Deiva Thirumagal Movie Review

போதிய மனவளர்ச்சி இல்லாத விக்ரமுக்கும், அவரது மனைவி பானுமதிக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் குழந்தை பிறந்ததும் பானுமதி இறந்து விடுகிறார். இதனால் குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு விக்ரமுக்கு ஏற்படுகிறது. மகளுக்கு நிலா என்று பெயாரிட்டு வளர்த்து வருகிறார்.

இந்த சமயத்தில் அவரது மனைவியின் தந்தை, நிலாவை விக்ரமிடமிருந்து பறித்து சென்று தான் வளர்க்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக வக்கீல் அனுஷ்கா வந்து, அந்த குழந்தை விக்ரமுக்கு கிடைப்பதற்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். ஒருபக்கம் பாசப்போராட்டம், இன்னொரு பக்கம் வக்கீல் போராட்டம் இரண்டுமிற்குமிடையே சிக்கித்தவிக்கும் அப்பாவும், மகளும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

Deiva Thirumagal

இதற்கு முன்பு அப்பா-மகள் பாசத்தை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்தபோதும், இந்த தெய்வத்திருமகள் வித்தியாசமான படமாக உள்ளது. 6 வயது குழந்தை மனநிலையில் அருமையாக நடித்திருக்கிறார் விக்ரம். மகளை பிரிந்து அவர் தவிக்கும் தவிப்பு சொல்லில் அடங்காது. இதற்கு முன்பு சேது, காசி, பிதாமகன் என்று மாறுபட்ட கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்த விக்ரம், இப்படத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட நிறைய உழைத்திருக்கிறார், தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில், வக்கீலின் வாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நீண்ட நாளைக்குப்பிறகு பார்த்துக்கொண்ட அப்பாவும், மகளும் சைகையால் பேசிக்கொள்ளும் விதம் அற்புதம். குபுக்கென்று கண்ணீர்த்துளிகளை எட்டிப்பார்க்கச் செய்யும் செண்டிமென்ட் டச்.

அடுத்து, அனுஷ்கா வக்கீலாக வருகிறார். வழக்கமான டச் இல்லாமல் புதுமாதிரியாக வந்து செல்கிறார். அதேபோல் அமலாபால் சித்தி கேரக்டாரில் சின்சியராக நடித்திருக்கிறார். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், நாசர் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

நீரவ்ஷாவின் கேமராவும், ஜி.வி. பிரகாஷ் இசையும் இயக்குனர் விஜய்க்கு பொரிய அளவில் கைகொடுத்திருக்கின்றன.

ஆளாளுக்கு கோடம்பாக்கத்தில் கமர்ஷியல் படமெடுக்கிறேன் என்று அருவா கம்புகளுடன் அலைந்து கொண்டிருக்க, அன்பு, பாசம் என்ற ஆயுதம் கொண்டு பார்வையாளர்களை வீழ்த்தியிருக்கிறார் இயக்குனர் விஜய். அவருக்கு இப்படம் ஒரு பொரிய பாரிணாம வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

தெய்வத்திருமகள்- குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய தரமான படைப்பு.

Deiva Thirumagal Movie

Deiva Thirumagal Movie - Cast and Crew:

Cast: Chiyaan Vikram, Anushka, Nasser, Santhanam, Amala Paul, YG Magendran, MS Bhaskar, Sara, Pandi, Sachin Khedekar, Krishna Kumar, George, Kishore, Priya, Surekha, TM Karthik, Thiyagarajan, Ramakrishnan

Direction: Vijay

Production:
M. Chinthamani

Music:
G.V.Prakash