‘வெப்பம்’, ‘நடுநிசி நாய்கள்’, ‘அழகர்சாமியின் குதிரை’ என ஏற்கனவே 3 படங்களைத் தயாரிக்கிறது கவுதம் வாசுதேவ் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம். அடுத்து ‘கற்றது தமிழ்’ இயக்குனர் ராம் இயக்கி, நடிக்கிற ‘தங்க மீன்கள்’ படத்தையும் தயாரிக்கிறார் கவுதம். மோசமான மகன், சந்தர்ப்ப சூழல் காரணமாக நல்ல அப்பாவாக எப்படி மாறுகிறான் என்பதே கதைக் கருவாம். யுவன்சங்கர் மியூசிக்!

