நடிகை மீனா குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்கு மனைவி லதாவுடன் வந்து வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. குழந்தைக்கு தங்கச் சங்கிலி பரிசளித்தார்.
ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் அவருக்கு ஜோடியாக கலக்கியவர் மீனா. எஜமான், வீரா, முத்து என சூப்பர்ஹிட் படங்களின் நாயகி மீனாதான். மீனாவின் குழந்தையும் சூப்பர் ஸ்டாரின் நாயகியாக நடிக்கும் என வேடிக்கையாகக் கூறப்படுவதுண்டு!
சென்ற ஆண்டு, பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர் வித்யாசாகரை மீனா மணந்தார். 1.1.11 என பிறந்த தேதி அமையுமாறு முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரம் மீனாவின் குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா சென்னையில் நடந்தது.

