாப் பேசினா?”

”அய்யா.. என் குதிரையைத் தேடி வந்தேங்க. இதப் பாருங்க. இது என்னுதுங்க.”

“குதிரை உன்னுதா?” ஊர் ஜனங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

”ஆமாங்க… மலைல இருந்து பலாக்காய், காப்பி, எலுமிச்சை எல்லாம் கீழ கொண்டாந்து
விக்கிறதுக்கோசரம் மூணு குதிரை வெச்சிருந்தேங்க. அதுல ஒண்ணை ஏழெட்டு நாளாக்
காணோம். மேய்ச்சலுக்கு விட்டிருந்தப்ப நரிக் கூட்டம் விரட்டினதுல எங்கியோ திசை
தப்பிடுச்சு. சரி.. கீழ தரைக்கு இறங்கி வந்திருக்கும்னு வந்து ஒவ்வொரு இடமாப்
பாத்தா கடைசியில இங்க கட்டிப்போட்டுக் கிடக்கு”

”சரி. வந்தே… குதிரையைப் பாத்தே.. அதுக்கப்புறம் என்ன ஏதுனு ஊர்ல விசாரிக்க
வேணாமா? நீ பாட்டுக்கு மானாங்காணியாப் பேசினா எப்படி? சுத்த அறிவு கெட்டவனா
இருக்கியே!” என்றபடி ஏட்டய்யா ஊர் மக்கள் பக்கம் திரும்பினார். “என்ன பெருமாளு,
குதிரை இந்தாளுதுங்கறான்! என்ன பண்ணலாம்?”

மஃப்டி சந்திரன் உரத்த குரலில் சொன்னான். “அந்தப் பேச்சே வேணாம்.
அருள்வாக்குப்படி சாமி குறி சொல்லி நம்மகிட்ட வந்தது. தெய்வகுத்தம் ஆயிப்
போகும். யோவ்… வெளியூரு! வந்த வழியே திரும்பிப் போயிரு.. இல்லேன்னா
சபிச்சுருவேன்!”

“சந்திரா… கொஞ்சம் சும்மா இரு! விசாரிக்கிறோம் இல்ல?”

“ஐயா! லௌகீகம்னா நீங்க விசாரிக்கலாம். இது சாமி காரியம். ஒண்ணு கிடக்க ஒண்ணு
ஆயிடக் கூடாது” என்றான் வெளியூர் குறிகாரன். அவன் மனதுக்குள் வேறு விதமான
சிந்தனை. இந்தக் குதிரை, சாமியின் வாகனம் இல்லை என்றாகிவிட்டால், தனது வாக்கின்
மீது ஜனங்களின் நம்பிக்கை குறைந்துவிடும். கொஞ்ச நாளாக இந்த ஊர் ஜனங்கள்
புண்ணியத்தில் வண்டி சொகுசாக ஓடுவது கெட்டுவிடக் கூடாது இல்லையா?

“அதும் சரிதான்.. அவசரப்படக்கூடாது. கொஞ்ச நாள் பார்ப்போம்!”

”என்னய்யா கொஞ்ச நாள் பாக்கறது? என் பொழைப்பு கெட்டுப்போய் ஊர் ஊரா சைக்கிள்ல
அலைஞ்சு வந்திருக்கேன். ஏழெட்டு நாளா கஞ்சியில்லை… என் குதிரையைக் குடுங்க..
நான் கிளம்பணும்.”

ஏட்டய்யா செருமினார், “தம்பி! அதுல ஒரு சிக்கல் என்னான்னா.” என்று நடந்ததை
விவரித்தார்.

“என்னய்யா! கதையா விடறீங்க.. நான் காசு குடுத்து வாங்கி வளர்த்த குதிரையை நோகாம
அமுக்கலாம்னு பாக்கறானுகளா இந்த ஊர்க்காரப் பயக.”

“ஏலேய்! ஊரைப் பத்திப் பேசின, வாயைக் கிழிச்சிருவோம்.”

”ஐயா.. இவங்களை விடுங்க. நீங்க போலீஸ்.. எனக்கு நியாயம் சொல்லுங்க.”

“ம்.. நீ குதிரையைக் காணோம்னு கம்ப்ளைண்ட் குடுத்தியா?”

“இல்லைங்க. அதான் ஊர் ஊரா தேடி அலையுறனே!”

வாத்தியார் பாயிண்டைப் பிடித்தார். “ஆனா, நாங்க கம்ப்ளைண்ட் குடுத்திருக்கோம்.
அதனால குதிரை சட்டப்படி எங்களுக்குத்தான் சொந்தம்.”

“அடப்பாவிங்களா! இது என்னா நியாயம்டா? இன்னிக்கு வித்தாலும் பத்தாயிரம்
ரூவாய்க்கு போகும்டா என் குதிரை. அதை நம்பித்தாண்டா என் பொழப்பே இருக்கு.. ஊர்
கூடி வயித்துல அடிக்கிறீங்களே.. இது நியாயமா?”

ஏட்டய்யாவுக்கு அவனது நியாயம் புரிந்தாலும், ஊர் மக்களின் கருத்தை மீறிப் பேச
முடியவில்லை. ஒரு வார செஞ்சோற்றுக் கடனாக… அவரும் அந்த ஊர் நபராகவே தன்னை
உணர்ந்துகொண்டு பேசினார், “சரி தம்பி, ஒரு ஊரே கூடிச் சொல்லும்போது, அதையும்
நாம பாக்கணுமில்லையா.. வேணா ஒண்ணு செய்யி. திருவிழா வரைக்கும் நீயும் இதே ஊர்ல
இரு.. திருவிழா முடிஞ்சதும் உக்காந்து பேசுவோம்.”

உள்ளூர் கோடாங்கிக்கு பொறுக்க முடியாமல் கேட்டே விட்டார். “ஏன்யா.. என்ன
நினைச்சிக்கிட்டு இருக்கீங்க! இந்த ஊர்ல அசலூர்க்காரங்க எண்ணிக்கை கூடிக்கிட்டே
போகுது. இப்ப இவனையும் இருக்கச் சொல்றீங்க.. எல்லாப் பிரச்சனைக்கும் காரணமே
இந்த வெளியூர் குறிகாரப் பயதான். அவனை விரட்டுங்க. எல்லாம் சரியாப் போகும்.”

“சரி.. சரி.. நீங்க எதுக்கு இப்ப சத்தம் போடுறீங்க” என்று அடக்கிய ஏட்டய்யா,

“சரி தம்பி.. நீயும் போய் எங்க ஸ்டேசன்ல எஸ்.ஐ.கிட்ட தகவல் சொல்லி, ஒரு பிராது
குடுத்துட்டு வந்துடு. அதான் மொறை. இல்லாட்டி அவரு எங்களை வைவாரு.” என்று
வெளியூர் நபரிடம் சொன்னார்.

“சரிங்க.”

“உன் பேர் என்ன?”

அவன் சொன்ன பதிலைக் கேட்டு அனைவரும் புல்லரித்தனர். “அழகர்சாமிங்க!”

வெளியூர் குறிகாரனும், மஃப்டி சந்திரனும் மகிழ்ச்சி பொங்கக் குரல்
கொடுத்தார்கள்… “பார்த்தீங்களா.. சாமியோட விளையாட்டை!”

“என்னய்யா விளையாட்டைக் கண்டீங்க?” குதிரைக்கார அழகர்சாமி டென்ஷன் ஆனான்.

“அந்த அழகர்சாமி…. தன்னோட பெயர் கொண்ட ஒருத்தனோட குதிரையையே தனக்கு வாகனமா
தேர்ந்தெடுத்து இங்க வரவழைச்சிருக்காரு. என்னா ஒரு மகிமை.. சாமி!” கைகளை உயரத்
தூக்கி வணங்கினான் வெளியூர் குறிகாரன். “என்னோட வாக்கு தப்பாதுன்னு
நிரூபிச்சிட்ட சாமி.” லேசாக அவன் உடல் ஆடியது.

அழகர்சாமி தனது குதிரையை ஒரேயடியாக அபகரிக்க பெரும் சதிவலை பின்னப்படுவதை
உணர்ந்து, கண்களில் நீர் வழிய சின்னப் பிள்ளை போல அழுதான். “அடப்பாவிகளா! என்
பொழப்புல மண்ணள்ளிப் போட்டுராதீங்கடா. என் குதிரைய விட்ருங்க. நான்
கூட்டிட்டுப் போறேன்!”

அவன் தனது குதிரையின் அருகே சென்று அதன் கழுத்தைத் தடவிக் கொடுக்க, அது
கனைத்தது. குதிரையைச் சுற்றி நின்ற சிறுவர்கள் அவனைப் பரிதாபமாகப்
பார்த்தார்கள். அவர்களுக்கும் கண்கள் கலங்கின.

ஒருவன் சொன்னான். “நாங்க டெய்லி இதுக்கு புல்லு, கானம் எல்லாம் குடுக்கறோம்ணே.”
மற்றவன் சொன்னான். “நேத்துக்கூட சோப்பு போட்டு குளிப்பாட்டினோம். எங்க கூட இது
ஃப்ரெண்டு தெரியுமா?”

அவன் அந்தச் சிறுவர்களை அன்புடன் பார்த்தான். பிறகு தனது சைக்கிளை எடுத்தான்.

“என்னப்பா கிளம்பிட்ட?”

”ஐயா.. நான் உங்க ஸ்டேசன்ல போய் எஸ்.ஐ. கால்ல விழுந்து கம்ப்ளைண்ட்
குடுக்கறேன். வேறென்ன பண்றது? அவராவது எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லட்டும்.”

“வேலு…. நீயும் அந்தாள்கூட போ! எஸ்.ஐ.கிட்ட விவரம் சொல்லு” என்றார் ஏட்டய்யா.

வேலுவும் அழகர்சாமியும் கிளம்பிப் போனார்கள். ஊர் ஜனங்கள் மத்தியில் நம்பிக்கை,
அவநம்பிக்கை, குழப்பம் எல்லாமும் இருந்தது.

ஏட்டய்யா, பெருமாள், வாத்தியார், கோவிந்தசாமி நால்வர் மட்டும் மண்டபத்தில்
இருந்தனர். ஊர் கலைந்து போய்விட்டது. “ரொம்ப ஆச்சர்யம்தான் வாத்தியாரே” என்றார்
ஏட்டய்யா.

”எதுங்க?” என்றார் வாத்தியார்.

“உங்க ஊர் அழகர் சாமியோட குதிரை காணாமப் போச்சு. வட்டப்பாறை அழகர்சாமியோட
குதிரையும் அதே நேரம் காணாமப் போயி.. இந்த ஊர் அழகர் சாமியைத் தேடி வந்துச்சு.
அந்த அழகர் சாமியோட குதிரைதான் எங்க அழகர்சாமியோட வாகனம்னு நீங்க சொல்றீங்க.
’இல்லையா.. அது என்  குதிரைன்னு’ அவன் சொல்றான்” கோர்வையாகப் பேசிவிட்ட
திருப்தியோடு ஏட்டய்யா சிரிக்க, இவர்கள் குழப்பத்தோடு தலையாட்டினர்.

வாத்தியார் நிதானமாகச் சொன்னார். “என்ன ஒண்ணு.. எங்க ஊர் அழகர்சாமி, குதிரை
ரெண்டுமே உயிருள்ள ஜீவன் கிடையாது. அவன் மனுசன், அவன் குதிரை நிஜமான குதிரை!”
வாத்தியார் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். ஏதோ பெரிசாக
அர்த்தம் இருப்பது போல தோன்றியது. ஆனால், புரியவில்லை. யாரும் எதுவும் பேசத்
தோன்றாமல் இருந்தனர்.

உயரமாக குதிரை நின்றிருக்க, ஒரு பையன் தடவிக் கொடுத்தபடி இருந்தான். ஒருவன்
புல் நீட்டி சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தான். மற்றொருவன் தன் வீட்டில் இருந்த
பவுடர் டப்பாவை எடுத்து வந்து குதிரையின் பின்புறம் இருந்த புண்களின் மீது
பவுடரைக் கொட்டி வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்தான்.

சாயந்திரம் ஆகிவிட்டது. சைக்கிளில் போன அழகர்சாமியும் வேலுவும் வருவார்கள்
என்று ஏட்டய்யா எதிர்பார்த்துக் காத்திருக்கையில், ஆச்சர்யமான தகவல் வந்தது.
ராமகிருஷ்ணனும் , சீரங்கனும் மொபெட்டில் சீறி வந்து தகவல் சொன்னார்கள்.
காணாமல் போன குதிரை கிடைத்து விட்டதாக!

ஊர் கூடியிருந்தது!

கடந்த சில தினங்களாக அடிக்கடி ஊர் கூடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்ல
பொழுதுபோக்காகவும், அதே சமயம் வேலையைக் கெடுக்கிறதாகவும் இருந்தது. என்றாலும்
சாமி சமாச்சாரம் என்பதால், எல்லோரும் கூடிவிட்டார்கள். எஸ்.ஐ. வருவதற்காகக்
காத்திருந்தார்கள்.

வட்டப்பாறை அழகர்சாமி ஸ்டேஷனுக்குப் போனபோது அங்கே எஸ்.ஐ. இல்லை. இரண்டு
கான்ஸ்டபிள்கள் மட்டும் இருந்தனர்.

”ஐயா வணக்கமுங்க.”

“என்னய்யா.”

“ஒரு புகார் குடுக்கணும்ங்க”

“என்னன்னு?”

”என் குதிரையை மீட்டுத்தரணும்ங்க.. எஸ்.ஐ. ஐயா இல்லீங்களா?”
கான்ஸ்டபிள்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “என்னய்யாது.. வர்றவன்லாம்
குதிரை குதிரைன்னே வர்றாய்ங்க. நாட்ல களவாணிப் பயலுக காசு பணம் திருடுறதை
விட்டுட்டு குதிரையா களவாங்குறானுகளா?”

“எஸ்.ஐ. ஐயா இல்லிங்களா?” என்றான் அழகர்சாமி மறுபடியும்.

“இத பாருய்யா! எஸ்.ஐ. ஐயா, ஏட்டய்யா ரெண்டு பேரும் அழகர்சாமியோட குதிரை காணாமல்
போனது சம்பந்தமா.. தாமரைக்குளம் போயிருக்காங்க.”

”ஐயா! நா அங்கிருந்துதானுங்க வர்றேன்.. என் குதிரையை எப்படியாச்சும் மீட்டுக்
குடுங்க. என் பொழப்பே அதை வெச்சுத்தானுங்க இருக்கு.”

“உன் பேரென்ன?”

“அழகர்சாமிங்க.”

அவருக்கு டென்ஷனாகிவிட்டது. “என்னடா.. நக்கலா பண்ற? அதான் கம்ப்ளைண்ட்
குடுத்து.. களவாண்டவன் சிக்கிட்டானே.. மறுபடியும் இங்க எங்கடா வந்து நீ புகார்
குடுக்கற?”

”அய்யா.. நீங்க வேற மாதிரி நினைச்சுக்கிட்டுப் பேசறீங்க… என்ன பிரச்னைன்னா,”
என்று வட்டப்பாறை அழகர் சாமி விவரிக்க, அவர்களுக்குத் தலை சுற்றியது.

“இத பாருப்பா.. எங்களுகுக் கிறுக்குப் புடிச்சிரும் போலிருக்கு. எஸ்.ஐ.
தாமரைக்குளம்தான் போயிருக்காரு.. நீ எங்கூட வா, யோவ்… நான்  இவனைக்
கூட்டிட்டுப் போறேன். ஸ்டேஷனைப் பாத்துக்க.”

“ஆமாய்யா.. ஒத்தைல விட்டுட்டு நீயும் கெளம்பு… ஸ்டேஷனே தாமரைக்குளத்துக்குப்
போயாச்சு.. என்னமோ பண்ணு போ!”

எஸ்.ஐ. வந்து சேர்ந்ததும் கூட்டத்தின் ஆவல் எல்லை மீறியது. எஸ்.ஐ. நடுநாயகமாக
சேர் போட்டு அமர்ந்தவாறு, நிதானமாகச் சொன்னார். “இதபாருங்க. குதிரை
சிக்க்ருச்சு. அது வேற எங்கயும் இல்லை. உங்க ஊர்லயே ஒரு தோட்டத்துல குதிரையைத்
திருடிக்கொண்டு போய் வெச்சுட்டு.. அது மேல கரும்புச் சோகையை அம்பாரமாப் போட்டு
ஒளிச்சு வெச்சிருந்தாங்க.”

