மதுரைக்குப் போகலாமே!

madurai-meenakshi-temple

கோயில் உலா, மதுரை மீனாட்சி

சென்னை எழும்பூரில் இரவு உணவுக்குப் பிறகு பாண்டியன் விரைவுவண்டியில் அமர்ந்தோம். செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி வழியாக 461 கிலோமீட்டர் பயணத்தில் விடியற் காலையில் மதுரையை அடைந்தோம். இருபுறமும் வைகை நதி ஓடும் (இப்போது தண்ணீர் இல்லை!) மாநகர். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். மல்லிகை மணக்கும். ஊரின் நடுவே மீனாட்சி திருக்கோயில்.
மதுரையில் 150 ரூபாயிலிருந்து வாடகை அறைகள் கிடைக்கின்றன. ஏழாயிரம் எட்டாயிரம் என்ற அளவில் நட்சத்திர ஓட்டல்களும் உண்டு. ரயில் நிலையத்துக்கும் கோயிலுக்கும் அருகிலேயே தங்க, உணவருந்த ஏராள வசதி!
மீனாட்சி திருக்கோயில் & இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வளர்த்த கலைக் கோயில். 64 சக்தி பீடங்களில் முதல் பீடமாக விளங்குவது மதுரை. சக்தியே பாண்டியன் மகளாகப் பிறந்து அரியணை ஏறி, ஆட்சி புரிந்து, இறைவனை மணந்த இடம். சிவபெருமான் 64 திருவிளை யாடல்களை நடத்திக் காட்டிய தலம். ஈசனே புலவனாக வந்து, நக்கீரரிடம் வாதிட்ட மண். குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத் தமிழ் அரங்கேற்றிய இடம்.
மதுரையில் அரசாளும் மீனாட்சி!
கோயிலின் உள்ளே!
முதலில் கிளி கொஞ்சும் மீனாட்சியைத் தரிசித்துவிட்டே, சோமசுந்தரர் சந்நிதி செல்வது இங்கு பொதுவான வழக்கம். மீனாட்சி சந்நிதிக்கு முன் பொற்றாமரைக் குளம். மலர்ந்த பொற்றாமரையைக் கொண்டு இக்குளத்தில் இந்திரன் ஈசனை வழிபட்டதால், பொற்றாமரைக் குளம் என்று பெயர்.
குளக்கரையில் ஒரு நாரைக்கு நற்கதி அளித்தான் ஈசன். அன்று முதல், பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் உள்பட எந்த நீர்வாழ் உயிரினமும் கிடையாது என்று அருளப்பட்டது. இக்குளத்திலேயே வள்ளுவப் பெருந்தகையின் தெய்வத் திருக்குறளை அங்கீகரித்து, சங்கப்பலகை மிதந்தது.
பொற்றாமரைக் குளத்துக்கு ஆதி தீர்த்தம், முக்தி தீர்த்தம், சிவகங்கை, உத்தம தீர்த்தம் என பெயர்கள்  பல உள.
மீனாட்சி சந்நிதிக்கு வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறத்தில் முத்துக்குமாரசாமியும் கோயில் கொண்டுள்ளார்கள். குழந்தைகளை வணங்கிவிட்டு, தாயின் முன் நின்று வணங்கிக் கண் திறந்தால் அற்புத தரிசனம்!
நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் அங்கயற்கன்ணி மீனாட்சி. அன்னை திருமேனியை அழகு ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. உயர்த்திய வலது கையில் உள்ள பூச்செண்டின் மீது இருந்து பச்சைக்கிளி கொஞ்சுகிறது. அன்னையைக் கண்டவுடனே அவள் திருப்பாதங்களில் பணியத்தூண்டுகிறது அவளது தோற்றம்.
அருளும் அழகும் கலந்து செய்த பொக்கிஷம் அவள். அன்னையின் திருவிழிகள் தாய் மீனைப் போல எல்லையற்ற கருணையைப் பொழி கின்றன. கருணை முகத்தைப் பார்த்தாலே காலத்தின் கவலைகள் எல்லாம் காணாமல் போகின்றன. சந்நிதியின் வடப்பக்கம் முக்குறுணிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார். இதுவே சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியும் கூட.
கம்பத்தடி மண்டபத்தில் நந்தியும் கொடிக் கம்பமும் அழகே உருவாக உருவாக்கப்பட்டுள்ளன. எதிரே உள்ள சந்நிதியில் சோமசுந்தரர் சொக்கலிங்கப் பெருமான் ஈசன் லிங்கவடிவில் அருள்புரிகிறார்.
ஈசன் எழுந்தருளியுள்ள கருவறை விமானம் இந்திரனால் வழங்கப்பட்டது. 8 கல்யானைகள், 32 சிங்கங்கள், 64 சிவகணங்கள் சேர்ந்து தாங்கும் இக்கருவறை போல வேறு எக்கோயிலிலும் இல்லாதது விசேஷம்!
