தனுசு

18.11.2010 முதல் 18.12.2010 வரை

பேச்சில் சாதனை படைப்பவர்களே!

  • நிதானமாகச் செயல்பட்டு நிம்மதி பெறும் மாதம் இது.
  • தம்பதிக்குள் வாக்குவாதங்கள் தவிர்த்தால் நெருக்கம் உண்டாகும்.
  • அலைச்சல் இருந்தாலும் உணவிலும் உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள்.
  • பயணங்கள் சொத்து விஷயங்களில் பலன் அளிக்கும். கோயில் உலாவும் வாய்க்கும். சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பணவரவு உண்டு. பழைய கடன் தீரும்.
  • அரசு காரியங்கள் அனுகூலமாகும். வேலைவாய்ப்பு உண்டாகும்.
  • குழந்தைகள், ரத்த சம்பந்தங்களோடு கடுமை காட்ட வேண்டாமே…
  • தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
  • வணிகம் சிறக்கும். பங்குதாரரோடு விட்டுக்கொடுத்துப் போகலாமே…
  • ஊழியர்களுக்குப் பயணங்கள், சிரமங்கள் இருந்தாலும் பலன் கிடைக்கும். நல்லது.

ராசி நாட்கள்:
நவம்பர் 23, 24, 25, 30 மற்றும் டிசம்பர் 1, 2, 3, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:
நவம்பர் 26, 27 தேதிகளில் நிதானம் முக்கியம்.

செய்ய வேண்டியது:
சிவனை வணங்குங்கள். கர்ப்பிணிகளுக்கு உதவுங்கள்.