மதுரையில் ஷைன் சிறப்பு பள்ளி மன வளர்ச்சி குன்றிய மாணவர்களிடம் கலந்துரையாட வந்த நடிகர் விஜய், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது நிருபர்கள் உங்களது அரசியல் பிரவேசம் எப்பொழுது என்று கேட்டதற்கு நேரடியாக பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தீர்கள்; ஊழலுக்கு எதிராக தமிழகத்தில் இயக்கம் துவங்குவீர்களா? என்ற கேள்விக்கும், “பிறகு சொல்கிறேன் என்றார் மழுப்பலாக.
இந்தச் சந்தர்பத்தில் மதுரை காளவாசலில் விஜய் தங்கியிருந்த ஓட்டல் முன், ரசிகர்கள் கூடினர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தினர்.