ஸ்ரீதுர்க்கை இப்பிரகாரத்தில் இடப் புறம் அமந்து மோகனச் சிரிப்புடன் சக்தி பாலிக்கிறாள்.
நடராஜர் கூத்தில் கால் மாற்றி (வலப்பாதத்தைத் தூக்கி) ஆடிய வெள்ளி அம்பலம் இக்கோயிலில்தான் உள்ளது. நடராஜருக்கு எதிர் நடனம் ஆடிய பத்திரகாளிக்கு பிரமாண்டமான சிற்பம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. அற்புத வேலைப்பாடுகள் நிரம்பிய அகோர வீரபத்திரர் சிற்பமும், பத்திரகாளி சிற்பத்துக்கு அருகிலேயே உள்ளது. அக்கினி வீரபத்திரர், ஊர்த்து வதாண்டவர் சிற்பங்களும் இருவேறு பெருந்தூண்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம், அதன் உள்ளே உள்ள அருங்காட்சியகம் & இவை சிற்பக்கலைத்திறனுக்கு பெயர் பெற்றவை. இவை எல்லாமே நின்று நிதானமாக பார்க்கப்பட வேண்டியவை. பிரமிப்பு ஊட்டுபவை. அற்புத சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மதுரை கோயில், 4 பெரிய கோபுரங்களையும், 8 சிறிய விமானங் களையும் கொண்டது.
என்ன கொடுக்கலாம்? மனப் பூர்வமாக அளிக்கப்படும் எந்தக் காணிக்கையும் மீனாட்சியும் சுந்தரரும் அன்போடு ஏற்றுக்கொள்வர். சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர், சந்தன அபிஷேகம் செய்யலாம். அன்னைக்கு பட்டுப் புடைவையும் சுவாமிக்கு தூய உடைகளையும் அணிவிக்கலாம். பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குக் கொடுக்கலாம். கோயில் திருப்பணிக்குப் பொருள் உதவி செய்யலாம்.
———-கோயிலும் சூழலும்
மதுரை நகரமும் கோயிலும் 3600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. திருஞான சம்பந்தர் பாடலின்படி 7&ம் நூற்றாண்டில் சுவாமி கோயிலும் உள்பிரகாரமும் இருந்ததாக அறிய முடிகிறது.
மீனாட்சியம்மனுக்குத் தனிகோயில் அமைத்தது 12&ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன். கி.பி. 13&ம் நூற்றாண்டு முதல் 18&ம் நூற்றாண்டு வரை 500 ஆண்டுகளில் கோயில் முழுஅமைப்பு பெற்றுள்ளது.
கோயிலினுள் உள்ள அஷ்ட சக்தி மண்டபத்தில் சுதை வடிவிலான மீனாட்சி & சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணத்தைக் காணலாம். அருகே உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் ஆயிரத்தெட்டு சிறுவிளக்குகளைக் கொண்ட திருவாட்சி உள்ளது.
இந்த ஆலயத்துக்கு அருகில் அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபம், நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் காலத்தில் கட்டப்பட்டது. இதன் நுழைவாயிலின் இரு புறங்களிலும் கண்ணப்பர், அரியநாதர், அரிச்சந்திரன், குறவன், குறத்தி சிலைகள் அமைந்துள்ளன.
கோயில் அருகே அமைந்துள்ள புதுமண்டபம் சுவாமி சந்நிதிக்கு எதிரே சித்திரை வீதிக்கும் கீழ ஆவணி மூல வீதிக்கும் இடையில் உள்ளது. புதுமண்டபம் கட்டப்பட்டு 350 ஆண்டுகள் கடந்தாயிற்று. இதில் 124 தூண்கள், நான்கு வரிசைகளாக அமைந்துள்ளன. 110 மீட்டர் நீளமும், 35 மீட்டர் அகலமும், 8 மீட்டர் உயரமும் கொண்டவை இத்தூண்கள். இம்மண்டபத்தைச் சுற்றி சிறிய அகழிகள் காணப்படுகின்றன. இவை ‘திருஅடிவாரம்’ என்று கூறப்படுகிறது.
புதுமண்டபத்துக்குக் கிழக்கே உள்ள ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படாமல், அடித்தளத்தோடு காணப்படுகிறது திருமலை நாயக்கரால் திட்டமிடப்பட்ட இக் கோபுரம் கட்டி முடிக்கப் பட்டிருந்தால் மிக பிரமாண்டமான கோபுரமாக புகழ்பெற்றிருக்கும்.
