அவன் இவன் லைலா!

‘நந்தா’, ‘பிதாமகன்’ என பாலாவின் இரண்டு படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் லைலா. தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டவர். கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பை மறந்திருந்த லைலா, இப்போது 2 குழந்தைகளுக்கு அம்மா. ஆனாலும் நடிகையாக இருந்த போது எப்படி இருந்தாரோ, அதே ஒல்லி உடல்வாகைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாராம் இன்றும். தனது ‘அவன் இவன்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டருக்காக லைலாவை, இயக்குனர் பாலா அழைத்திருப்பதாகக் கேள்வி. தனது படத்தை முடிக்கிற வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது என்கிற வாக்குறுதியையும் வாங்கியிருக்கிறாராம். சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸுக்காக காத்திருந்த லைலா, தனது ஆஸ்தான இயக்குனருக்கு ஓ.கே சொல்லிவிட்டதாகத் தகவல்!

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions