குருப்பெயர்ச்சிப் பலன்கள் – கும்பம்

நாடு நலம்பெற எண்ணும் நல்லோரே!

  • முன்னேற்றமும் மகிழ்ச்சியும் உண்டாகும் பெயர்ச்சி இது.
  • தம்பதிக்குள் மனவேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும்.
  • அக்கம்பக்கத்தினருடன் அளவோடு பேசுவதே நல்லது.
  • வெளிநாட்டிலிருந்து உள்நாடு திரும்பும் வாய்ப்பு வரும்.
  • மருத்துவச் செலவுகள் குறையும்.
  • வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பொன், பொருள், உடை சேரும்.
  • ரத்த சொந்தங்கள் உதவுவார்கள்.
  • கடன்கள் ஓரளவு அடைபடும். அடகு மீட்க வழி பிறக்கும்.
  • பயணங்கள் இனிமை தரும். சிலருக்கு ஆகாயப் பயணம் வாய்க்கும்.
  • அரசு காரியங்கள் எளிதே முடியும்.
  • தடைபட்ட கட்டுமானப்பணி இனிதே முடியும்.
  • மின்னணு சாதனங்கள் செலவு வைக்கும்.
  • ஆன்மிகச் சுற்றுலா செல்ல வாய்ப்பு வரும்.
  • ஊழியர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். உயர்வு உண்டு.
  • வணிகத்தில் லாபம் பெருகும். கட்டுமானம், எலக்ட்ரிக்கல்,
  • எலக்ட்ரானிக்ஸ், மருந்து, மரம் போன்ற துறைகள் சிறக்கும்.

2010 நவம்பர் 21 முதல் 2011 ஜனவரி 2 வரை:

  • பணவரவு உண்டு.
  • குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
  • வழக்கு சாதகமாகும்.
  • வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பாடாகும்.

2011 ஜனவரி 3 முதல் 2011 மார்ச் 13 வரை:

  • வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் தருணம் வாய்க்கும்.
  • பழைய விஷயங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம்.
  • உடல்நலத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சியும் அவசியம்.

2011 மார்ச் 14 முதல் 2011 மே 7 வரை:

  • வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும்.
  • புது வாகனம் வாய்க்கும்.
  • பூர்வீகச் சொத்து சுமுகமாக வரும்.
  • மகன்/மகளுக்கு நல்ல வேலை வரும்.
  • உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. நிறைய நீர் பருக வேண்டும்.
  • பயணங்களால் செலவு வரும்.

செய்ய வேண்டியது:
ஈசனை வணங்குங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு உதவுங்கள்.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions