அடுத்த வருடம் 70-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் சிவகுமார். பேரன், பேத்திகள் பார்த்து விட்ட இந்த வயதிலும் இன்னும் இளமையாகவே இருப்பது தொடரும் ஆச்சரியம்…
”யோகா தான் ரகசியம்-. வேற ஒண்ணுமில்லை. 1958லேர்ந்து யோகா பண்றேன். 40 வயசுக்குப் பிறகு அசைவம் சாப்பிடறதை விட்டுட்டேன். வயசாக, ஆக நம்ம உடலுழைப்பு குறையுது. அப்ப, அசைவத்துலேர்ந்து சைவத்துக்கு மாறினா, சைவ உணவு சீக்கிரம் செரிக்கும். வியாதிகளும் வராது” என சிம்பிளாக சொல்கிறார் சிவகுமார்.

