டிமிக்கி கொடுக்கிறார் சந்தானம்!

Santhanamஒரு கல் ஒரு கஞ்ணாடி படத்திற்கு ஆரம்பத்தில் கால்ஷீட்டை அள்ளிக்கொடுத்த சந்தானம், இப்போது சா¢யானபடி படப்பிடிப்பு வராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு அல்லோல் பட்டுக்கொஞ்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒரு கல் ஒரு கஞ்ணாடி. இப்படம் கடந்த திமுக ஆட்சியின்போதே தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வாரின் பேரன் என்பதால் உதயநிதி ஸ்டாலின் கேட்டபடி கால்ஷீட் கொடுத்திருந்தார் காமெடி நடிகர் சந்தானம். ஆனால் இப்போது பல படங்கள் கைவசம் இருப்பதாக சொல்லி சொன்னபடி படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் சில நாட்களில் படப்பிடிப்புகூட அவரால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காரணம், இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்தான் நாயகன் என்றாலும், அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலுமே சந்தானமும் வருகிறாராம். இதனால் உதயநிதி நடிக்க வேஞ்டிய காட்சிகளை எடுக்க வேணடுமென்றால் அவசியம் சந்தானமும் வேணடும் என்ற நிலையில் அப்படம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது படு பிஸியாக இருக்கும் சந்தானம், இதோ அதோவென்று கால்ஷீட்டை இறுக்கிப்பிடித்துக்கொடுப்பதால், அவருக்காக படப்பிடிப்பையே நிறுத்தி வைத்து விட்ட காத்திருக்கிறார் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின்.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions