அதிமுக முன்னாள் எம்.பி-யும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் (வயது 69) மாரடைப்பால் காலமானார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நேற்றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார்.
நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார். அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகள் உதவியுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
எஸ்.எஸ்.சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு ரசிகர்களாலும், அதிமுகவினராலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் நடிகராக பிரபலமான எஸ்.எஸ்.சந்திரன், அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தற்போது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துவந்தார். விஜய் டிவி நிகழ்ச்சி வழங்குபவராகவும் செயல்பட்டு
பாட்டி சொல்லைத் தட்டாதே, மாப்பிள்ளை, உழைப்பாளி, தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், கதாநாயகன், ஒன்ஸ்மோர் ஆகியவை எஸ்.எஸ்.சந்திரன் நடித்த 100-க்கும் அதிக படங்களில் குறிப்பிடத்தக்கவை.