ஊர், மூக்கில் விரலை வைத்தது. “அடேயப்பா! எமகாதகப் பயலுகளா இருக்கானுகளே..
யாருங்க அவனுக…?”

“அவனுக ஊர் ஊராப் போய் மோட்டாரு, எலெக்ட்ரிக் ஒயர் திருடுற கோஷ்டி. மோட்டார்
திருடத்தான் வந்தானுகளாம். உங்க ஊர் கிணத்துல படி எல்லாம் அவனுகளுக்கு வசதியா
இல்லையாம். இறங்கித் திருடுறதுக்கு தோது இல்லாம ஆழமா கிணத்தை வெட்டி
வெச்சிருக்கீங்களாம்.”

சிலர் மெல்லிய குரலில் சிரித்தனர்.

“அதனால என்ன பண்றதுன்னு பார்க்கறப்ப.. பாதுகாப்பேயில்லாம, இத்துப்போன பூட்டைப்
போட்டு வெறும் கம்பி கேட் மண்டபத்துல சாமியோட குதிரையைப் பாத்திருக்கானுக.
பூட்டையும் உடைச்சு குதிரையைத் தூக்கியிருக்கானுக. ரொம்ப கனமா இருந்ததால…
கரும்புத் தோட்டத்துல கொண்டு போய் மறைச்சு வெச்சிருக்கானுக.. இந்த ஊர்ல கிரஷர்
போடறதுக்கு வந்து தங்கியிருக்கிற ஒரு வெளியூர் குடும்பம் இதுக்கு உடந்தை.
அந்தத் தோட்டத்துலதான் இப்ப குதிரை இருக்கு.”

“அடடா!” என்று பிரமித்தனர்.

“உங்க ஊர்ல இந்த ராமகிருஷ்ணன், சீரங்கன்னு இளவட்டப் பசங்க இருக்கானுகள்ல..
அவங்கதான் கவனிச்சுத் துப்பு சொன்னாங்க. அதை வெச்சு இப்ப ஆளை மடக்கிட்டோம்.
அவனும் விபரத்தைச் சொல்லிட்டான். உங்க ஊர்ப் பசங்க உதவி பண்ணதாலதான் இதைக்
கண்டுபிடிக்க முடிஞ்சது.”

எஸ்.ஐ. இளைஞர்களை அழைத்துப் பாராட்ட, ஊரில் பட்டென்று அவர்களது மரியாதை
உயர்ந்தது. “பரவால்லிங்க பெருமாளு.. உங்க மகன் சாமி கும்புடமாட்டான்னு
வருத்தப்பட்டிங்க. இப்ப சாமிக்கே உதவி பண்ணி இருக்கான் பாத்தீங்களா!” என்று
வாத்தியார் சொன்னதும், பெருமாள் கண்கள் பனிக்கத் தலையாட்டினார்.

எஸ்.ஐ. எழுந்தார். “பிரச்ச்னை முடிஞ்சிருச்சு! பெரிய மனுஷங்க எல்லாரும்
இருக்கீங்க. வாங்க போய் குதிரையை எடுத்துட்டு வந்து ஊருக்குள்ள வெச்சிருவோம்.
நல்ல விதமா திருவிழா கொண்டாடுங்க.. என்ன?”

”நல்லதுங்க” என்றார் பெருமாள்.

”திருட்டுப்போன குதிரை. அதை ஊருக்குள்ல கொண்டு வரணும்னா சில பரிகார பூஜை
எல்லாம் பண்ணனும்” என்று ஒரு கோரிக்கைக் குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தார் எஸ்.ஐ. உள்ளூர்க் கோடாங்கிதான் இதனைப் பெருமாளைப்
பார்த்துச் சொன்னார். எஸ்.ஐ.க்கு ‘சுர்’ என்றது.

“எங்கய்யா அந்த வெளியூர் குறிகாரன்?”

“அவன் ஆளு எஸ்கேப் ஆய்ட்டாங்க. குதிரை கிடைச்ச விஷயம் தெரிஞ்சதும் நைஸா
கிளம்பிப் போய்ட்டான்” என்ற கோடாங்கியின் குரலில், இழந்த அந்தஸ்து திரும்பிக்
கிடைத்த மகிழ்ச்சி புரண்டது.

எஸ்.ஐ. தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சொன்னார். “இத பாருங்க. குதிரையை மீட்டுக்
குடுத்தாச்சு. அடுத்து நீங்க என்ன பண்றதுன்னாலும் அதைப்பத்தி எனக்கொண்ணுமில்ல.
பிரச்னை மட்டும் வரக்கூடாது, ஆமா!”

அப்போது வட்டப்பாறை அழகர்சாமி வந்து சேர்ந்தான். ஏட்டய்யா ஏற்கனவே அவனைப் பற்றி
எஸ்.ஐ.யிடம் சொல்லி இருந்தார்.

“என்ன அழகர்சாமி.. உன் குதிரை வேற நடுவுல வந்து குழப்பம் பண்ணிடுச்சு. முதல்ல
அதை கூட்டிட்டுக் கிளம்பு!” என்றார் எஸ்.ஐ. புன்னகையுடன். அவன் நன்றிப்பெருக்குடன் கை கூப்பிவிட்டு, தனது குதிரையை அவிழ்த்தான். சுற்றி நின்றிருந்த
சிறுவர்களின் முகத்தில் ஒரு ஏக்கம் தென்பட்டது. அவன் அவர்களை ஒவ்வொருவராக
குதிரை மேல் ஏற்றியபடியே கொஞ்ச தூரம் நடத்திக்கொண்டே போனான். சோகத்துடன்
சிறுவர்கள் கூடவே போய் பிறகு திரும்பினார்கள்.

ஒருவழியாக ஊரிலிருந்து ஒரு கும்பல் கிளம்பி எஸ்.ஐ.யுடன் சென்றது. குதிரையை
எடுத்துத் துடைத்து தூக்கி வந்தார்கள். உள்ளூர் பூஜை என்று எதையோ செய்தார்.
ஊரில் குதிரையைக் கொண்டு வந்து வைத்து செப்பனிட்டு, பெயிண்ட் அடிக்கும் வேலை
கண்ணு ஆசாரி தலைமையில் துவங்கியது.

எஸ்.ஐ எழுந்தார் … “அப்ப கிளம்பறோம்! திருவிழா நடந்து முடியற வரைக்கும்
அப்பப்ப வந்து போவோம்” என்றவர் ,ஏட்டய்யா பக்கம் திரும்பி , “எங்கய்யா அவன்
சந்திரன் ஆளையே காணோம்.”

எங்கேயோ மறைவாக உட்கார்ந்திருந்த சந்திரனை வேலு அழைத்து வந்தார்.

“என்னய்யா குறி எல்லாம் சொல்லி முடிச்சாச்சா ?”

தலை குனிந்து நின்றான் சந்திரன்.

“சூலி இன்னும் உன்கிட்டதான் இருக்காளா?”

சந்திரன், தலை நிமிரவில்லை.

“நீ ஸ்டேசனுக்கு வா… பேசிக்கறேன்”

எஸ்.ஐ., ஏட்டய்யா,வேலுவுடன் பலியாடு போல சென்றான் சந்திரன்.

ஊர் களை கட்டத் துவங்கியது. மக்கள் எல்லாம் உவப்போடு வரி கொடுத்து சாமி
கும்பிடத் தயாரானது அந்த வருடத்தில்தான். குதிரைக்கு விசேஷ வர்ணங்களைப் பூசி
பளபள என்று ஆக்கியிருந்தார்கள். இத்தனை நாள் நிஜக் குதிரையைச் சுற்றி
அமர்ந்திருந்த சிறுவர்கள் இபோதெல்லாம் அழகர்சாமியின் வாகனத்தை சுற்றி
அமர்ந்திருந்தனர்.

பெருமாள் மனதில் லேசான நிம்மதி பூத்திருந்தது, ஊரை அடக்கி போடப்பட்டுக் கொண்டு
இருந்த பந்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட்டபடி நின்றிருந்தார். வெயில் கொளுத்தி
வியர்வை வழிந்தது. வாத்தியார் அவரிடம் வந்தார்.

“வாங்க வாத்தியாரே!”

“ஏன்னா பெருமாளு…ஏற்பாடெல்லாம் எந்த அளவுல நடக்குது?”

“எல்லாம் ரொம்ப ஜரூர்தான், இன்னும் கொஞ்ச நேரத்துல கொட்டகை போட்டு
முடிச்சிருவாங்க. பெருமாளின் கண்கள் கவலையோடு வெறித்து வானத்தை பார்த்தன.

“என்ன அமைதியாகிட்டிங்க?”

“நல்ல வேலையாப் போச்சு வாத்யாரே… இந்த முறை எந்தத் தடங்கலும் இல்லாம திருவிழா
நடக்குமா நடக்காதான்னு நானா ரொம்பப் பதறிட்டு இருந்தேன். அன்னிக்குக் கூட
சொன்னேனே… இந்த முறையாவது மழை தண்ணி நல்லாப் பேயனும்… அதனால எந்தக்
குறையும் இல்லாம சாமி கும்பிடனும்னு நினைச்சிட்டு இருக்கிறதா…!”

“ஆமா சொன்னிங்க”

“குதிரை காணாமப் போனதும் பதறிப் போயிட்டேன். திருவிழா தடைப்பட்டுப் போயி ஊரு
இந்த வருஷமும் காய்ஞ்சு போகுமோனு பயந்தேன். நல்ல வேளை.. குதிரை திரும்பிக்
கிடைச்சிருச்சு. திருவிழாவை நல்லபடியா நடத்தி முடிச்சு..மழையும் பேய்ஞ்சுட்டா.
மனசு நிம்மதி ஆயிரும்”

“மழை பேஞ்சிச்சுன்னா  சரி ” என்றார் வாத்தியார்,

“என்ன வாத்யாரே இழுக்கறிங்க… சாமியை நம்புவோம். நிச்சயமா மழை பேயும்” என்றார்
பெருமாள். கருடன் ஒன்று அந்நேரம் வானில் வட்டமடிக்க, படபடவென்று கன்னத்தில்
போட்டுக் கொண்டார்.

பவுர்ணமி… ஊரே கோலாகலாமாயிருந்தது. வாணவேடிக்கைகள் ஸ்பெசலாக வரவழைக்கப்பட்டு,
மூன்று பேர் ஊர் மந்தையில் வெடித்து தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு
மூன்று செட்டு மேளக்காரர்கள் மாறி மாறி ஊருக்குள் வாசித்துக் கொண்டு இருக்க
மைக் செட்டுகள் கதறின.

ஊரில் முக்கியஸ்தர்களும், ஜனங்களுமாக நூறு நூற்றைம்பது பேர் சென்றனர்.
மலையடிவார  மண்டபத்தில் புதுப் பெயின்ட் பொலிவுடன் குதிரை காத்திருந்தது.
அதனைப் பார்த்த பெருமாள், வாத்தியார், கண்ணு ஆசாரி ஆகியோர் மனம் நிறைந்து
கண்கள் கசிந்தன. கீழே விழுந்து வணங்கி தேங்காய் உடைத்த பின், குதிரை கிளம்பியது.

வாண வேடிக்கைகள் உயரச் சென்று வெடிப்பதைப் பார்த்தபடி நின்ற பெருமாளுக்குள்
சிறிய சஞ்சலம் தோன்றியது. வானத்தில் ஒரு மேகத் துணுக்கு கூட இல்லை.. ’கடவுளே!
இந்த வருஷமும் ஏமாத்திறாத’ என்று தனக்குள் தொழுதார்.
ஆத்துல இறங்கின சாமி கோயில்ல எழுந்தருளரதுக்குள்ள ரெண்டு தூறலாவது போடணும்
என்று மனம் இறைஞ்சியது. கொட்டித் தீர்க்கணும் என்று இருக்க வேண்டிய வேண்டுதல்,
இப்போது தூறலில் நிற்கிறது.

எப்போதும் அழகர் ஆற்றில் இறங்குகையில் குதூகலித்துப் பரவசத்தில் லயிக்கிற
மனநிலை இன்றைக்கு அவருக்கு வாய்க்கவில்லை. பந்தத்தை எடுத்துக்கொண்டு குரல்
கொடுத்தபடி ஒருவன் முன்னால் ஆடிச் செல்ல, அந்த நள்ளிரவில்  அழகர்சாமி தனது
குதிரை சகிதம் ஆற்றை அடைந்தார்.

அந்த காட்டாற்றின் வறண்ட மணற்பரப்பில் மக்களின் குரலொலியும், வாத்திய
சத்தங்களும் வான வேடிக்கைகளும் உச்சத்தை எட்ட, அழகர் ஆற்றில் இறங்கினார்.
வானம் துல்லியமாக இருந்தது. பவுர்ணமியின் பால் போன்ற வெளிச்சம், நட்சத்திரங்கள்
கண் சிமிட்டிக் கொண்டு இருக்க…பெருமாளின் மனதில் துயரம் கவிந்தது.
சாமி சந்நிதியில் குடிகொண்டு விட்டார். இன்னும் ஒரு வாரத்துக்கு அவர்
கோயில்வாசி தான். கரகாட்டம் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தது. ஊரே கூடி அதை
வேடிக்கைப் பார்க்க, தனது வீட்டு திண்ணையில் சாய்ந்து தனியே அமர்ந்திருந்தார்
பெருமாள்.

அவரைத் தொட்டு எழுப்பியவன் மப்டி போலீஸ் சந்திரன். திடுக்கிட்டு விழித்தார்
பெருமாள். மணி அதிகாலை ஐந்து இருக்கலாம். கரகாட்டம் உச்சத்திலிருந்தது. பந்தல்
பக்கம் ஜனங்களின் கரவொலி.

“என்னங்க?”

“எஸ்.ஐ. ஐயா உங்களை கையோட ஸ்டேசனுக்கு கூட்டி வரச் சொன்னார்!”

“எதுக்கு ?” என்றார் குழப்பமாக.

“உங்க பையன் ராம கிருஷ்ணனும்,கோடங்கி மக மாரியும் ராத்திரியோட ராத்திரியா ஓடிப்
போய்க் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. இப்ப ஸ்டேசன்ல வந்து என்கிட்டே
அடைக்கலாமாயிட்டாங்க. கூப்பிட்டுப் பேசணும்னு உங்களை எஸ்.ஐ. ஐயா வரச்
சொன்னாரு,”

உச்சந்தலையில் இடி விழுந்தது போல இருந்தது பெருமாளுக்கு.

எழுந்து நின்றவருக்கு லேசாகத் தலை சுற்றியது.  பிரச்னை இல்லாமல் எல்லாம்
நடந்து விட்டதென்ற சந்தோசம் காணாமல் போக, தூணைப் பிடித்து கண்மூடி சற்று
நின்றார்.

சந்திரன் மொபெட்டில் வந்திருந்தார். “சீக்கிரம் இருங்க,போலாம்.. விடிஞ்ச பிறகு
ஊர்ல விவரத்தை சொல்லுவோம்”

என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ ஊரில் என்ற பீதி பெருமாளின் அடிவயிரைப்
புரட்டியது. இப்படிப் பண்ணிட்டானே படுபாவி! சாதி விட்டு சாதி கல்யாணம்! இந்த
ஊர்ல, அதிலேயும் என் புள்ள, பாவி! படுபாவி! கலி முத்திப் போச்சு.. பஞ்சம் வந்து
அழியப் போகுது ஊரு!

அப்போது பெருத்ததோர் இடியோசை  சடசடத்தது. கண்ணைப் பொசுக்குவது போன்றதொரு
மின்வெட்டு! கணநேரம் அதிர வைத்து அடங்க, வானமே கிழிந்தது போல் மழை கொட்டத்
தொடங்கியது.

காஞ்சனை – புதுமைப்பித்தன்
1
அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும்  பொய்; அதாவது – கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக ‘மெஜாரிட்டி’யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? “அட சட்!” என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால், அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?

உடனே விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி ‘டொடக்’ என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும்! நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா? உள்ளங்கையில் கொட்டி வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.

சீ! என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க, புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து, வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.

துர்நாற்றம் தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே! கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.

தும்மல் என் மனைவியை எழுப்பிவிட்டது. “என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை? மணி என்ன?” என்று கொட்டாவி விட்டாள்.

மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று.

என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது.

“உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா?” என்று கேட்டேன்.

“ஒண்ணும் இல்லியே” என்றாள்.

சற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு, “ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்” என்றாள்.

விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான்.

லேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல், கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.

துர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.

2

நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.

“ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?” என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். ‘ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்’ அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.

“அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை” என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்.

“உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!” என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.

நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.

அப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, “அம்மா, தாயே!” என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.

நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.

“உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?” என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.

“வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா” என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.

“நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!” என்றாள்.

“அது போதாதா அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?” என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.

“என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே” என்றாள் என் மனைவி.

“சீ! உனக்கு என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?” என்றேன்.

வெளியில் நின்ற பிச்சைக்காரி ‘களுக்’ என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.

“முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ இப்படி உள்ளே வாம்மா” என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா? மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது!

என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை!

தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி ‘களுக்’ ‘களுக்’ என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது, சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.

சாயந்தரம் இருக்கும்; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.

“நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு” என்றாள் என் மனைவி.

“ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே, காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?” என்றாள்.

“சொல்லேன்; என்ன கதை?” என்று கேட்டாள் என் மனைவி.

“அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.

“இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக் குருவுக்கு…”

என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது ‘சரித்திர சாசனங்கள்’ என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், ‘அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது’ என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.

திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.

“உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே” என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது.

“காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு” என்றாள் பிச்சைக்காரி.

என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா?

நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை, “பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம்?” என்ற பாணம் எதிரேற்றது.

காஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக் காப்பாற்றுவது?

சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள்.

நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது.

எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது.

பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.

எங்கோ கதவு கிரீச்சிட்டது.

திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.

நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.

என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.

அவளுடையதுதானா?

எழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.

கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்!

போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.

ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.

மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.

கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.

திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?

விடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.

அங்கே அமைதி.

பழைய அமைதி.

மனம் தெளியவில்லை.

மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன்.

மனித நடமாட்டம் இல்லை.

எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.

பிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.

வெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன்.

ஆனால் கீழே!

மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

கீழே இறங்கினேன்.

தைரியமாகச் செல்ல முடியவில்லை.

அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, “என்ன, தூக்கம் வரவில்லையா?” என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.

அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.

நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.

“என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!” என்று என் மனைவி எழுப்பினாள்.

இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?

தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், “ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?” என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?

இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ? அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.

இன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.

இரவு படுக்கப் போகும்போது என் மனைவி, “காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்” என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.

இது என்ன சூழ்ச்சி!

இன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன்.

“என்ன படுக்கலியா?” என்றாள் என் மனைவி.

“எனக்கு உறக்கம் வரவில்லை” என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது.

“உங்கள் இஷ்டம்” என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?

நானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன்.

சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன்.

பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.

இதென்ன வாசனை!

பக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது.

சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை எழுப்பி உருட்டினேன்.

பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். “ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.

கழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.

“பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய்” என்று மனமறிந்து பொய் சொன்னேன்.

அவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள்.      அதே சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.

கர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு.

அதிகாரத் தோரணையிலே, “காஞ்சனை! காஞ்சனை!” என்ற குரல்.

என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.

அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி.

நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

நடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!

“இங்கே வா” என்று சமிக்ஞை செய்தான்.

நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.

போகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.

தெருவிற்குப் போனேன்.

“அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே” என்றான்.

விபூதி சுட்டது.

நான் அதைக் கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே!

மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.

காலையில் காப்பி கொடுக்கும்போது, “இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!” என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல?

குளத்தங்கரை அரச மரம் – வ.வே.சு.ஐயர்
பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன்! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப்பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.

குளத்தங்கரையெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லாமல் பட்டுப்போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன்அதன் புஷ்பங்களை பொறுக்கி ஆசையுடன் மோந்து பார்க்கும்…ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் ஆசையாயிருக்கிறது! ஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாயிருக்கும்போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்று போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் அவளே எதிரில் வந்து நிற்பது போலிருக்கிறது எனக்கு. அவள் நெத்தியின் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள் அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விசாலம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமற்ற நீல ஆகாசம் ஞாபகத்துக்கு வரும். அவள் கண்களை பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான நீரோடையைப் போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு! ஸோமவார அமாவசைகளில் பரமாத்மாவைப் பூஷிக்கிறதற்காக என்னைப் பிரதஜிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே! ஐயோ, என் ருக்மிணித் தங்கமே! எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தைகள்? அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக்கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால் சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுத்தான் போவார். நம்ர் மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக்கண்டதும் உடனே முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும். குழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அனால் அவள் வந்துவிட்டால் போதும், மெய் மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்கு குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தை காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மிணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான்.  ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. நான் மாத்திரமா? ஊரில் உள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிலிருந்து அவளிடத்தில். அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் நம்ம ருக்மிணி அணிந்துகொண்டால் அழகாக இருக்கும்’ என்று உடனே வாங்கி வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கும் அவளுடைய அலங்காரத்திற்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! கண்கொள்ளா காட்சியாயிருந்தது எனக்கு! அவள் குரலைப்பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக் கம்பிபோல் இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ராக்களின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடன் நயத்துடன் என் மனசில் கேட்கிறது. அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும்போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான் வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில் விட அதிக பாசம் காட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவதை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதை விட அதிகமாகவே போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது. இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்து வந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும்! நான் பாவி வெச்ச ஆசை பழுதாய் போகனுமா! பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு? ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்மூர் மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும், அத்தனை அழகாயிருந்தது. அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததை பார்க்கும்போது, மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே அந்த மாதிரியேதான் இருந்தது. காமேசுவரையர் ருக்மிணிக்கு கல்யாணப் பந்தலில் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டுபோய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்கு தலை பிண்ணிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப் போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகல விதமாகவும் ஜானகி (அதுதான் ருக்மிணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபிமானத்தை காட்டி  வந்தாள். மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும்ருக்மிணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில்அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செலவத்திலும் சரியானஇணை என்று நினைக்காதவர், பேசிக்கொள்ளாதவர் கிடையாது. இப்படி என்று வருஷ காலம் சென்றது. அந்த ணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சு போய்விட்டது. ரொக்க வேஷியையெல்லாம், ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம், அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்ர் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மிணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள்தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துதான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைதத் தீர்க்க வேண்டியதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க் காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே, இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக் கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மிணியும் ஆயுஸோடு இருக்கிறவரையில் எனக்கு குறைச்சலுமில்லை. இந்த தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணிப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக்கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக்கொண்டே எங்கள் காலத்¬க் கழித்து விடுகிறோம்” என்று சொல்லுவாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்? காமேசுவரையர் ஐவேஷியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டதும் ராமசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர் ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமேசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக்கண்டால் பத்து நிமிஷம்பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதை கண்டுவிட்டால், ஏதோ, அவசர காரியமாகப் போகிறதுபோல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாக போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலேநீங்கள் நினைத்துக்கொண்டுவிடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெறுங்குவதை நிறுத்திவிட்டாள் ஆனால் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது உறவு கொண்டாடுகிறது; அது போய்விட்டபோது வேத்து மனுஷாள்போல போய்விடுகிறது- இதெல்லாம் ஒரு சிநேகிதத்தோடு சேர்த்தியா? ஆனால்அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அறுபத்துநாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிட்டானதும், ருக்மிணியை அழைத்துக்கொண்டுவரும்படி வேலைக்காரியை அனுப்பிவிடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலைப்பின்னி, மை சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிவிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக்கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். ஆனால், அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்டபிறகு வந்து முதல் வெள்ளிக்கிழமையன்னைக்கே, எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்’ என்பாள். அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக்கூட நிறுத்திவிட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கும் மிகுந்த துக்கத்தை தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா! நம்ப மாமியார் கூட, என்று மிகவும் வருத்தப்பட்டாள். இப்படி கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் குசு குசு’என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலேதான். அரைவார்த்தையும் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயோழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை.எனக்கு மனசு குருகுருத்துக் கொண்டேயிருந்தது. ஏதோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு என்று மாத்திரம் தெரியவில்லை. கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்தையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய் சமாசாரம் என் மனசுக்கு அத்துபடியாச்சு. ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சி போய்விட்டது. குழந்தை ருக்மமிணியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிப்பாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணித்து அது உன்னை! அதை கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும்விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்தில் ஈ ஆடாது. எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பனாருக்கு கேட்கனுமா? இனிமேல் நாகராஜனைப்பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக்கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகிவிட்டது. தாயார் தகப்பனார் அவன் மனத்தைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங்கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகெதிதான் என்று நினைத்துவிட்டேன். தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்தி பெண்ணாம். தகப்பனாருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்த பெண்ணைத் தவிர காலக்கிரமத்தில் இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்து சேர்ந்து விடுமாம். இதெல்லாம் எனக்கு கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி பகலில் வெளியிலேயே வருவதில்லை. சூரியோதையத்துக்கு முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டு தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியாயிருக்கும். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோவென்று வாழ்ந்துவிட்டு, இந்த கதிக்கு ஆளானோமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடு வாசல் போய்விட்டதே என்றாவது , நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக்கொண்டிருக்கும்படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க , ஜானகி அதன் பேரில் கொஞ்சம் கூட இரக்கம் வைக்காமல் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணிவைக்க நினைத்துவிட்டாள் பார்த்தயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்! அப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந்தெரியாது. அறியாக்குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ! ஒரு வேளை, மாமியார் நம்மை கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ? அல்லது மாமியார் என்னநினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்கமாட்டான் என்று நினைத்தாளோ?

இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளக்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகுங் கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்!அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள். ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜனுடைய மனதில் மாத்திரம் இன்னது  இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காரம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. ஆனால் முகத்தை விட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாகவேயிருப்பான். கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிக்கையையும் வாசித்துவிட்டுபோய்விட்டார்கள், ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேஸ்வரையருக்கு எப்படியிருந்திருக்குமோ? மீனாட்சி மனசு எப்படி துடித்ததோ? ருக்மிணி எப்படி சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குதான் தெரியும். நாகராஜனுக்குக்கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது பார்த்தாயா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானோ என்று கூடச் சொல்லிவிடுவேன்…. இப்படி என் மனசு தளும்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தார்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூட படித்துக்கொண்டிந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனை பார்க்கறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே ? நம்ம குளத்தங்கரைதானே? ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணிருக்க, பெண் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதிவிட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்துவிட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி அதெல்லாம் வாஷ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட்டபோது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப்போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார் லட்ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி இருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்ச ரூபாய் சொத்து சேருமாம். இப்படி, தானே வருகிற ஸ்ரீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?” என்று சொன்னான். இந்த வார்த்தையெல்லாம் சொல்லும் போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்வது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?” என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங்கரையும் படியாக ருக்மிணிக்காக பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும், க்ஷேமமாக இருக்கவேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன். ஆனால் அவன் பேசினதும் நாகராஜன் அவனைப் பார்த்து , ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம் விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாக போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குதெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை, என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம்; இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியது என்று நிச்சயித்துவிட்டேன். நான்எத்தனை மறுத்தும் அம்மாவும் அப்பாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆகையால் மன்னார் கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப்படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமாங்கல்யத்தில் நான்தானே முடிச்சு போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்தச் சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சித்தின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா?” என்று சொல்லி முடித்தான். ஆனால் நீ விவாகத்துக்கென்று போகுங்காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?” என்று ஸ்ரீநிவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், யோசித்தேன்; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் , திடீரென நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிடமாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்களையெல்லாம் மணப்பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன்’ என்று நான் சொல்லுங்காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப்பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான். அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக்கொண்டிருக்கும்? நினைத்துப்பார்” என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை; இன்று வெள்ளிக் கிழமை. ஞாயிற்று கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப்போகிறோம்.  அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்தநாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா? என்றான். என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது” என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை. அன்னைக்கு ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே வரவில்லை. பார்த்தாயா, நாகராஜனை வையக்கூட வைதேனே பாவி, அவனைப்போல ஸத்புத்திரன் உண்டா உலகத்திலே’ என்று சொல்லிக் கொண்டேன். இனிமேல் பயமில்லை; அஞ்சு நாளென்ன, பத்து நாளென்ன? நாகராஜன் பிடிவாதக்காரன்; சொன்னபடியே செய்துவிடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லை’ என்று பூரித்துப் போய்விட்டேன்.

ஞாயிற்றுக் கிழமை; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது ஆனால் அவர்களை கூப்பிட்டு நல்ல புத்தி சொல்வதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர்கள் கட்டுப்படுபவர்களும் இல்லை. அவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங்கொஞ்சம் வயித்தெரிச்சல்தான் அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள்தான் துணை. சனிக்கிழமை ராத்திரியாச்சு. றுரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாக குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில  நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப்பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொருதடவை பின் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது. கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும்போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சுக் கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உன்னிப்பாய் கவனிக்கலானேன். ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாய் நாகராஜன் தலையை தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக்கொண்டு, ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமா நீ?” என்று கேட்டான். நீங்கள் இருக்கிற இடத்தில் தனியாக நான் இருக்க வேண்டிய நாள் வரவில்லையே ” என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு ன்று நிமிஷத்துக்கு ஒரு வரும் வாய்திறக்கவில்லை. இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந்தெரியவில்லை. கடைசியில் நாகராஜன், இந்த வேளையில் நாம் இங்கே இருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள்; வா, அகத்துக்கு போய்விடலாம் என்றான். அதற்கு ருக்மிணி, உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்” என்றாள். சொல்லேன்” என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள்: எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த ணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமே யொழிய மனுஷாளுக்கு தெரியது நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்கள் என்னைக் கை விடமாட்டீர்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் நீங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரைஅழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது . நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால்தான் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான்; அதில் சந்தேகமில்லை.” இந்த வார்த்தையைப் பேசும்போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மிணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே; நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?” என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன், ஆமாம், போகலாம் என்றுதான் இருக்கிறேன்” என்றான். அப்படி அவன் சொன்னதும் ருக்மிணிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடு கிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் தளும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்படியானால் நீங்கள் என்னை கைவிட்டு விட்டீர்கள்தானே ?” என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே? ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒரு நாளும் தள்ளிவிட மாட்டேன்” என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் மறுவிவாகம் பண்ணிக்கொண்டுவிடுகிறது. நான் கவலைப்படாமல் இருக்கிறது. என்னை ஒரு நாளும் கைவிடமாட்டீர்கள். ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள். நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்”என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன்’ என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தையை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேற்றலாம் ? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையால் மாத்திரம் காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே; இப்படித்தானா பண்ணிக்கொள்கிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே! எங்கே உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே ! என் கண்ணே, இப்படி இருக்காதே. உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன், எனக்கு பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க. சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில் கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது, இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது” என்று சொல்லி முடித்தான். ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. சொல்லித்தான் வைத்தானா பாவி! ஆனால் அவனுக்கு அவனுடைய விளையாட்டுதான் பெரிதாய்பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும் இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே. அந்த சமயத்திலே, எங்கே தெரிந்திருக்கப்போகிறது குழந்தைக்கு? அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப்போல் தூக்கி மார்போடே அணைத்துக்கொண்டு, என்ன, ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி; நான் என்ன செய்யட்டும்?”என்று கருணையோடு இரங்கி சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏரிட்டு பார்த்தாள். அந்த பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப்போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு, தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போல் தென்பட, அவனும் பதை பதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக்கொண்டு போய் அப்பா, பிழைத்தோமடான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும், அவன் முகம் எப்படியாகிவிடும், அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில்
பிரதிபலித்துக்காட்டிய அவள் மனசும். எல்லையில்லாத துன்பம், எல்லையில்லாத கஷ்டம், அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு, நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒன்னுமில்லை. மன்னார்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்கு சொல்லமாட்டேன் என்கிறீர்கள்; இன்றோடு என் தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத்துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதைநம்பிக்கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக்கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. ளுங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம், உங்களை இப்படியெல்லாம் செய்யசொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள். அவள் நம் பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிறபோது கூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக் கேட்டுக்கொள்வது” என்று சொல்லிக்கொண்டு நாகராஜன் காலில் விழுந்து, காலை கெட்டியாய் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