ஊஞ்சல் மண்டபம், கிளி கூட்டு மண்டபம், அம்மன் கோயில் ஆகியவையும் அருகிலேயே உள்ளன. ஆயிரங்கால் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம் ஆகிய வற்றையும் காண வேண்டும். வடக்கு ஆடிவீதியில் உள்ள 5 இசை தூண்களைத் தட்டினால் அத்தூண்கள் இன்னிசை எழுப்புகின்றன.
மதுரையிலே திருவிழா!
ஆண்டு முழுவதும் மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது, புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. 12 நாள் நடக்கும் இந்தத் திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். பத்து நாள்களும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி வலம் வருவார். மீனாட்சி தன் அண்ணனுக்குத் தெரியாமல் சொக்கநாதரை மணம் செய்துகொள்வார். விஷயத்தை அறிந்த அண்ணன் கள்ளழகர் சீர்வரிசை கொடுத்துவிட்டு, கோபித்துக் கொண்டு வைகை ஆற்றில் இறங்கிச் சென்றுவிடுவார். மறுநாள் தசா வதாரம். அழகருக்கு பத்து வித அலங்காரம் செய்வார்கள். இந்தப் பத்து நாள்களும் மதுரை விழாக்கோலம் பூண்டிருக்கும். மக்கள் பக்தியும் மகிழ்ச்சியுமாகப் பங்கேற்பார்கள்.
மே&ஜுனில் 10 நாள் வைகாசி உற்சவம், ஜுன்&ஜுலையில் 10 நாள் ஊஞ்சல் திருவிழா, ஆகஸ்ட் & செப்டம்பரில் 18 நாள் ஆவணி மூலத் திருவிழா… இப்படி ஆண்டு முழுவதும் கொண்டாட்டமே!
———கல் யானைக்கு கரும்பு!
தை மாத பிறப்பையொட்டி மதுரை மீனாட்சி கோயிலில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான கல் யானைக்குக் கரும்பு கொடுக்கும் லீலை நடைபெறும். ஒருசமயம் சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமானுக்கும், பாண்டிய மன்னருக்கும் கல் உள்பட அனைத்திலும் ஜீவன் உண்டா, இல்லையா என்பது குறித்து விவாதம் நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.
அருகில் இருந்த கல் யானையைச் சுட்டிக்காட்டி, ‘இந்த யானை கரும்பு சாப்பிடுமா?’ என்று பாண்டிய மன்னர் ஏளனம் செய்தார். சித்தர் கூறியபடி ஒரு கட்டு கரும்புகளை மன்னர் எடுத்துக் கொடுக்க, கல் யானை துதிக்கையால் வாங்கி உண்டது.
வைரக்கீரிடம் ஜொலிக்கும்!
மீனாட்சி அம்மனுக்கு தை மாதப் பிறப்பு, தை அமாவாசை, சித்திரை முதல் நாள் மற்றும் தீபாவளி அன்று வைரக்கீரிடமும் தங்கப் பாவாடையும் அணிவிக்கிறார்கள். 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு வைரக்கிரீடம் சூட்டப்படும். சுவாமி சுந்தரேஸ்வரருக்கும் வைர நெற்றிப் பட்டை சாற்றப்படும்.
———-சக்தி அருள்
அன்னைக்கு திருமணம் நடந்த தலம் என்பதால் கன்னிப் பெண்களுக்கு மதுரை மீனாட்சி அருள் தருபவள். அதனால் இங்கு கன்னியர் கூட்டம் அதிகம்.
‘ஆலவாய்’ என்ற பெயரைக் கேட்டாலே முக்தியடையலாம். இச்சிறப்பு இக்கோயிலுக்கு மட்டுமே உண்டு. ‘அங்கயற்கண்ணி என ஒரு காதில் ஓதின், துயர் கெடும். பகை மாளும். தொலையாத செல்வம் உண்டாகும். சொர்க்கமும் எளிதாம்’ என்கிறது திருவிளையாடல் புராணம்.
தூய உள்ளத்தோடும், உண்மையான பக்தியோடும் மீனாட்சி அன்னையை வணங்கினால் சகல சௌபாக் கியங்களும் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர்க்கு அளவற்ற கருணை யுடன் அருள்பாலிக்கிறாள் மதுரை மீனாட்சி.
அன்னையிடம் சரண் அடைந்து, வரம் கேட்டால், அன்போடு நாம் கேட்டதை நிறைவேற்றி வைக்கிறாள். அதனால்தான் உலகம் முழுவதும் மீனாட்சிக்குப் பக்தர்கள் இருக் கிறார்கள். கடல் கடந்து வந்து அன்னையைத் தினந்தோறும் தரிசிக்கின்றனர்.
மகத்தான சிறப்பு வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில்
சென்று, சிவபெருமானையும் தாய் மீனாட்சியையும் வணங்கி, திருவருளைப் பெற்று, வாழ்வில் உயர்வோமாக!
–& சுந்தரம்

