உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து ஆட்டம் டை!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முனாப் வீசிய 3-வது பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஷாசத். கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில் 2 ரன்கள் எடுத்தார் ஸ்வான்.
கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முனாப் சிறப்பாகப் பந்து வீசியதால் ஸ்வானால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்டம் “டை’யில் முடிந்தது.
யுவராஜ் அரை சதம்: முன்னதாக, இந்தியா பேட்டிங்கை தொடங்கியபோது சேவாக் வழக்கம் போல அதிரடியாக விளையாடி 35 ரன்களுடன் வெளியேறினார்.
டெண்டுல்கர் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், ஒரு கட்டத்துக்குப் பின்னர் அதிரடியாக விளையாடினார்.
35-வது ஓவரில் பிரெஸ்னென் வீச்சில் பவுண்டரி விளாசி உலகக் கோப்பைகளில் தனது 5-வது சதத்தைப் பூர்த்தி செய்து வரலாறு படைத்தார் சச்சின். 115 பந்துகளில் 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்த சச்சின் எதிர்பாராதவிதமாக ஆன்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 50 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் சரிவு தொடங்கியது.
ஸ்டிராஸ்- பெல் ஜோடி அசத்தல்: 339 ரன்கள் ஒரு இலக்கே அல்ல என்பது போல இங்கிலாந்து வீரர்கள் தொடங்கினர்.
கேப்டன் ஸ்டிராஸ் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் பதம் பார்த்தார்.
ஸ்டிராஸ், பெல் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 26 ஓவர்களில் 170 ரன்கள் சேர்த்தனர். ஸ்டிராஸ் 145 பந்துகளில் ஒரு சிக்சர், 18 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் விளாசினார்.
இந்த இருவரையும், பால் காலிங்வுட்டையும் ஆட்டமிழக்கச் செய்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார் ஜாகீர் கான்.
அதன் பின்னர் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு மாறி மாறி இருந்தது. ஆனால், கடைசிப் பந்தில் இங்கிலாந்து வீரர்களை இந்திய வீரர்கள் 2 ரன்கள் எடுக்கவிடாததால் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

ஸ்கோர் போர்டு
இந்தியா
சேவாக் (சி) பிரையர் (பி) பிரெஸ்னென் 35 (26)
டெண்டுல்கர் (சி) யார்டி (பி) ஆன்டர்சன் 120 (115)
கம்பீர் (பி) ஸ்வான் 51 (61)
யுவராஜ் (சி) பெல் (பி) யார்டி 58 (50)
தோனி (சி) ரைட் (பி) பிரெஸ்னென் 31 (25)
யூசுப் பதான் (சி) ஸ்வான் (பி) பிரெஸ்னென் 14 (8)
கோலி (பி) பிரெஸ்னென் 8 (5)
ஹர்பஜன் எல்பிடபிள்யூ (பி) பிரெஸ்னென் 0 (1)
ஜாகீர் கான் ரன் அவுட் 4 (5)
பியூஷ் சாவ்லா ரன் அவுட் 2 (4)
முனாப் படேல் நாட் அவுட் 0 (0)
உதிரி 15

மொத்தம் (49.5 ஓவர்களில் அனைத்து
விக்கெட் இழப்புக்கு) 338

விக்கெட் வீழ்ச்சி: 1-46 (சேவாக்), 2-180 (கம்பீர்),
3-236 (சச்சின்), 4-305 (யுவராஜ்), 5-305 (தோனி),
6-327 (பதான்), 7-327 (கோலி), 8-328 (ஹர்பஜன்),
9-338 (சாவ்லா), 10-338 (ஜாகீர்).

பந்துவீச்சு: ஆன்டர்சன் 9.5-0-91-1 ஷாசத் 8-0-53-0
பிரெஸ்னென் 10-1-48-5 ஸ்வான் 9-1-59-1
காலிங்வுட் 3-0-20-0 யார்டி 10-0-64-1

இங்கிலாந்து
ஸ்டிராஸ் எல்பிடபிள்யூ (பி) ஜாகீர் கான் 158 (145)
பீட்டர்சன் (சி) & (பி) முனாப் 31 (22)
டிராட் எல்பிடபிள்யூ (பி) சாவ்லா 16 (19)
பெல் (சி) கோலி (பி) ஜாகீர் கான் 69 (71)
காலிங்வுட் (பி) ஜாகீர் கான் 1 (5)
பிரையர் (சி) ரெய்னா (பி) ஹர்பஜன் 4 (8)
யார்டி (சி) சேவாக் (பி) முனாப் 13 (10)
பிரெஸ்னென் (பி) பியூஷ் சாவ்லா 14 (9)
ஸ்வான் நாட் அவுட் 15 (9)
ஷாசத் நாட் அவுட் 6 (2)
உதிரி 11

மொத்தம் (50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு) 338

விக்கெட் வீழ்ச்சி: 1-68 (பீட்டர்சன்), 2-111 (டிராட்),
3-281 (பெல்), 4-281 (ஸ்டிராஸ்), 5-285 (காலிங்வுட்),
6-289 (பிரையர்), 7-307 (யார்டி), 8-325 (பிரெஸ்னென்).

பந்துவீச்சு
ஜாகீர் கான் 10-0-64-3 முனாப் படேல் 10-0-70-2
சாவ்லா 10-0-71-2 ஹர்பஜன் 10-0-58-1
யுவராஜ் 7-0-46-0 யூசுப் பதான் 3-0-21-0

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions