
இயக்குனர்கள் அகத்தியன், பிரபுசாலமன் ஆகியோரிடம் பணிபுரிந்த சாண்டியல்யா ‘ரா ரா’ படம் மூலம் அறிமுகமாகிறார்.
”ராயபுரம், ராயப்பேட்டையில் வசிக்கும் இரண்டு குடும்பத்தை பற்றிய கதை. இந்த ஏரியா பெயர்களின் முதல் எழுத்துகள்தான் படத் தலைப்பு. இதன் களம் திருக்குறளை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 20 குறள்களை தேர்வு செய்து, அதை பாடலாக்கி இசை அமைக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. சினிமா பாட்டு கேட்பது தவறு என மாணவர்களை சிலர் கண்டிப்பதுண்டு. இந்த பட பாடல்களை மாணவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும்.
நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான இப்படத்தில் உதயா, ஸ்வேதா பிரசாத் நடிக்கின்றனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்” என்கிறார் சாண்டில்யா.