நாகராஜன் உடனே அவளை தரையிலிருந்து தூக்கியெடுத்து, பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவிடாதே, நீ போய்விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுகும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்று போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது; வா அகத்துக்கு போகலாம்” என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம், ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிறது போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும்போலே இடிஇடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம்போல அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருநத இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும்போது, ருக்மிணி வீட்டுக்கு போக மனமில்லாமல் பின்வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வதும் மாத்திரம் கண்ணுக்கு தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. …..பிராணன் நிற்காது….அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி…..வெள்ளிக்கிழமை காலமே…..ஸ்திரீகளின். ….உடைந்து விடும்….. சொல்லாதே….. கொடுத்துவைத்ததுதானே…..அந்தப் பெண்ணையாவது நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்…..மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்…..அன்றைக்கு தெரிந்து கொள்வாய்…..கடைசி நமஸ்காரம்… வரையில் பொறுத்துக்கொள்…..” இந்த வார்த்தைகள்தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்கு கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் மறைந்து போய்விட்டார்கள். ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது. மழை நின்றுவிட்டது. ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை.மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல் கதறிக் கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது . எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக்கொண்டு வருகிறது? காரணம் ஒண்ணும் தெரியவில்லையே’ என்று நான் எனக்குள் யோசித்துக்கொண்டேயிருக்கும்போது மீனா, என்னடியம்மா, இங்கே ஒரு புடவை மிதக்கிறது!” என்று கத்தினாள்.

உடனே பதட்டம் பதட்டமாய், அந்த பக்கம் திரும்பினேன். குளத்திலே  குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு காதோடு காதாக ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு பஞ்சப்பிராணணும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாக்ஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே ர்ச்சை போட்டுவிட்டேன். அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன,வையாதெ போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஷீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்துபோய்விட்டாளே என் ருக்மிணி. கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள். அவள் பொன்னான கையாலே! குளத்தங்கரையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடாத மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழையதுக்கக் குறிப்பெல்லாம் போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது! இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப் போது இருந்தது. அதற்குள்ளே, நாகராஜன் வ’றான், நாகராஜன் வ’றான், என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம், நிசந்தான், அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்துகொண்டிருந்தான். வந்துவிட்டான். மல்லிகை செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!”என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல் சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் பென்று அடங்கிப் போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் ர்ச்கை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்தி லே ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தை பார்த்து, என்னுடைய எண்ணமத்தையும் பாழாக்கிவிட்டு ஜூலியத் மாதிரி பறந்தோடிபோய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலைசெய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே! குஸும ஸத்ருசம் ……ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்” * என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!” என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராய் கிழித்து விட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டேன். இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்? திதிதி *காளிதாசன், மேகஸமேதேசம் – பொருள்: பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும்.

முகமூடி மனிதர்கள்
முதன் முறை வட்சலா மேடத்தைப் பார்த்ததுமே, இனி எனக்கு ஜெயம்-தான் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. ஆமாம், பிரபல தமிழ் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்து மாதம் இரண்டாகப் போகிறது. ஆனால் உருப்படியாக இன்னும் ஒரு பேட்டியையும் எடுத்த மாதிரி இல்லை. எடிட்டரிடம் பேச்சு வாங்கியதுதான் மிச்சம். நானும் முயற்சிக்காமல் இல்லை. இட்லி கடை நடத்துகிற பாட்டியில் ஆரம்பித்து இன்போஸிஸ் கம்பெனியின் தலைவர் வரை எல்லோரையும் பேட்டி எடுக்க முயற்சி செய்தாகிவிட்டது. சினிமாக்காரர்களை பேட்டி எடுக்க முயற்சித்ததில் ‘புது ஆள், உனக்கு என்ன தெரியும்’ என தட்டிக் கழித்தனர்.

திறமைசாலிகளைத் தேடிச் சென்றால் அவர்களுக்கு பத்திரிக்கைக்கு தகுந்தமாதிரி பேசத் தெரிவதில்லை. நாமாக கேள்வி கேட்டாலும் வாய் பொத்தி சிரிக்கிறார்கள். அதைத் தாண்டி பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றிய செய்தியோ, கட்டுரையோ வர வேண்டும் என நினைப்பவர்களிடம் விஷயம் இல்லை. முகஸ்துதி பாடும் விளம்பரமாகவே இருக்கிறது அவர்கள் பேச்சு. திக்கிக் திணறி இதையெல்லாம் கட்டுரையாக எழுதித் தந்தால் `ஜீவனில்லை` என துரத்தி அடிக்கிறார் சப் எடிட்டர்.

இன்னும் ஒரு வாரம் அவகாசம். அதற்குள் உருப்படியாய் ஒரு பேட்டி எழுதித் தந்து வேலையை தக்க வைத்துக் கொள்கிற வழியைப் பார் என அலுவலகத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்ட மூன்றாவது நாளில் தான் வட்சலா மேடத்தை சந்தித்தேன். ஓவியர், சமூக சேவகி, கலை இலக்கிய வாதி என ஏகப்பட்ட பட்டங்களை சுமந்து கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படித்திக் கொண்டவுடன் முகம் மலர வரவேற்றார். தன்னைப் பற்றி அதிக விவரங்களை அடக்கத்துடன் தந்தவர் நிச்சயம் என் வேலையை காப்பாற்றி விடுவார் என நினைத்தேன்.

வட்சலா மேடம் சாதாரண மனுஷி இல்லை என அன்றே புரிந்து போனது. ஓவியங்களில் மிக கடினமானதும், திறமையானதுமான தஞ்சாவூர் ஓவிய பாணியில் கடவுள் உருவங்கள் வரைவதை மட்டுமே அவர் லட்சியமாக கொண்டிருந்தார், இலக்கியத்தில் இலக்கணங்களை கரைத்து குடித்தவராக இருந்தார். படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு பணம் தந்து உதவி செய்தல், ரக்‌ஷா பந்தன் (சகோதரன் நலமாக இருக்க வேண்டும் என அவரின் சகோதிரிமார்கள் கடவுளை பிரார்த்தனை செய்து, கையில் ராக்கி என்னும் கயிறு கட்டி விடுவார்கள்) அன்று இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ராக்கி கயிறு வாங்கி அனுப்பி வைப்பார். முதியோர் இல்லங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி வைப்பார். தவிர சமூக நல அமைப்பு ஒன்றில் சென்னை வட பகுதிக்கு தலைவியாக இருந்தார். அவரின் பிள்ளைகள் இருவரும் அமெரிக்க வாசிகள். மூத்தவர் அங்கு வேலை பார்க்க, இளையவரோ படித்துக் கொண்டிருந்தார். வட்சலா மேடத்தின் கணவர் சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர்.

அறிந்த விசயங்களை அழகான தமிழில் கோர்வையாய் எழுதிக் கொடுக்க, அது அடுத்த வார பத்திரிக்கையில் மூன்று பக்க கட்டுரையாக பெரிய புகைப் படத்துடன் வந்திருந்தது. அன்றே பத்திரிக்கையை தூக்கிக் கொண்டு டூவீலரில் அவரின் வீட்டிற்கு விரைந்தேன். மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்று பலகாரங்கள் தந்து உபசரித்தார். இதுவரை செய்தித்தாள்களில் ஓரிரு வரிகளில் அவரைப் பற்றி செய்தி வந்திருக்கிறதாம். முழுதாய் மூன்று பக்க அளவில் அதுவும் பிரபல பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வந்தது இதுவே முதல் தடவை என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் என்பது அவரது வார்த்தைகளில் தெரிந்தது. இனி நாம் இருவரும் நண்பர்கள், அடிக்கடி என் வீட்டிற்கு வர வேண்டும் என அவர் சொல்லும் போது `நடக்கிற விசயமா` என்றாலும் விரைவில் 52 வயதான வட்சலா மேடமும் 21 வயதான நந்தினி ஆகிய நானும் நண்பர்கள் ஆனோம்.

