நடந்தால் நலம்பெறும் இதயம்!

Heart பள்ளிக்கூடத்துக்கு பஸ், ஆட்டோ, வேனில் செல்கிற பிள்ளைகளை விட, நடந்து செல்கிறவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகளும், மன அழுத்தம் பாதிக்கிற அபாயமும் குறைவாகவே இருக்கிறதாம். பள்ளிக் குழந்தைகளை இரு பிரிவாகப் பிரித்து லண்டனில் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப் பட்டிருக்கிறது.

ஒரு பிரிவினரை சொகுசாகப் பயணம் செய்யவும், இன்னொரு பிரிவினரை நடந்தும் பள்ளிக்குச் செல்ல வைத்திருக்கிறது. நடந்து சென்ற பிள்ளைகளுக்கு ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும் சீராக இருந்ததையும், மன அழுத்தமே இல்லாததையும், அதே சமயம் சொகுசுப் பயணம் செய்த பிள்ளைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்து, மன அழுத்தம் உச்சத்துக்குப் போனதும் கண்டறியப் பட்டுள்ளது.

பெரியவர்களான பிறகு இதயத்தில் உண்டாகிற அடைப்பு, ரத்தக் குழாய்களில் ஏற்படுகிற பாதிப்பு போன்றவற்றைத் தவிர்க்கவும், சிறு வயதிலேயே நடைப் பழக்கத்தைப் பழக்குவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மேலும் 37% மான இருதய நோய்கள் வருவதற்கு காரணம் உடற்பயிற்சிக்குறைவும், அதற்கும் மேலாக நடையை முற்றுமுழுதாக நிறுத்துவதுமே என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். உங்களுகளுடைய உடலை இருதயம் மற்றும் ஏனைய நோய்களிலிருந்து பாதுகாத்து தரமான ஒரு உடற்கட்டமைப்போடு இருப்பதற்கு 10,000 (ஸ்டெப்ஸ்) அடிகள் ஒவ்வொருநாழும் நடத்தால் உங்கள் உடல் மிகவும் நலம்பொருந்திய பலமன உடலாக இருக்கும் என பிரிடிஸ் கார்ட் பவுண்டேசன் (British Heart Foundation) நிறுவம் அதனது இருதய பாதுகாப்பு தொடர்பான கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

Aambal Magazine – ஆம்பல் சஞ்சிகை © 2013 All Rights Reserved

Privacy PolicyTerms and Conditions