கஜினி அமிர்கான் கலக்கல்!
எந்த ஒரு பாலிவுட் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு… பரபரப்பு… படத்துக்கு பூஜை போட்ட நாள் தொடங்கி, ரிலீசுக்கு பிறகும் அது தொடர்கிறது. ”கஜினி” தமிழில் வெளிவந்த அதே “கஜினி”. அதே கதை, அதே இயக்குனர்! பரபரப்புக்கு முக்கிய காரணம் பட நாயகன் அமிர்கான். அமிர்கானே முன்வந்து, நடிக்க ஒப்புக்கொண்ட படம் என்பதில் கூடுதல் எதிர்பார்ப்பு. திரையுலக ஜாம்பவான்கள் பலரும் வியந்து, மாய்ந்து பாராட்டிக் கொண்டிருப்பது ”கஜினி”யில் அமிர்கானின் நடிப்பை! தடைகளைத் தாண்டி படம் வெளியானது, எதிர்பார்த்ததைவிட வெற்றி மாலைகளைக் குவித்துக் கொண்டிருப்பது என இரட்டைச் சந்தோஷத்தில் இருக்கிறார் அமிர்கான்.
அவருடன்…
இந்தப் படத்துல நடிக்க உங்களைத் தூண்டினது எது?
“நிறைய இருக்கு. படத்தோட கதை, அதுல இருந்த ஆக்ஷன், திரைக்கதை, காதல்… இப்படி எவ்வளவோ… நான் இந்தப் படத்தைப் பண்ண முக்கிய காரணம் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரை நான் முதல்ல சந்திச்சப்ப, கையிலபொம்மை வச்சுக்கிட்டு விளையாடற ஒரு குழந்தையோட பேசற மாதிரி உணர்ந்தேன். அவர்கூட ஒர்க் பண்ண பிறகு என் எதிர்பார்ப்பு அத்தனையும் நிறைவேறிடுச்சு!”
இந்தப் படத்துல உங்களோட மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்னு எதைச் சொல்வீங்க?
“”தமிழ் “கஜினி”ல ஹீரோவா நடிச்சிருந்த சூர்யா. அதுல அவரோட நடிப்பைப் பார்த்து மிரண்டு போயிட்டேன். கதையைக் கேட்டுட்டு நடிக்க சம்மதிச்ச நான், சூர்யாவோட நடிப்பைப் பார்த்ததும், இந்தப் படம் பண்றதில்லைங்கிற முடிவுக்குக் கூட வந்துட்டேன். அவர் அளவுக்கு என்னால நடிக்க முடியுமானு ஒரு தயக்கம். அப்புறம் சூர்யாதான் என்னை ரொம்ப கன்வின்ஸ் பண்ணினார். “இந்தில இந்தக் கதைல, உங்களைத் தவிர வேற யாராலயும் இந்த கேரக்டரை பண்ண முடியாது. நீங்க பண்றீங்கÕனு சொல்லி, என்னைப் படத்துக்குள்ள இழுத்து
விட்டதே சூர்யாதான். இன்ஸ்பிரேஷன்னா சூர்யாதான்!”"
4 பக், 6 பக்னு தமிழ் ஹீரோவெல்லாம் முயற்சி பண்ணிட்டிருக்கும் போது, நீங்க தடாலடியா 8 பக்குனு அதிர்ச்சி கொடுத்தீங்க, இந்தப் படத்துல… அனுபவம் எப்படி இருந்தது?
“”ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரி கெட்டப் சேஞ்ச் இருந்திருக்கு. ஆனா, “கஜினி” அளவுக்கு என்னை எதுவும் கஷ்டப் படுத்தினதில்லை. படத்துல என்னோட கேரக்டருக்கு இப்படிப்பட்ட உடல்வாகுதான் வேணும்னு டைரக்டர் சொல்லிட்டார். அதுக்காக நான்ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன்.ஆனா, ஒரு கட்டத்துலகூட பொறுமையை இழக்கலை. கிட்டத்தட்ட 13 மாச உழைப்பு. ஒவ்வொரு நாளும் வலியால துடிச்சிருக்கேன். அழுதிருக்கேன். ஆனா, ஒவ்வொரு நாளும் என் உடம்புல உண்டாகிற மாற்றத்தைப் பார்க்கிறப்ப, உத்வேகமும் உற்சாகமும் தானா வந்துடும். அப்படித்தான் சாத்தியமாச்சு இந்த 8 பக்!”"
உங்க ஹீரோயின் அசின் பற்றி…
“”பிரமாதமான நடிகை. ரொம்பத் திறமையானவங்க. பாலிவுட்ல கண்டிப்பா மிகப் பெரிய உயரத்துக்குப் போவாங்க. நடிப்புக்கு அடுத்தபடியா அசின்கிட்ட என்னை பிரமிக்க வச்ச விஷயம் அவங்க மொழி. இந்தில இவ்வளவு சரளமா பேசுவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை. தமிழ்லேர்ந்து வந்த நடிகைங்கிற சாயல் அவங்க பேச்சுல கொஞ்சமும் இல்லை. படம் பார்க்கிற ரசிகர்கள், அவங்க சவுத்லேர்ந்து வந்தவங்கன்னு சொன்னா நம்ப மாட்டாங்க. அவ்வளவு பர்ஃபெக்ஷன். பாலிவுட்ல அவங்களுக்கு ஒரு இடம் காத்திருக்கு!”"
ஷாருக்கானோட “ரப் னே பனா தி ஜோடி” ரிலீசான அதே நாள், உங்க “கஜினி” படத்துக்காக அதே ஹேர் ஸ்டைலோட நீங்க பப்ளிசிட்டில இறங்கியிருக்கீங்க. என்ன இதெல்லாம்?
