மேஷம்
18.11.2010 முதல் 18.12.2010 வரை
அதிரடி முடிவுகள் எடுக்கும் அருமையானவரே!
- புகழும் கௌரவமும் கூடும் மாதம் இது.
- புது முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும்.
- தம்பதிக்குள் கசப்புகள் விலகும். குழந்தை பாக்கியம் பிறக்கும்.
- மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் ஏற்படும். சகோதரர்களுடன் இணக்கம் ஏற்படும்.
- வங்கி காரியங்கள் சாதகமாகும். வீடு கட்டும் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டுப் பொருட்கள் வாங்கலாம். அடமானப் பொருட்களை மீட்கலாம்.
- வெளிநாட்டு வாய்ப்புகள், வேலை வரும்.
- இன்பச்சுற்றுலாவுக்கு நாள் கிடைக்கும். விருந்தில் திளைக்கலாம்.
- கோபம், விவாதங்களைத் தவிர்க்கலாமே…
- கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்கலாமே…
- வணிகத்தில் புதிய வழிமுறைகளால் லாபம் அதிகமாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
- ஊழியர்களுக்குச் சிறப்பான செயல்பாடுகள் அமையும். இடமாற்றம் விருப்பத்துக்கேற்ப அமையும்.
ராசி- நாட்கள்:
நவம்பர் 24, 25, 30 மற்றும் டிசம்பர் 1, 2, 3, 9, 10, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
டிசம்பர் 4 மதியம் 2 மணி முதல் 5, 6 மாலை 7 மணி வரை கவனம் முக்கியம்.
செய்ய வேண்டியது:
அம்மனை வழிபடுங்கள். எளியோருக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்.

