ஆஷஸ் தொடருடன் காலிங்வுட் ஓய்வு

ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பால் காலிங்வுட் ஓய்வு பெறுகிறார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜனவரி 6 அன்று உறுதி செய்தது.
2003-ல் இலங்கை அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் ஆடிய அவர், மொத்தம் 68 டெஸ்ட் ஆட்டங்களில் 4,259 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 40. டெஸ்ட்டில் 10 சதங்கள் அடித்துள்ளதுடன், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 2 போட்டிகளில் வென்றுள்ளது என்றாலும், இத்தொடரில் கோலிங்வுட் 83 ரன்களே எடுத்துள்ளார்.
இங்கிலாந்து டி20 அணியின் கேப்டனாக உள்ள அவர், அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார். ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததுடன் அதே ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்று பெருமை கோலிங்வுட் மட்டுமே உண்டு.
“இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டியில் சிறப்பான இடத்தில் உள்ளது. இதுவே நான் ஓய்வு பெற சரியான நேரம் என்று கருதுகிறேன். கடைசி தொடர் என்வாழ்நாளில் மறக்கமுடியாததாக அமைத்துவிட்டது” என்றார் காலிங்வுட்.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions