ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘ரோபோ 2′ என்ற பெயரில் உருவாகவிருப்பதாக செய்திகள் வருகின்றன.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது இணையதளத்தில், ”ரோபோவின் இரண்டாம் பாகம் குறித்து நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பார்க்கலாம்” என்று பதிலளித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தான் தயாராக இருப்பதாக ரஜினி ஏற்கெனவே கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.
இப்போது நண்பன் (3 இடியட்ஸ்) படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். வழக்கமாக நீண்ட காலம் படப்பிடிப்பு நடத்தும் ஷங்கர், இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க இருக்கிறார். ‘நண்பன்’ முடிந்ததும் ‘ரோபோ 2′ வேலைகள் தொடங்கப்படும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