“‘இது அந்த மாதிரி பிளான் பண்ணிப் பண்ண விஷயமில்லை. உண்மையைச் சொல்லμம்னா “கஜினி” அக்டோபர் 2ம் தேதியே ரிலீசாகி இருக்க வேண்டியது. எனக்கு கால்ல அடிபட்டதால, ரிலீஸ் தேதி தஷீமீளிப் போயிடுச்சு. திட்டமிட்டபடி அன்னிக்கே ரிலீஸ் ஆகியிருந்தாலும், நான் இதையே தான் செளிணிதிருப்பேன். என்னோட படங்களுக்கான பப்ளிசிட்டில எனக்கு சில கொள்கைகள் இருக்கு. படத்தைப் பத்தி
சொல்றப்ப, அது ஜனங்களுக்கு எந்தவிதமான நெகட்டிவ் தகவலையும் கொடுக்கக் கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். அதே மாதிரி விளம்பரத்துக்காக நான் பண்ற எந்த விஷயமும் யாரையும் நோகடிக்கக் கூடாதுங்கிறதையும் பார்த்துப்பேன். என்னதான் பப்ளிசிட்டி பண்ணினாலும், அது எதுவும் படத்தைத் தூக்கி நிறுத்தாது. கதை நல்லா இருந்தாதான் படம் தாக்குப் பிடிக்கும்.”"
என்ன சொன்னாலும் உங்களுக்கும், ஷாருக் கானுக்கும் இடையில ஒரு புகைச்சல் இருந்துட்டே தானே இருக்கு?
“”நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் நல்ல மரியாதை வச்சிருக்கோம். ஷாருக்கோட பேட்டிகள்ல பார்த்தீங்கன்னா, அவர் பெரும்பாலும் தன்னைப் பத்தியேபெரிசா பேசுவார். ஆனாலும், அவரை எனக்குப் பிடிக்கும். என்னைக் கவர்ந்த மனிதர் ஷாருக்னு சொல்லிக்கிறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எங்களை விரோதிகளாவும், நண்பர்களாவும் சித்தரிக்கிறதெல்லாம் மீடியாதான்.”"
இல்லையே… “கஜினி”ல உங்க கெட்டப்பை அப்படியே படங்களாவரைஞ்சு, தியேட்டர்ல வச்சு சல்மான்கான் பரபரப்பை உண்டாக்கினதுகூட, ஷாருக்கானை கடுப்பேத்தறதுக்கான விஷயம்னு பேசிக்கிறாங்களே… ஷாருக் கானுக்கு எதிரா நீங்க கூட்டணி அமைக்கிறதா கூட…
“”சல்மானும் சரி, ஷாருக்கும் சரி, எனக்கு நல்ல நண்பர்கள். யாருக்கு எதிராவும் யாரும் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சல்மான் அப்படி வரைஞ்சு கொண்டு வருவாருங்கிறதே எனக்குத் தெரியாது. நானா அவரை வரையச் சொன்னேன்? சல்மான் ஒரு பிரமாதமான ஓவியர்னே எனக்கு அப்பதான் தெரியும். அவரோட திறமை என்னை பிரமிக்க வச்சது.”"
ஒரு படம் தோல்வியடையறப்ப எப்படி எடுத்துப்பீங்க?
“”ஒவ்வொரு படமும் என் ஆன்மா. ஏதாவது படத்துல தப்பு நடந்து, தோல்வியடையறப்ப, அதுக்கான முழு பொறுப்பையும் ஏத்துக்கத் தயங்க மாட்டேன். படம் தோல்வியடைய நான் காரணமா இல்லைன்னாலும், அதை ஒரு அனுபவமா எடுத்துக்கிட்டு, அடுத்த படத்துல சரி செளிணியத்தான் பார்ப்பேன்.
ஆஸ்கார் கமிட்டில உங்களோட “தாரே ஜமீன்பர்” பாராட்டப் பட்டது பற்றி…
“”எத்தனையோ படங்களுக்கு மத்தில என்னோட படத்தையும் பார்த்துட்டு நல்லாருக்குனு பாராட்டினாங்க. என்னோட படம் விருதுக்குத் தேர்வாகுதா, இல்லையாங்கிறதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. ஆனா அந்தப் பாராட்டே எனக்குப் பெரிசு!
எந்த மாதிரிப் படங்கள் பண்ணனும்னு ஆசை?
“”நான் மிகப் பெரிய லட்சியவாதி. என்னோட காலத்துக்குப் பிறகும் என் படங்கஷீமீ பேசப் படμம்னு நினைக்கிறேன்.”லகான்” படத்தை 200 வருஷங்களுக்குப் பிறகு யாராவது பார்த்தாலும், “யார்றா அவன்னு கேட்கனும்னு.”"
செய்யணும்னு ஆசைப்படற கேரக்டர் ஏதாவது?
“”மகாபாரதம்” என்னை ரொம்பக் கவர்ந்த கதை. குறிப்பா அதுல வர்ற கர்ணன் கேரக்டர். உடல்ரீதியா அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமா இருப்பேனானு தெரியலை. ஆனா, மனரீதியா நான் அதுக்குத் தயார். என்னைக் கவர்ந்த இன்னொரு கேரக்டர் கிருஷ்ணா. குட்டிப்பையனா இருந்தப்ப, எனக்கு கன்னம் ரெண்டும் புசுபுசுனு இருக்கும். பொண்ணுங்க என்னையே சுத்திச் சுத்தி வருவாங்க. வெண்ணெய் வேற நிறைய
தின்பேன். எங்கம்மா என்னை கோபியர் சூழ்ந்த கிருஷ்ணன்னுதான் கூப்பிடுவாங்க.”"
- எஸ்.ஆனந்த்