சென்னை எழும்பூரில் இரவு உணவுக்குப் பிறகு பாண்டியன் விரைவுவண்டியில் அமர்ந்தோம். செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி வழியாக 461 கிலோமீட்டர் பயணத்தில் விடியற் காலையில் மதுரையை அடைந்தோம். இருபுறமும் வைகை நதி ஓடும் (இப்போது தண்ணீர் இல்லை!) மாநகர். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். மல்லிகை மணக்கும். ஊரின் நடுவே மீனாட்சி திருக்கோயில்.

மதுரையில் 150 ரூபாயிலிருந்து வாடகை அறைகள் கிடைக்கின்றன. ஏழாயிரம் எட்டாயிரம் என்ற அளவில் நட்சத்திர ஓட்டல்களும் உண்டு. ரயில் நிலையத்துக்கும் கோயிலுக்கும் அருகிலேயே தங்க, உணவருந்த ஏராள வசதி!

மீனாட்சி திருக்கோயில்  இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வளர்த்த கலைக் கோயில். 64 சக்தி பீடங்களில் முதல் பீடமாக விளங்குவது மதுரை. சக்தியே பாண்டியன் மகளாகப் பிறந்து அரியணை ஏறி, ஆட்சி புரிந்து, இறைவனை மணந்த இடம். சிவபெருமான் 64 திருவிளை யாடல்களை நடத்திக் காட்டிய தலம். ஈசனே புலவனாக வந்து, நக்கீரரிடம் வாதிட்ட மண். குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத் தமிழ் அரங்கேற்றிய இடம்.

மதுரையில் அரசாளும் மீனாட்சி!

Madurai Meenakshi

சங்ககாலத் தமிழ் நூலான பரிபாடல், மதுரையைத் தாமரை மலராகவும், நடுவே அமைந்துள்ள கோயிலை மொட்டாகவும், சுற்றியுள்ள வீதிகளை இதழ்களாகவும் வர்ணித்துள்ளது. ஆதிசக்தியின் அங்கயற்கண் அலர்ந்ததால் உயிர்கள் உருக்கொண்டன. மலர்ந்த கண் மூடி மொட்டாகிவிட்டால் உலகும் உயிர்களும் உருத்தெரியாமல் அழிந்துவிடும். அதனாலேயே அங்கயற்கண்ணி ஒருபோதும் கண் இமைக்காமல் பூவுலகைக் கட்டிக் காக்கிறாள். துன்பத்தில் துவளும் மனிதர்களை கண் இமைக்காமல் காத்தருளும் அங்கயற்கண்ணி மீனாட்சி அருளாட்சி புரியும் அற்புதத் தலம் மதுரை.

மீனாட்சி தென்மதுரையைத் தேர்ந்தெடுத்து குடிபுகுந்ததன் காரணம் என்ன?

அரசு எப்படி அமைய வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு அறுதியிட்டுக் காட்டுவதற்கு ஆசைப்பட்டாள் உமையவள். ஆலவாய் என்று அழைக்கப்படும் அழகிய மதுரையை மேன்மையுடன் ஆண்டுவந்த மலையத்துவச பாண்டியன், மகப்பேறு வேண்டி மனைவி காஞ்சனமாலையுடன் புத்திரகாமேட்டி யாகம் நடத்தினான். அப்போது…

வேள்வித்தீயிலிருந்து ‘அம்மா… அப்பா…’ என்றொரு குரல். குழந்தையின் குரல்! வேள்வித்தீயில் விநோதக் குழந்தையா! அத்தனை பேரும் வியப்பில் உறைந்தார்கள். சில விநாடிகளில் வியப்பு மறைந்து விபரீதம் புரிந்தது மன்னனுக்கு. அக்கணமே யாக நெருப்பில் விழுந்து, அக்குழந்தையை அள்ளி எடுத்தான் மன்னன். அழகான அக்குழந்தையை அரசியின் கரங்களில் அளித்தான்.

அது ஒரு பெண் குழந்தை. அதன் நெஞ்சில் வித்தியாசமாக மூன்று மார்புகள் முகிழ்ந்திருந்ததையும் கண்டான். குழந்தையை கைகளில் ஏந்திய மன்னன், ‘என்ன சோதனை அம்மையே? பச்சிளம் குழந்தைக்கு ஏன் இப்படி’ என துடித்தான். அசரீரி ஒலித்தது ஆகாய வெளியிலிருந்து. ‘மனம் கலங்காதே மலையத்துவசனே… இந்த அங்கயற்கண்ணி அழகுடனே திகழ்வாள். கரம் பிடிக்கிற கணவனைக் கண்டவுடனே நெஞ்சின் மூன்றாவது மொட்டு மறைந்துவிடும்!’

