சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்டிங் தர வரிசையில் ஷேவாக், தெண்டுல்கர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
8-வது இடத்தில் இருந்த ஷேவாக் 713 புள்ளிகள் பெற்று 7-வது இடத்துக்கும், 9-வது இடத்தில் இருந்த தெண்டுல்கர் 711 புள்ளிகள் பெற்று 8-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். கேப்டன் டோனி 786 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 854 புள்ளிகள் பெற்றுள்ளார். அம்லா சக வீரர் டிவில்லியர்சை முந்தினார்.
டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 809 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், மைக்ஹஸ்சி (ஆஸ்திரேலியா) 796 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர். கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 5-வது இடத்திலும் தில்சான் (இலங்கை) 6-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சு தர வரிசையில் புடாப்-10பூ பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி 766 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சகீப் அல்ஹசன் (வங்காள தேசம்) 681 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், சுவான் (இங்கிலாந்து) 669 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர்.
பிராட் (இங்கிலாந்து), குலசேகரா (இலங்கை), பிரைஸ் (ஜிம்பாப்வே), போலிங்கர் (ஆஸ்திரேலியா), மில்ஸ் (நியூசிலாந்து), ஆண்டர்சன் (இங்கிலாந்து) ஜேக்கப் ஒரம் (நியூசிலாந்து), ஆகியோர் 4 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.

