பி.பி.ஸ்ரீனிவாஸுக்கு பாராட்டுவிழா!
பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸுக்கு சென்னையில் பிப்ரவரி 27 அன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னை அண்ணா கலையரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் இவ்விழாவில், பின்னணி பாடகர்கள் டி.எம். சௌந்தராஜன், ஜானகி, பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், மனோ, திப்பு, கார்த்திக், உன்னிமேனன், உன்னி கிருஷ்ணன்…
ரஹ்மானுக்கு அடுத்த ஆஸ்கார்?
ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இரு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 83-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா பிப்.27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பின்னணி இசை மற்றும் பாடல் பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ’127 ஹவர்ஸ்’…
ரஹ்மானுக்கு இன்னொரு விருது!
’127 ஹவர்ஸ்’ படத்தில் ‘இஃப் ஐ ரைஸ்’ பாடலுக்காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது கிடைத்துள்ளது. டேனி போயல் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. அந்தப்படத்துக்கு மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன….
விடுமுறையில் இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ராவணன்’, ‘எந்திரன்’ என கடந்த வருடம் மெகா ஹிட்டுகளை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான், அடுத்த ஒரு வருடத்துக்கு புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லையாம். ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலைகளை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு, இந்த வருடம் முழுவதையும் தன் குடும்பத்தினருக்காக ஒதுக்கப் போகிறாராம்.
வைரமுத்துவின் 1000 முத்துகள்!
கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் திரைப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஜனவரி 2 அன்று வெளியிடுகிறார். கவிஞர் வைரமுத்து 30 ஆண்டுகளாக எழுதிய 7 ஆயிரம் திரைப்பாடல்களில், தேர்வு செய்யப்பட்ட ஆயிரம் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் முன்னுரை உள்ளது. பாடல் உருவான…
ஷங்கர் – யுவன் – விஜய் கூட்டணி!
‘எந்திரன்’ ரிலீஸ் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்குவதாக முடிவாகியுள்ள ’3 இடியட்ஸ்’ பற்றியும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