மலையத்துவசன் மனம் மகிந்தான். அந்த அரிய குழந்தைக்கு ‘தடாதகை’ எனப் பெயரிடப்பட்டது. மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால் ‘அங்கயற்கண்ணி’ என்றும் ‘மீனாட்சி’ எனவும் அழைக்கப்பட்டள் அத்தெய்வக் குழந்தை.  அங்கயற்கண்ணி பருவம் அடைந்தாள். மன்னன் மலையத்துவசனுக்குப் பின் சிம்மாசனத்தில் அமர்ந்தாள். அதன் பின் அவள் ‘மதுரை மீனாட்சி’ என்றும் அழைக்கப்பட்டாள்.  அவளை எதிர்த்தோர் புறமுதுகிட்டு ஓடினர். அன்னையின் எண்ணங்கள் ஈடேறும் படி ஆட்சி நடந்தது. ஆணவமும் அகங்காரமும் ஒழிக்கப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது. மகிழ்ச்சியில் திளைத்தனர் மக்கள்.

மதுரை மீனாட்சி கயிலாயத்தையும் கைப்பற்ற நினைத்தாள். அவளது படை கம்பீரத்துடன் கயிலாயம் அடைந்தது. கைலாயநாதன் தன் கணங்களோடு கன்னியை எதிர்க்க வந்து சேர்ந்தான். அரையில் யானைத்தோல் அணிந்து, அரவம் ஊர்ந்திடும் உடம்புடன், சடை முடிதரித்து சமருக்கு வந்த அந்த நாதனைக் கண்டதும் அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது. மன்னன் என நினைத்தவன் மன்னவன் ஆனான்!

தடாதகைப் பெண்ணுக்குத் தான் யார் என்பது அப்போதுதான் புரிந்தது. கைத்தலம் பற்ற இருப்பவன் கைலாயநாதனே என உணர்ந்தாள். நாணம் மேலிட தரை பார்த்து தலை குனிந்தாள். ‘அங்கயற்கண்ணியே! ஆலவாய் வந்து உன்னை மணக்கிறேன்’ என்று இயம்பினான் ஈசன். போருக்குச் சென்ற கன்னியோ பொங்கும் காதலுடன் நாடு திரும்பினாள்.

கிளியைத் தூது அனுப்பினாள்…

காதலாகி கசிந்தவளை பார்த்து ரசிக்க, கைலாயநாதன் கடம்பவனத்தில் சுயம்புவாக எழுந்தருளினான். அதன் பின் பிரம்மதேவன் நடத்திவைக்க, திருமால் திருமகளின் கைத்தலத்தைக் கைலாயநாதனிடம் பற்றித் தர, யோகநாதன் மலைமகள் கழுத்தில் மங்கலநாண் பூட்டிப் போகநாதன் ஆனான்.

அங்கயற்கண்ணியை மணந்த மறுகணமே ஈசனிடம் இருந்த ரிஷபக்கொடி, மீன் கொடியாக மாறியது. பாம்புகள் சுடர்மிகு அணிகலன்களாக மாறின. கொன்றை மாலை வேப்பம்பூ மாலையாக மாற்றமடைந்தது. இடுப்புத் தோலுடை பீதாம்பரம் ஆனது. சடைச் சந்திரன் வைர முடியாக மாறியது. கைலாய நாதன் சுந்தரபாண்டியனாக மாறினான். அவனுடைய கணங்கள் யாவும் மானுட வடிவம் கொண்டன. காதல் தூது சென்ற கிளி தடாதகையின் தோளில் தொற்றிக்கொண்டது. இப்படியாக, ஈசன் சுந்தர பாண்டியனாகவும் ஈஸ்வரி மீனாட்சியாகவும் ஆட்சிபுரியத் தொடங்கினர்.

கோயிலின் உள்ளே!

முதலில் கிளி கொஞ்சும் மீனாட்சியைத் தரிசித்துவிட்டே, சோமசுந்தரர் சந்நிதி செல்வது இங்கு பொதுவான வழக்கம். மீனாட்சி சந்நிதிக்கு முன் பொற்றாமரைக் குளம். மலர்ந்த பொற்றாமரையைக் கொண்டு இக்குளத்தில் இந்திரன் ஈசனை வழிபட்டதால், பொற்றாமரைக் குளம் என்று பெயர்.

