எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட அப்செட் ஆவது, நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் சகஜமாக இருக்க முடியாதது, நெகட்டிவ் சிந்தனை… இந்த எல்லாம் இருப்பவர்களுக்கு இதய நோய் பாதிக்கிற அபாயம் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘டைப் டி’ பர்சனாலிட்டி என அழைக்கப்படுகிற இவர்களுக்கு, மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அதிகம் சுரக்குமாம்.
அதன் விளைவாக அவர்கள் சிகரெட், மது போன்ற பழக்கங்களுக்கும் சீக்கிரமே அடிமையாவார்களாம். இப்படி எல்லாம் சேர்ந்து கொண்டு, ஏற்கனவே ரிஸ்க் உள்ள அவர்களுக்கு இதய நோய் பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றனவாம். பாசிட்டிவ் சிந்தனையே இதயத்தைக் காக்கும் முதல் சிகிச்சை என்றும் வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

