தடைகளை தடாலடியாகக் கடப்போரே!
- அன்பினால் ஆறுதல் அளிக்கும் பெயர்ச்சி இது.
- இதுவரை உடல்நலக்கோளாறு, மருத்துவ செலவுகள் என அவதிப்பட்டு வந்த
- குடும்பம் இனி ஆரோக்ய வழியில் செல்லும்.
- தம்பதி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
- வெளிநாட்டு வாய்ப்புகள் வந்துசேரும்.
- ரத்த சொந்தங்கள் இடையே நிலவிய வேற்றுமைகள் மறைந்து உற்சாகம் பிறக்கும்.
- ஆன்மிகச் சுற்றுலா செல்ல வாய்ப்பு வரும்.
- சுப நிகழ்வுகளுக்கான அம்சங்கள் கூடிவரும்.
- வீட்டில் பிரசவ செலவுகளும் அலைச்சலும் ஏற்படும்.
- கல்விச் செலவும் உண்டு. கணிப்பொறி வாங்க வேண்டி வரலாம்.
- வணிகம் சிறக்கும். கல்வி, காகிதம், ஏஜென்சி துறைகளில் லாபம் அதிகம்.
- ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
2010 நவம்பர் 21 முதல் 2011 ஜனவரி 2 வரை:
- தடைகளே தடுமாறிப்போகும்! நீங்கும்.
- பணவரவு உண்டு.
- சொத்து, வழக்கு விஷயங்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.
- அரசு காரியங்கள் ஆதாயமாகும்.
2011 ஜனவரி 3 முதல் 2011 மார்ச் 13 வரை:
- இழுபறியாக இருந்துவந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும்.
- வரவுக்கேற்ப செலவுகளும் வந்துசேரும்.
2011 மார்ச் 14 முதல் 2011 மே 7 வரை:
- நல்ல வேலைவாய்ப்பு உண்டாகும்.
- உடல்நலத்தில் அக்கறை தேவை.
- வசதியான வீட்டுக்கு மாற வாய்ப்பு அமையும். சிலர் மனை அல்லது வீடு வாங்கக்கூடும்.
- பொன், பொருள் சேரும்.
- வாகனம் மாற்ற வழி பிறக்கும்.
செய்ய வேண்டியது:
வினாயகரை வழிபடுங்கள். வீடில்லாதோருக்கு உதவுங்கள்!

