உலகில் எம்மொழிக்கும் இல்லாத உயர் தனிப்பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. அரிச்சுவடு ஆரம்பமே அறநெறி மூலம் காட்டப்பட்டுள்ளது. ஔவைக்கிழவி நம் கிழவி அமிழ்தினும் இனிய சொற்கிழவி எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும் என அழகாகக் கூறியுள்ளார்.
புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் குழந்தைகள் தமிழ் மொழியை பேசுவதோடு எழுத வாசிக்கவும் பெற்றோர் உதவி செய்ய வேண்டும. தயங்காது சகல பெற்றோரும் தமது தாய் மொழியை தம் குழந்தைகட்குக் கற்பிக்க வேண்டும். மொழியை செவ்வனே படிக்க பல வசதியீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அம்மா அப்பா இருவரும் வேலைக்கு செல்வதால் தமது மழலைச் செல்வங்களை பராமரிக்கும் நிலையம் முன்பள்ளிகள் மற்றும் செவிலித்தாய்மார்களிடம் விட்டு வருகின்றனர். இது ஒரு தவிர்க்க முடியாத மேலைத்தேய நாடுகளில் வாழும் பெற்றோர்களின் இன்றைய நிலை. இந்நிலை இன்று நம் சிறார்கள் தமிழை அறவே மறப்பதற்கு வழிகோழுகின்றன. புலம் பெயர்நாடுகளில் முன்னிலைப் பாடசாலைகள் நவீன முறைகளில் மொழியை போதிக்கிறார்கள். சொற் றொடர், படங்கள், பாட்டுக்கள், விளை யாட்டுப் பொருட்கள், கட்டைகள், சித்திரம் போன்ற பல வழிகளில் சின்னஞ்சிறு மழலைகள் அறிவையும் ஆற்றலையும் பெறுகிறார்கள். எமது குழந்தைகள் தாம் படிக்கும் அந்தந்த நாட்டு மொழி மூலம் இத்தகைய பலனைப் பெறுவது இயல்பே. அன்னையின் அரவணைப்பில் இருந்து விடுபட்டு தொலைக்காட்சி பூங்கா மைதானம் என அதன் வளர்ச்சி வட்டம் விரிவடைகிறது. குறிப்பாக தொலைக்காட்சியில் கூடிய நேரத்தை கழிக்கிறது. இதனால் பிடிவாதமும் கோபமும் அதிகரிக்கிறது.
(Eyago Lingo Kid)
இணையத்தளம்: www.tamiltoys.com
மின்னயஞ்சல்: info@eyagolingokid.com
தொலைபேசி:
+44 (0) 870 80 33 224
மேற்கொண்டு நீங்கள் இணைத்தளம் மூலம் சென்று கலைக்கிளி மன்றத்தில் இணையலாம். அங்கே பல பயனுள்ள கேள்வி, பதில் மற்றும் பல தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
“playing is learning & learning is playing” விளையாட்டு அறிவு சார்ந்த கற்கை நெறியாகும். கற்றல் விளையாட்டுடன் கூடிய கற்கை நெறியாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பதை நாம் நினைவுகூர வேண்டும். புதிய எண்ணக்கரு அவர்கள் மனதில் பதியும் பருவம். உயிரற்ற பொருட்களை உயிர்ப்பொருளாக எண்ணும் பருவமும் இதுவே. ஆராயும் பருவம் இதுவென உளவியலாளர் கருத்தாகும். உயர் கதிரையில் இருந்து கையில் உள்ள பொருளை எறியும் போது மழலை காரண காரிய அறிவை தெரியாமலே தெரிந்து கொள்கிறது. எண்ணறிவு எழுத்தறிவை சாரவும் எழுத்தறிவு மொழியறிவுடன் சார்ந்தும் வளர்கிறது (Numeracy skills are closely tied to literacy skills and literacy skills are closely tied to language skills). மேலைத்தேய விளையாட்டுக்கட்டி முறையை பின்பற்றி நாம் எமது மழலைகட்கு எண்ணும் எழுத்தும் போதிக்க முடியும். மழலை ஒரு பொருளை அல்லது ஒரு கட்டியை கையாளும் போது அதைக்கண்டு ஆனந்தப்படுகிறது. அதில் தெரியும் எழுத்து, சொல், இலக்கம், நிறம், கையடக்கம் போன்றவை அக்குழந்தையின் மனதில் இன்பமும் ஆர்வத்தையும் கொடுக்கும். பெற்றோர் அக்கட்டியை திருப்பி உருட்டி பிள்ளைகட்கு உதவுவதன் மூலம் மூன்று வகை வளர்ச்சியை குழந்தைகள் பெறுவர்.
- அசைவு இயக்கம் சார்ந்த அறிவு (motor development). சதுரக் கட்டி உருட்டும் போது கை விரல் அசைவும் உள ஊக்கமும் குழந்தையிடம்
ஏற்பட வழிபிறக்கிறது. - பொது அறிவு சார்ந்த (cognitive) நுட்ப வளர்ச்சி ஏற்படுகிறது.
- சமூகமயம் சார்ந்த அறிவு (social development) விருத்தி பெறுகிறது. எடுத்துக்காட்டாக பல கட்டிகளை வகைப்படுத்தி நிரைப்படுத்திச் செய்யும் முயற்சி எதிர்காலத்தில் பெரிய வகுப்பறையில் படிக்க தன்னை தயார் படுத்துகிறது.
சதுரக் கட்டிகளை தொடுதல், தூக்குதல் உருட்டுதல் அடுக்குதல் ஆகியவை திட்டமிடல் பண்பை வளர்க்கிறது. புதிர்களை கொடுத்து விடைகாண செய்வித்தல் நல்ல பலனைக் கொடுக்கும். மேலும் சரியாக அவர்கள் செய்யும் போது பரிசுகள் கொடுத்துத் தட்டிக்கொடுப்பதால் தமிழில் குழந்தைகளிற்குள்ள பற்றை ஆர்வத்தை வளர்க்கும்.
பெற்றோர்கள் மற்றும் குழந்தை கண்காணிப் பாளர்கள் பின்வரும் ஐந்து குறிப்புகளை அவதானத்தில் கொள்ள வேண்டும்:
- சுய முறையில் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.
- புதிய அனுபவங்கள் பெற வாய்ப்புக் கொடுத்தல் வேண்டும்.
- ஒவ்வொரு செயற்பாடும் ஒழுங்கு முறையில் செய்ய ஊக்கப் படுத்த வேண்டும்.
- புதிர்களை உருவாக்கி விடை காணத்தூண்ட வேண்டும்.
- சக பிள்ளைகளுடனான நல்லுறவுத் தொடர்பை வளர்க்க உதவ வேண்டும்.
- சுய முறையில் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.
சதுரக் கட்டிகளைப் பயன்படுத்தும் பொழுது உதாரணமாக 5 எனும் இலக்கத்தை விளங்கப்படுத்த 5 பழங்கள் 5 விரல்கள் என்று ஆரம்பித்து 5 நிலம், ஐம்புலன் எனகால ஓட்டத்தில் விரிவாக்க முடியும். மழலைகளின் ஆளுமையில் இருந்து வெளிப்படும் கருத்துக்களைக் கேட்டு அவர்களுக்கே அறிவு எனும் செல்வத்தை திருப்பிக் கொடுத்து நல்வழிப்படுத்துவது பெற்றோர், ஆசிரியர் மற்றும் நலன் விரும்பிகளின் தலையாய கடமையாகும். எதிர் காலத்தில் எம்மழலைகள் தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் சிறந்து மிக்க பற்றுக் கொண்டவர்களாக வளர முயற்சி செய்வோம்.

