சச்சின் சாதனைகளும் ஓர் தொடர்தான்!

கேப்டவுனில் ஜனவரி 4 அன்று சச்சின் அடித்துள்ள 146 ரன்களின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 51-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஒருநாள் ஆட்டத்தில் 46 சதங்களை விளாசியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 97 சதங்களை எடுத்துள்ளார். சதத்தில் சதம் காண இன்னும் 3 சதங்களே வேண்டும். அதையும் சச்சின் விரைவில் எட்டுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

1990-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை பதிவு செய்ய சச்சின், 20 ஆண்டுகளில் 51 சதம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1994-ல் அவர் முதல் சதமடித்தார்.

டெஸ்ட் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 11 சதங்களும், இலங்கைக்கு எதிராக 9, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக தலா 7, வங்கதேசத்துக்கு எதிராக 5, நியூசிலாந்துக்கு எதிராக 4, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வேக்கு எதிராக தலா 3, பாகிஸ்தானுக்கு எதிராக 2 சதத்தையும் அவர் எடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே அவர் அதிக சதம் கண்டுள்ளார். அந்த அணிக்கு எதிராக 9, இலங்கையுடன் 8, நியூசிலாந்துடன் 7, பாகிஸ்தான், ஜிம்பாப்வேயுடன் தலா 5, தென்னாப்பிரிக்கா, கென்யாவுடன் தலா 4, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 2, இங்கிலாந்து, நமிபியாவுக்கு எதிராக தலா ஒரு சதத்தையும் அவர் எடுத்துள்ளார்.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions