பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ’3 இடியட்ஸ்’. இதில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள்.
இப்படத்தை டைரக்டர் ஷங்கர் தமிழில் இயக்குகிறார். ‘மூவர்’ என்ற பெயர் யோனையில் இருந்தது. இப்போது ‘நண்பன்’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தியில் அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார். பிறகு, விஜய் விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்குப் பதிலாக சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார். பிப்ரவரி 7-முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறுகிறது.
பொறியியல் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூவரும் நண்பர்கள். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், நண்பர்களில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். வேலையில் சேர்ந்த மற்ற இருவரும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா என்பதே இப்படத்தின் கதை!

