வடிவேலுவின் அடுத்த பிரச்னை!

வைகைப்புயல் வடிவேலுவுக்கு ஏழரை மேல் ஏழரை! ஒருவழியாக சிங்கமுத்து பிரச்னை கொஞ்சம் அமைதியடைந்த நிலையில், அடுத்து இன்னொரு பிரச்னை கிளம்பியிருக்கிறது. வடிவேலுவின் மகன் சுப்ரமணிக்கு நடிப்பாசை. அப்பாவின் செல்வாக்கை வைத்து நடிக்க வாய்ப்பு வாங்கித் தரச் சொல்லி நச்சரிக்க, மகனின் அன்புத் தொல்லை தாங்காமல், கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சியில் மகனை சேர்த்து விட்டிருக்கிறார். நான்கு நாட்கள் வகுப்புக்குப் போனதோடு சரி, பயிற்சியெல்லாம் வேண்டாம், நேரடியாக நடிக்கிற அளவுக்கு என்னிடம் திறமை இருக்கிறது என்றிருக்கிறார் மகன். பயிற்சியாளர்களிடம், மகனுக்காக கட்டிய 4 லட்ச ரூபாய் கட்டணத்தைத் திருப்பித்தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார் வடிவேலு. ‘வகுப்புக்கு வராதது உங்க பையன் தப்பு. பணத்தையெல்லாம் திருப்பித் தர முடியாது’ என அவர்கள் கையை விரிக்க, ‘வட போச்சே…’ ரேஞ்சில் செம ஃபீலிங்கில் இருக்கிறார் வடிவேலு.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions