விருது நாயகனுடன் ஒரு விறுவிறு பேட்டி…

பாலிவுட் படைப்புகளை ஹாலிவுட் வரைக்கும் பேச வைக்கிறது இங்க அபூர்வமான விஷயமா இருக்கே, ஏன்?

“இங்க நிறைய திறமையான இயக்குனர்கள் இருக்காங்க. பாலிவுட்,ஹாலிவுட்னு இரு பக்கத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தற மாதிரிப் படைப்புகளை எடுக்கிறது அவங்களுக்கு சவாலான காரியமா இருக்கிறதுதான் காரணம். “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்துல எல்லாரும் இந்திய நடிகர்கள். மியூசிக் போட்டது இந்தியாவைச் சேர்ந்த நான். படம் கதையான விதமும், திரைக்கதையும் ஹாலிவுட் ரசிகர்களையும் திருப்திப்படுத்தற விதத்துல அமைஞ்சிருக்கிறதுதான், இந்தப் படம்இவ்ளோ பேசப்படக் காரணம்!

“ஸ்லம்டாக்” படத்துக்குக்கிடைச்ச நான்கு விருதுகள்ள உங்களுக்குக் கிடைச்சதுதான் பெஸ்ட்டுனு பட நாயகி பின்ட்டோ சொல்லியிருக்காங்களே…Cini Yugam Thanga Nayagan Page

“அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.பாராட்டுக்கு நன்றி. ஆஸ்கார் கமிட்டி மெம்பர்களோட லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஒரு மீட்டிங்ல இருந்தேன். அங்க உள்ளசில சினிமா விமர்சகர்கள்,அவங்க பார்த்ததுலயே இதுதான் மிகச் சிறந்த படம்னு சொன்னாங்க. அதுக்குக் காரணம் என்னோட இசை மட்டும் இல்லை. படம் எடுக்கப்பட்டவிதம் அப்படி. வறுமையைப் பத்தி, வாழ்க்கையைப் பத்திப் பேசற இந்தப் படம், மும்பை வாழ் மக்களை மட்டுமில்லாம, அமெரிக்கர்களையும் கவர்ந்திருக்குன்னா காரணம், அது படமாக்கப் பட்ட விதம். இதுல நான் பெருமைப்பட ஒண்ணுமில்லை!

படங்களை எந்த அடிப்படைல ஒப்புக்கறீங்க? பேனரை பார்த்தா?

நிச்சயமா இல்லை. சில படங்கள் பேசும் போதே மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு, அது வெற்றியடையும்னு சொல்லும். அது ரொம்ப சின்ன பட்ஜெட் படமா இருந்தாலும், என் மனசு சொன்னதைக் கேட்டுஒத்துப்பேன். சில சமயம், பெரிய பேனர் படங்களை கட்டாயத்தின் பேர்ல பண்ண வேண்டியும் வரலாம். “ஸ்லம்டாக்” படம் கமிட் பண்ண, நான் இன்னொரு பெரிய புராஜெக்டை தியாகம் பண்ணவேண்டியிருந்தது.

இந்தியாவைப் பொருத்த வரை நீங்க ஒரு சூப்பர் ஸ்டார். ஆனா, ஹாலிவுட்ல நீங்க யாரோ ஒரு மூணாவது மனிதர். அது உங்களை வருத்தப்படச் செய்யுதா?

எப்பவும் எங்கயும் என் திறமைதான் கவனிக்கபடனும்னு ஆசைப்படறேன். என்னை யாரும் கவனிக்கனும்னு விரும்பினதில்லை. புகழ், பணம், வசதிகள்னு வாழ்க்கைல எல்லாம் வசப்பட்ட பிறகு, ஒரு கட்டத்துல வாழ்க்கையைப் பத்தின நம்ம பார்வை மாறுது. அப்படிப் பார்த்தா, இப்ப என் லட்சியம், சமுதாயங்களை இணைக்கிறது. கலைஞர்களால அதைச்சுலபமா செளிணிய முடியும். என்னோட அமைப்பு மூலமா வறுமைக்கெதிரான நடவடிக்கைகள்ள ஈடுபட்டிருக்கேன். கர்நாடக சங்கீதம் கத்துக் கொடுக்க ஸ்கூல் நடத்தறேன். இதெல்லாம் என்னை வேகமா ஓடிக்கிட்டே இருக்கவைக்குது.

உங்க வேலைல மதம் எந்தளவு பங்கு வகிக்கும்?

நான் ஒரு சூஃபி முஸ்லிம். கலைங்கிறது சமுதாயத்துக்கு ரொம்பவே முக்கியம். இசைங்கிற வடிவம் மூலமா நல்ல அதிர்வுகளைப்பரப்பறதுதான் என் வேலை. அதே இசை தவறான விஷயங்களைக் கிளப்பும்னு தெரிஞ்சா, நான் சில புராஜெக்ட்களை ஏத்துக்கிறதில்லை. இஸ்லாத்துக்கு எதிரா மட்டுமில்லை, எந்த ஒரு மதத்தையும் தப்பா பேசற அல்லது பிராபகண்டா பண்ற மாதிரியான படங்களை நான் கமிட் பண்றதில்லை.

மும்பைல நடந்த திவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மும்பையைப் பத்தின பார்வை அமெரிக்கால எப்படியிருக்கு?

எல்லாருமே கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருக்காங்க. பாதுகாப்புகள் ரொம்ப பலமா இருக்கு. ஆனா அவங்க இந்தியாவைப் பத்தி,இந்திய சினிமாவைப் பத்தி, இந்திய இசையைப் பத்தி பார்க்கிற விதம் ரொம்ப பாசிட்டிவா இருக்கு. அங்கருந்து நிறைய பேர் நம்ம சினிமா இன்டஸ்ட்ரியோட இணைஞ்சு வேலை பார்க்கிற ஆர்வத்துல இருக்காங்க. நடந்தா நல்லாருக்கும்!

- வினோதினி

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions