ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது.
7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் என்ற ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தைத் தொடங்கியது. 7 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து முரளிவிஜய்யுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்திருந்தது. பிறகு 37 ரன்களோடு முரளி விஜய் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைச் சதம் அடித்த புஜாரா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது.
7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஆட்டத்தைத் துவக்கிய ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்கிற இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தைத் துவக்கியது. சிறிது நேரத்திலேயே 7 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு முரளி விஜயுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்திருக்கிறது. இதன் பிறகு 37 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைச் சதம் அடித்த புஜாரா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து டென்டுல்கரும் டிராவிட்டும் இணைந்தனர். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 45 ஓவரில் இந்திய அணி 207 ரன்களை எடுத்தது.
டென்டுல்கர் 53 ரன்களும் டிராவிட் 21 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