அந்த மாதக் கடைசில் நான் தங்கியிந்த மகளீர் விடுதியில் இருந்து மாற வேண்டிய சூழ்நிலை. ஏனோ விதி அவங்க இருக்கும் அதே ஏரியாவுக்கே என்னையும் இடம் மாற்றியது. அதிகாலை வாக்கிங் நேரத்தில் இருவரும் `ஹாய்` சொல்லிக் கொள்வோம். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதிய உணவுக்கு என்னை அழைத்தார். சென்னையில் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கியிருந்த எனக்கு அன்று அமிர்தமாக உணவு ருசித்தது. வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாததால் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். நானும் வேலை இல்லாத சமயங்களில் அங்குதான் இருப்பேன். ஊரில் இருக்கும் அம்மாவுக்கும் வட்சலா மேடத்தைப் பத்தி சொல்லி போனிலும் பேச வைத்தேன். வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் என்னை சுருக்கமாக `நந்து` என அழைக்க இவர் மட்டும் ஸ்பெஷலாக `நதி` என அழைப்பார். அந்த வார்த்தை உச்சரிப்பு மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க இன்னும் அவரை எனக்கு பிடித்துப் போனது.

இருவரும் சேர்ந்து கபாலிஸ்வரர் கோயில், தீ நகர் ஷாப்பிங், அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லம் என சுத்தாத இடம் இல்லை. அவங்க வீட்டில் ரெண்டு கார் இருந்தும் என் டூவிலரில் வெளியே செல்வது என்றால் கொள்ளை விருப்பம் அவருக்கு. இந்த இரண்டு மாத பழக்கத்தில் ஒரு நாள், `நீ ஏன் என்னை மேடம்-ன்னு கூப்பிடற. அம்மா-ன்னு கூப்பிடலாமே`ன்னு வாய்விட்டே கேட்க மிகுந்த தயக்கத்திற்கு பிறகு வட்சலாம்மா என அழைக்க ஆரம்பித்தேன்.

ஒரு மாலை நேர மழை காலத்தில் பால்கனியில் அமர்ந்தபடி இருவரும் வெங்காய பக்கோடாவும் காப்பியும் சாப்பிட்டபடி கதையடித்துக் கொண்டிருந்தபோதுதான் மனதில் இருந்த அந்த ஆசையைச் சொன்னார்.

`நதி… எனக்கு ரொம்ப வருஷமா ஒரு ஆசை. பெண் குழந்தை வேணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா பிறந்தது ரெண்டும் பசங்க. அவங்க வளர்ந்து படிப்பு, வேலைன்னு பிஸியாகிட்டாங்க. அப்பத்தான் பெண் குழந்தை இல்லாத ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது. ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கனும்ன்னு இப்ப வரைக்கும் நினைக்கிறேன்.

ஆனா இந்த வயசுல ஒரு கைக்குழந்தைக்கு அம்மா-ங்கிறதை சமூகம் எப்படி ஏத்துக்கும்ங்கிற தயக்கம் இருக்கு. அதையும் தாண்டி அந்த குழந்தை வளர வரைக்கும் நான் திடமா இருப்பேன்னான்னு தெரியலை` என்று அவர் சொல்லும் போது கண் கலங்கியிருந்தது. அவர் பேச்சில் எப்போதும் பெண்கள் பற்றிய உயர்வாக கருத்து இருக்கும். ஆண்களை நம்பாமல் சொந்த காலில் நிற்க வேண்டும், எந்த காலத்திற்கும் பெண் தளர்ந்து போகக் கூடாது என சொல்லிக் கொண்டே இருப்பார்.

அதுவரை எனக்கு பிடித்த வட்சலா மேடம், என்னுடைய ரோல் மாடலானார். அந்தஸ்து பார்க்காமல் பழகும் அவரின் பண்பு எனக்கு இன்னும் இன்னும் பிடித்துக் கொண்டே போனது. தீபாவளி சமயம் எனக்கு ஒரு சுடிதார் எடுத்து தந்தார். வறுமையின் நிழலில் வளர்ந்திருந்த நான் அந்த சுடிதாரின் விலையைப் பார்த்ததும் பிரமித்துப் போனேன். கொஞ்ச நாளில் எனக்காக நிஜமாகவே அம்மா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துக்கும் வரன் பார்க்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருடன் பழகிய அந்த ஏழு மாத காலத்தில் நான் எந்த உதவியும் அவரிடம் எதிர்பார்த்து நின்றது இல்லை. ஒரு முறை தன் கணவரின் அலுவலகத்திலேயே நல்ல பதவி வாங்கித் தருகிறேன் என்றும் சொன்னார். அவர் குறிப்பிட்ட சம்பளம் நான் இப்போது வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் இரண்டரை மடங்கு இருந்தும் ஏனோ ஒப்புக் கொள்ள தோன்றவில்லை. என் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் கூட கேலி செய்வார்கள். `ஏன் நந்து.. பெரிய வி.ஐ.பி-யை கைக்குள் வைச்சிருக்க.அப்படியே செட்டில் ஆகிடு` என்று அக்கறையாய் அட்வைஸ் செய்தாலும், எனக்கு ஏனோ அவரிடம் உதவி கேட்க மட்டும் இஷ்டமில்லை. கேட்க கூடாது என கொள்கையாகவே வைத்திருந்தேன்.

ஆனால் அடுத்த வாரமே அவரிடம் கையேந்தும் நிலை வருமென எதிர்பார்க்கவில்லை. நான் தங்கியிருக்கும் விடுதியின் வேலைக்காரம்மா சாலை விபத்தில் ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார். கணவரும் இல்லாத நிலையில் அந்தம்மா மற்றும் அவரின் மகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதானது. ஆதரவற்று நின்றவர்களை எங்கள் விடுதி நிர்வாகம் அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தது. ஆனால் அந்த இளம் பெண்ணின் படிப்புக்கு உதவ முடியாது என்று கைவிரித்து விட்டது. வேலைக்காரம்மாவுக்கு தான் ஊனமானதை விட, மகளை படிக்க வைக்காமல் போன நிலை குறித்து மிக்க வருத்தம். எதோ என் வருமானத்திற்கு அந்த பெண்ணுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தர முடியும். ஆனால் பள்ளிக் கட்டணம் கட்டி முழு செலவையும் ஏற்க முடியாத நிலையில் வேறு வழியின்றி வட்சலா மேடத்தை சரண் அடைந்தேன்.

`நதி, நீ செய்ய நினைக்கிறது நல்ல விசயம்தான். மனமார உன்னை பாராட்டறேன். ஆனா ஒரு பெண் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட எனக்கு இஷ்டம் இல்லை. ஆண் புள்ளைன்னா படிச்சு சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்துவாங்க.  பெண் புள்ளைங்க அப்படி இல்லையே? என்னிக்கு இருந்தாலும் கல்யாணம் ஆகிப் போறவங்க தானே. அந்தப் பொண்னு எப்படி ஊனமான தன் அம்மாவை கடைசி வரை வெச்சு காப்பாத்தும் சொல்லு? வேண்ணா நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரச் சொல்லு. இல்லை நானே நல்ல இடத்தில் வேலை வாங்கித் தரேன்“ என்று அவர் சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

`ஏன் பெண்ணா இருந்தா படிச்சு குடும்பத்தை காப்பாத்த மாட்டாங்களா? எல்லா பசங்களும் பெத்தவங்களை கடைசி வரைக்கும் பார்க்கறாங்களா என்ன? என்ற என் வாதத்துக்கு அவர் தந்த பதில் இன்னும் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

`இல்லை நதி. பெண்ணுங்களை படிக்க வைக்கிறது வேஸ்ட். சாரிம்மா என்னால அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முடியாது` என்று அவர் திட்டவட்டமாக சொல்ல வெறுப்பின் உச்சத்தில் `சரி நான் வரேன் மேடம்` என்று சொல்ல அந்த வார்த்தை மாற்றத்தில் கண்கள் சுருக்கி பார்த்தார். அதை பொருட்படுத்தாது நான் விடுவிடுவென வந்து விட்டேன்.

அதன் பின் அவர் வீட்டு வாசலை மிதிக்க எனக்கு இஷ்டமில்லை. என் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்தவர், சடாரென உடைந்து போனார். சமூக சேவை செய்வதும், பெண்ணியம்  பேசுவதும் பணக்காரர்கள் அணிந்து கொள்ளும் முகமூடி என்பது புரிந்து போக, பேச்சிலேயே காரியம் சாதிப்பவர்கள் என அறிந்தேன். அது வரைக்கும் ஒரு சுயநல வாதியிடம் பழகியிருந்தேனே என்ற வருத்தம் இப்போது வரை இருக்கிறது எனக்கு.

- லாவண்யா