குளக்கரையில் ஒரு நாரைக்கு நற்கதி அளித்தான் ஈசன். அன்று முதல், பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் உள்பட எந்த நீர்வாழ் உயிரினமும் கிடையாது என்று அருளப்பட்டது. இக்குளத்திலேயே வள்ளுவப் பெருந்தகையின் தெய்வத் திருக்குறளை அங்கீகரித்து, சங்கப்பலகை மிதந்தது.

பொற்றாமரைக் குளத்துக்கு ஆதி தீர்த்தம், முக்தி தீர்த்தம், சிவகங்கை, உத்தம தீர்த்தம் என பெயர்கள்  பல உள.

மீனாட்சி சந்நிதிக்கு வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறத்தில் முத்துக்குமாரசாமியும் கோயில் கொண்டுள்ளார்கள். குழந்தைகளை வணங்கிவிட்டு, தாயின் முன் நின்று வணங்கிக் கண் திறந்தால் அற்புத தரிசனம்!

நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் அங்கயற்கன்ணி மீனாட்சி. அன்னை திருமேனியை அழகு ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. உயர்த்திய வலது கையில் உள்ள பூச்செண்டின் மீது இருந்து பச்சைக்கிளி கொஞ்சுகிறது. அன்னையைக் கண்டவுடனே அவள் திருப்பாதங்களில் பணியத்தூண்டுகிறது அவளது தோற்றம்.

அருளும் அழகும் கலந்து செய்த பொக்கிஷம் அவள். அன்னையின் திருவிழிகள் தாய் மீனைப் போல எல்லையற்ற கருணையைப் பொழி கின்றன. கருணை முகத்தைப் பார்த்தாலே காலத்தின் கவலைகள் எல்லாம் காணாமல் போகின்றன. சந்நிதியின் வடப்பக்கம் முக்குறுணிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார். இதுவே சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியும் கூட.

கம்பத்தடி மண்டபத்தில் நந்தியும் கொடிக் கம்பமும் அழகே உருவாக உருவாக்கப்பட்டுள்ளன. எதிரே உள்ள சந்நிதியில் சோமசுந்தரர் சொக்கலிங்கப் பெருமான் ஈசன் லிங்கவடிவில் அருள்புரிகிறார்.

ஈசன் எழுந்தருளியுள்ள கருவறை விமானம் இந்திரனால் வழங்கப்பட்டது. 8 கல்யானைகள், 32 சிங்கங்கள், 64 சிவகணங்கள் சேர்ந்து தாங்கும் இக்கருவறை போல வேறு எக்கோயிலிலும் இல்லாதது விசேஷம்! ஸ்ரீதுர்க்கை இப்பிரகாரத்தில் இடப் புறம் அமந்து மோகனச் சிரிப்புடன் சக்தி பாலிக்கிறாள்.

நடராஜர் கூத்தில் கால் மாற்றி (வலப்பாதத்தைத் தூக்கி) ஆடிய வெள்ளி அம்பலம் இக்கோயிலில்தான் உள்ளது. நடராஜருக்கு எதிர் நடனம் ஆடிய பத்திரகாளிக்கு பிரமாண்டமான சிற்பம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. அற்புத வேலைப்பாடுகள் நிரம்பிய அகோர வீரபத்திரர் சிற்பமும், பத்திரகாளி சிற்பத்துக்கு அருகிலேயே உள்ளது. அக்கினி வீரபத்திரர், ஊர்த்து வதாண்டவர் சிற்பங்களும் இருவேறு பெருந்தூண்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபம், அதன் உள்ளே உள்ள அருங்காட்சியகம் & இவை சிற்பக்கலைத்திறனுக்கு பெயர் பெற்றவை. இவை எல்லாமே நின்று நிதானமாக பார்க்கப்பட வேண்டியவை. பிரமிப்பு ஊட்டுபவை. அற்புத சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மதுரை கோயில், 4 பெரிய கோபுரங்களையும், 8 சிறிய விமானங் களையும் கொண்டது.

என்ன கொடுக்கலாம்? மனப் பூர்வமாக அளிக்கப்படும் எந்தக் காணிக்கையும் மீனாட்சியும் சுந்தரரும் அன்போடு ஏற்றுக்கொள்வர். சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர், சந்தன அபிஷேகம் செய்யலாம். அன்னைக்கு பட்டுப் புடைவையும் சுவாமிக்கு தூய உடைகளையும் அணிவிக்கலாம். பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குக் கொடுக்கலாம். கோயில் திருப்பணிக்குப் பொருள் உதவி செய்யலாம்.

