சிம்பு நடிக்கிற ‘வானம்’ படத்தின் ஸ்டில்களில் அனுஷ்காவை பார்த்துவிட்டு அவர்தான் ஹீரோயின் என நினைத்தால் தவறு. அந்தப் படத்தில் இந்த அழகு மயில், ஒரே ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறதாம். அதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் 25 லட்சம்!
”ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்ணினா தப்பா என்ன? இன்னிக்கு ஐஸ்வர்யா ராய் எவ்வளவு பிரபலம்? இப்பவும் அவர் டான்ஸ் மட்டும் பண்ணின ‘கஜ்ராரே’ வை யாராலயாவது மறக்க முடியுமா? ஒரு பாட்டுக்கு ஆடினாலும், என்னால ரசிகர்களைக் கவர முடியுங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்”. – விளக்கம் சொல்கிறார் அனுஷ்கா.

