‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்துக்குப் பிறகு கல்யாணம் செய்துகொண்டு காணாமல் போன பூமிகா, மீண்டும் வருகிறார்.
ஒரு தமிழ் படத்தில் நடிக்கிற அவர், தன் கணவர் பரத் தாகூருடன் இணைந்து ‘தகிட தகிட’ என்கிற தெலுங்கு படத்தைத் தயாரிக்கிறார்.
பூமிகாவை நடிகையாக மட்டுமே அறிந்தவர்களுக்கு இன்னொரு சேதி. அவர் ஒரு கவிஞரும் கூட!
இந்தியில் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு ஒன்று இந்த வருட இறுதியில் வெளிவருகிறது.