கோயிலும் சூழலும்

மதுரை நகரமும் கோயிலும் 3600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. திருஞான சம்பந்தர் பாடலின்படி 7&ம் நூற்றாண்டில் சுவாமி கோயிலும் உள்பிரகாரமும் இருந்ததாக அறிய முடிகிறது.

மீனாட்சியம்மனுக்குத் தனிகோயில் அமைத்தது 12&ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன். கி.பி. 13&ம் நூற்றாண்டு முதல் 18&ம் நூற்றாண்டு வரை 500 ஆண்டுகளில் கோயில் முழுஅமைப்பு பெற்றுள்ளது.

கோயிலினுள் உள்ள அஷ்ட சக்தி மண்டபத்தில் சுதை வடிவிலான மீனாட்சி & சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணத்தைக் காணலாம். அருகே உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் ஆயிரத்தெட்டு சிறுவிளக்குகளைக் கொண்ட திருவாட்சி உள்ளது.

இந்த ஆலயத்துக்கு அருகில் அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபம், நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் காலத்தில் கட்டப்பட்டது. இதன் நுழைவாயிலின் இரு புறங்களிலும் கண்ணப்பர், அரியநாதர், அரிச்சந்திரன், குறவன், குறத்தி சிலைகள் அமைந்துள்ளன.

கோயில் அருகே அமைந்துள்ள புதுமண்டபம் சுவாமி சந்நிதிக்கு எதிரே சித்திரை வீதிக்கும் கீழ ஆவணி மூல வீதிக்கும் இடையில் உள்ளது. புதுமண்டபம் கட்டப்பட்டு 350 ஆண்டுகள் கடந்தாயிற்று. இதில் 124 தூண்கள், நான்கு வரிசைகளாக அமைந்துள்ளன. 110 மீட்டர் நீளமும், 35 மீட்டர் அகலமும், 8 மீட்டர் உயரமும் கொண்டவை இத்தூண்கள். இம்மண்டபத்தைச் சுற்றி சிறிய அகழிகள் காணப்படுகின்றன. இவை ‘திருஅடிவாரம்’ என்று கூறப்படுகிறது.

புதுமண்டபத்துக்குக் கிழக்கே உள்ள ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படாமல், அடித்தளத்தோடு காணப்படுகிறது திருமலை நாயக்கரால் திட்டமிடப்பட்ட இக் கோபுரம் கட்டி முடிக்கப் பட்டிருந்தால் மிக பிரமாண்டமான கோபுரமாக புகழ்பெற்றிருக்கும்.

ஊஞ்சல் மண்டபம், கிளி கூட்டு மண்டபம், அம்மன் கோயில் ஆகியவையும் அருகிலேயே உள்ளன. ஆயிரங்கால் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம் ஆகிய வற்றையும் காண வேண்டும். வடக்கு ஆடிவீதியில் உள்ள 5 இசை தூண்களைத் தட்டினால் அத்தூண்கள் இன்னிசை எழுப்புகின்றன.

மதுரையிலே திருவிழா!

ஆண்டு முழுவதும் மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது, புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. 12 நாள் நடக்கும் இந்தத் திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். பத்து நாள்களும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி வலம் வருவார். மீனாட்சி தன் அண்ணனுக்குத் தெரியாமல் சொக்கநாதரை மணம் செய்துகொள்வார். விஷயத்தை அறிந்த அண்ணன் கள்ளழகர் சீர்வரிசை கொடுத்துவிட்டு, கோபித்துக் கொண்டு வைகை ஆற்றில் இறங்கிச் சென்றுவிடுவார். மறுநாள் தசா வதாரம். அழகருக்கு பத்து வித அலங்காரம் செய்வார்கள். இந்தப் பத்து நாள்களும் மதுரை விழாக்கோலம் பூண்டிருக்கும். மக்கள் பக்தியும் மகிழ்ச்சியுமாகப் பங்கேற்பார்கள்.

மே&ஜுனில் 10 நாள் வைகாசி உற்சவம், ஜுன்&ஜுலையில் 10 நாள் ஊஞ்சல் திருவிழா, ஆகஸ்ட் & செப்டம்பரில் 18 நாள் ஆவணி மூலத் திருவிழா… இப்படி ஆண்டு முழுவதும் கொண்டாட்டமே!

கல் யானைக்கு கரும்பு!

தை மாத பிறப்பையொட்டி மதுரை மீனாட்சி கோயிலில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான கல் யானைக்குக் கரும்பு கொடுக்கும் லீலை நடைபெறும். ஒருசமயம் சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமானுக்கும், பாண்டிய மன்னருக்கும் கல் உள்பட அனைத்திலும் ஜீவன் உண்டா, இல்லையா என்பது குறித்து விவாதம் நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது.

