உணவலங்காரம்

தக்காளி முட்டைக் கறி

தேவையானவை:
வெட்டிய தக்காளி – 200 கிராம்
முட்டை – 6
வெட்டிய வெங்காயம் – 1 பெரியது
வெட்டிய பச்சை மிளகாய் – 4
செத்தல் மிளகாய் – 2
கொஞ்சம் கறிவேப்பிலை
உள்ளி – 3
இஞ்சி சிறிய துண்டு
கடுகு -1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் 3 /4 ž மேசைக்கரண்டி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

முட்டைகளை அவித்து உரித்து மேலிருந்து கீழாக சுற்றிவர 4 / 5 இடத்தில் கத்தியால் கீறிக்கொள்க. எண்ணெயைச் சூடாக்கி கடுகு, செத்தல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இஞ்சி, உள்ளி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடத்தின் பின் தக்காளியை போட்டு வதங்கியதும் உப்பு, மிளகாய் , மல்லித்தூள் சேர்த்துக் கிளறி வெந்து வரும் போது அளவான தண்ணீர் விட்டு கொதிக்ககையில் முட்டைகளை போட்டு இளஞ்சூட்டில் வேகவிட்டு இறக்கவும். (விரும்பினால் பால் சேர்க்கலாம்).

பேப்பர் தோசை

தேவையானவை:
வெள்ளைப்பச்சை அரிசி – 1 கப்
வெள்ளைப் புழுங்கல் அரிசி (ஈசிகுக்) -3 /4 கப்
வெள்ளை அவல்- 1 /2 கப்
உழுந்து -1 /2  கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெளிணி
தேவையான – அளவு உப்பு

செய்முறை:

நல்லெண்ணை, உப்பு தவிர்ந்த மற்றவற்றைக் கழுவி நான்கு மணிநேரம் ஊறவிடவும். பின்னர் பட்டுப் போல் அரைத்தெடத்து புளிக்க விடவும். புளித்ததும் உப்புச் சேர்த்துக் கரைத்துக் கொள்க. தோசைக்கல்லை அளவான வெப்பத்தில் சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி பேப்பர் போல் மிக மெல்லிதாக பரப்பி எண்ணெளிணிவிட்டு சுட்டு எடுக்கவும்.

அவலுக்குப் பதிலாக கொஞ்சம் சோறும் சேர்த்து அரைக்கலாம்.

எந்தத் தோசை என்றாலும் கொஞ்சம் மைசூர்ப் பருப்பும் சேர்த்து ஊறவிட்டு அரைத்தால் அரைமணி நேரத்திலேயே புளித்துவிடும்.

லெமன் சீஸ் கேக்

தேவையானவை:
எலுமிச்சம்பழம் – 4 (சாறு)
பிலடெல்பியா சீஸ்
சீனி – 200 கிராம்
முட்டை – 4
பட்டர் – 75 கிராம்
டபிள் சொக்லேட்
சிப் குக்கீஸ் – 200 கிராம்
Springform cakeTin

செய்முறை:

குக்கீசை தூளாக்கி அரைப்பங்கு பட்டருடன் சேர்த்துக் கலந்து கேக் டின்னின் அடியிலும் ஓரத்திலும் அழுத்தி வையுங்கள். சீசையும், சீனியையும் மிகுதியாக உள்ள பட்டரையும் பஞ்சுபோல் நன்றாக அடித்து வைக்குக. முட்டையை தனித்து நன்கு அடித்து எலுமிச்சம் பழச்சாறும்
சேர்த்து அடித்து சீஸ் கலவையை கொஞ்சம்கொஞ்சமாக கலந்து கேக் டின்னுள் இருக்கும் குக்கீஸ் மேல் போட்டு பரப்பி. 180˚c சுடாக்கிய அவணில் 1 மணிநேரம் வைக்கவும். மறக்காது 50 நிமிடத்தால் பார்ப்பது நல்லது.

நீங்களும் புதிதாக கண்டறிந்து சமைத்துச்சுவைத்த உணவுகளை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவற்றின் செய்முறையை எமது உணவலங்காரப் பகுதிக்கு அனுப்பிவையுங்கள்.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions