பிரபுதேவா – நயன்தாரா விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரது முன்னாள் காதலன் சிம்பு – இன்னாள் காதலர் பிரபுதேவா இடையே மோதல் வெடித்துள்ளது.
நயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்பு, தனக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான நெருக்கம் பற்றியும் நயன்தாராவின் ரகசியங்களைப் பற்றியும் வெளிப்படையாகக் கூறுகிறாராம். இச்செய்தி பிரபுதேவாவின் காதுகளை எட்ட, அவர் ரொம்பவே டென்ஷனாகி விட்டார். உடனே சிம்புவை அழைத்து எச்சரித்ததாகக் கூறுகிறார்கள்.
‘இனிமேல் நயன்தாரா பற்றி பேசக்கூடாது. முடிஞ்சது முடிஞ்சுப்போச்சு… நீ ஒண்ணும் வாய் திறக்க வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறாராம் நயனை விரைவில் திருமணம் செய்யப்போகிற பிரபுதேவா.