அருகில் இருந்த கல் யானையைச் சுட்டிக்காட்டி, ‘இந்த யானை கரும்பு சாப்பிடுமா?’ என்று பாண்டிய மன்னர் ஏளனம் செய்தார். சித்தர் கூறியபடி ஒரு கட்டு கரும்புகளை மன்னர் எடுத்துக் கொடுக்க, கல் யானை துதிக்கையால் வாங்கி உண்டது.

வைரக்கீரிடம் ஜொலிக்கும்!

மீனாட்சி அம்மனுக்கு தை மாதப் பிறப்பு, தை அமாவாசை, சித்திரை முதல் நாள் மற்றும் தீபாவளி அன்று வைரக்கீரிடமும் தங்கப் பாவாடையும் அணிவிக்கிறார்கள். 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு வைரக்கிரீடம் சூட்டப்படும். சுவாமி சுந்தரேஸ்வரருக்கும் வைர நெற்றிப் பட்டை சாற்றப்படும்.

சக்தி அருள்

அன்னைக்கு திருமணம் நடந்த தலம் என்பதால் கன்னிப் பெண்களுக்கு மதுரை மீனாட்சி அருள் தருபவள். அதனால் இங்கு கன்னியர் கூட்டம் அதிகம்.

‘ஆலவாய்’ என்ற பெயரைக் கேட்டாலே முக்தியடையலாம். இச்சிறப்பு இக்கோயிலுக்கு மட்டுமே உண்டு. ‘அங்கயற்கண்ணி என ஒரு காதில் ஓதின், துயர் கெடும். பகை மாளும். தொலையாத செல்வம் உண்டாகும். சொர்க்கமும் எளிதாம்’ என்கிறது திருவிளையாடல் புராணம்.

தூய உள்ளத்தோடும், உண்மையான பக்தியோடும் மீனாட்சி அன்னையை வணங்கினால் சகல சௌபாக் கியங்களும் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர்க்கு அளவற்ற கருணை யுடன் அருள்பாலிக்கிறாள் மதுரை மீனாட்சி.

அன்னையிடம் சரண் அடைந்து, வரம் கேட்டால், அன்போடு நாம் கேட்டதை நிறைவேற்றி வைக்கிறாள். அதனால்தான் உலகம் முழுவதும் மீனாட்சிக்குப் பக்தர்கள் இருக் கிறார்கள். கடல் கடந்து வந்து அன்னையைத் தினந்தோறும் தரிசிக்கின்றனர்.

மகத்தான சிறப்பு வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில்

சென்று, சிவபெருமானையும் தாய் மீனாட்சியையும் வணங்கி, திருவருளைப் பெற்று, வாழ்வில் உயர்வோமாக!

- சுந்தரம்

811 total comments on this postSubmit yours
  1. I am continuously invstigating online for tips that can assist me. Thx!

  2. whoah this weblog is excellent i really like reading your articles. Keep up the good work! You already know, a lot of persons are looking round for this information, you could help them greatly.

  3. I loved as much as you’ll receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get got an shakiness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this increase.

  4. This is a topic that’s near to my heart… Cheers! Exactly where are your contact details though?

  5. A further issue is that video gaming became one of the all-time biggest forms of excitement for people of all ages. Kids participate in video games, and also adults do, too. The XBox 360 is among the favorite video games systems for many who love to have hundreds of activities available to them, and also who like to play live with other people all over the world. Many thanks for sharing your notions.

  6. That is very fascinating, You are a very professional blogger. I’ve joined your rss feed and sit up for searching for more of your great post. Also, I have shared your web site in my social networks

  7. There are certainly plenty of particulars like that to take into consideration. That could be a great level to convey up. I offer the thoughts above as normal inspiration however clearly there are questions just like the one you deliver up the place the most important factor shall be working in sincere good faith. I don?t know if greatest practices have emerged round things like that, but I am sure that your job is clearly recognized as a good game. Each boys and girls feel the impression of just a second’s pleasure, for the remainder of their lives.

  8. whoah this weblog is excellent i really like reading your articles. Keep up the good work! You already know, a lot of persons are looking round for this information, you could help them greatly.

  9. Greetings, have you at any time asked yourself to publish concerning Nintendo Dsi handheld?

  10. Hello! Someone in my Myspace group shared this site with us so I came to take a look. I’m definitely loving the information. I’m book-marking and will be tweeting this to my followers! Exceptional blog and great design and style.

  11. Hello, you applied to compose outstanding posts, but the last several posts happen to be kinda lackluster… I miss your super posts. Past numerous posts are just a little bit out of track!

36 total pingbacks on this post
Submit your comment

Please enter your name

Your name is required

Please enter a valid email address

An email address is required

Please enter your message

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions