ரஜினி-தனுஷ் அடுத்த படங்கள்!

ரஜினியின் ஒவ்வொரு பட ரிலீசுக்கு பிறகும் அவரது அடுத்த படத்தை இயக்கப் போகிறவர் யார் என்று பட்டியல் கிளம்பும். இந்த முறையும் அப்படியே… பட்டியலில் இந்த முறை இயக்குனர் ஹரியும் இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு போகலாம் என்கின்றன நம்பிக்கையான வட்டாரங்கள். மாமனாரின் கால்ஷீட் கிடைக்காததால், மருமகனைப் பிடித்துவிட்டார் ஹரி. தனுஷ்-ஹரி முதல் முறையாக இணையும் அந்தப் படத்துக்கு ‘வேங்கை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விஜயா வாஹினி சார்பில் வெங்கட் ராம ரெட்டி தயாரிக்கிற இந்தப் படத்தில் ஹீரோயின் தமன்னா. முழுப் படப்பிடிப்பும் சிவகங்கை மாவட்டத்திலேயே நடக்கிறது.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions