டென்ஷன், வேலைச் சுமை, ஜலதோஷம்… இப்படி தலைவலிக்கான காரணங்கள் எத்தனையோ…
பெண்களைப் பொறுத்தவரை அவர்களது உடலில் உண்டாகிற ஹார்மோன் மாறுதல்களும் தலைவலிக்கான காரணங்களாக இருக்கலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அதன்படி பெண்களின் உடலின் பிரதான ஹார்மோன்களாக புரொஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென்னில் உண்டாகிற ஏற்றத் தாழ்வுகளே தலைவலிக்கான காரணங்கள் என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிற இந்த இரண்டு ஹார்மோன்களும், மூளையில் தலைவலியை உண்டாக்கும் வேதிப் பொருள்களைத் தூண்டக்கூடியவையாம். அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் தலைவலியை உண்டாக்க, அதே ஹார்மோன், அளவைவிடக் குறைந்தாலும், தலைவலி தீவிரமாகுமாம்.
காரணமே இல்லாமல் தலைவலியை உணர்கிற பெண்கள், உடனடியாக ஹார்மோன் அளவுகளை சரிபார்ப்பது உத்தமம்.

